சென்றுவிடலாம். ஆதலால் அவருடைய விருப்பப்படிக்கு நீலாவையும் உடன்கூட்டி யனுப்பு வோம். நீலா! என்ன சொல்லுகிறாய்! எந்த சமயத்திலும் உன் சகோதரியின் சாமார்த்தியத்திற்கு நிகராக நீயும் நடக்கவேண்டும். நீ உன் பிதாவுடன் தனித்துச் சென்ற பிறகு அவருடைய உயிரைக் காப்பாற்றக்கூடியவள் நீதான். தெரியுமா! என்ன சொல்லுகிறாய்?
நீலா - நான் எல்லாவற்றையும் கவனித்தேன் வாஸ்தவம்தான். அப்பா சற்றுமுன் தெரிவித்ததுபோல எந்த சம்பவத்திலும் கடவுளின் மறைந்த நோக்கமும் நன்மையும் இல்லாமலில்லை. அதாவது இங்கு வந்தவர்களை நீங்களும் கவனித்தீர்கள்: நானும் கவனித்தேன். நீங்கள் ஆட்களின் செய்கையை மட்டும் கவனித்தீர்கள். நான் ஆட்களையே கவனித்தேன். அவர்களில் ஒருவன் அதாவது பிறகு ஓடிவந்தவர்களில் ஒருவன் முகம் அசல் அம்மாவின் முகம்போலவே இருக்கின்றது. அவ்வாறு அவனுக்கு நம்முடைய தாயாரின் முகம் இருக்கவேண்டிய காரணம் என்ன என்று யோசித்தேன்! அந்த தடபுடலில் அதை வெளியிடலாகுமா! கூடாதே என்று அஞ்சினேன்; பயந்தேன். அம்மா! நீ எங்களுடைய அண்ணன்மார் இருவரை இழந்துவிட்டதாக அடிக்கடி தெரிவிப்பாயே! அவர்களில் ஒருவனாக அம் மனிதனிருக்கக்கூடுமோ என்று என் மனம் அப்போதிலிருந்து சந்தேகப்படுகின் றது. முதலில் அந்த சந்தேகம் நிவர்த்தியான பிறகு நாம் மற்றைய விஷயங்களை யோசிக்கலாம் என்று எனக்குத் தோன்றுகின்றது" என்றாள்.
--------
இது கேட்ட மூவரும் வியப்புற்று "ஆ அப்படியா! ஐயோ! இந்த தடபுடலில் நாங்கள் அவனைக் கவனிக்கவில்லையே! என் கண்மணி கேசவனோ! அன்றி மருதப்பாவோ! இருவரையும் இனி நான் உயிருடன் காண்பேனா! ஆ! நீலா! நீ இச்செய்தியைக் கூற பயப்படலாமா? இதை அப்போதே எங்களில் யாரிடமாவது சொல்லி இருக்கலாகாதா! இனிமேல் நாம் அவர்களை எங்கு காண்பது? ஐயோ! என் செல்வர்களில் ஒருவனாக விருந்து நான் கண்ணால் கண்டால் உடனே என்னுடைய பிணி நீங்கிவிடுமே! கேசவா! மருதப்ப!" என்று கோமதி புலம்பவாரம்பித்தாள்.
பாலா - அம்மா! நீலா என்னை விடப் புத்திசாலி என்பதை இப்போதே நிதர்சனமாகக் காட்டிவிட்டாள். வந்தவர்களை நான் கவனியாது விட்டுவிட்டேன். இப்போதும் மிஞ்சி விடவில்லை. நான் எந்த விதத்திலாவது அவர்களைக் கண்டுபிடித்து அந்த மனிதனை உன்