அணைத்துக்கொள் கிறேன்" என்று பறந்தாள். நீலாவும், பாலாவும், " அம்மா! பொருள் நம்முடையது என்று தெரிந்துவிட்டது. இனிமேல் நம்மிடம் சேர்ந்துவிடும் சமயம் கிட்டிவிட்டது. இந்தக் கதையோ நமது சொந்த கதையாக இருக்கிறது. இதை எழுதியவனோ யாரோ சுப்பிரமணியனாம். அவனுக்கு நம்முடைய உளவுகள் எப்படித் தெரிந்தன. எந்த மட்டில் தெரிந்திருக்கிறது என்று இன்னும் சற்று நேரம் கவனிப்போம் இரு. இப்போது இடையில் கலைத்துவிட்டால் அவர்களுக்கும் கலைந்துவிடும். ஒருகால் படத்தில் நாமும் விழுந்து விடுவோம். ஆகையினால் நீ பேசாமலிரு" என்று அடக்கினார்கள்.
---------
பிறகு நாடகத்தில் விடுதலையான பையன் வெளியே வந்ததும் நேரே தன் வீட்டிற்குப் போகும்படியாகச் சொல்லியனுப்புகிறார்கள். பையன் வீட்டிற்குச் செல்லாது வேறு எங்கேயோ சுற்றி அலைகின்றான், சில சோதாக்களுடன் சேர்ந்து தத்தாரியாகத் திரிகின்றான். அவர்களோடு வேறு ஒரு வீட்டில் திருடுகிறான். அந்த பணத்தைக் கொண்டு துன்மார்க்கமான பல வழிகளிலும் செலவிடுகிறான். அவன் தன்னுடைய சோதாக்களுடன் பின்னும் ஒரு வீட்டில் திருடி தண்டனை யடைகிறான். அதிலிருந்து மீட்சி யடைந்த பிறகு, ஒரு குழந்தை நிறைய நகைகளோடு ஒரு கோயிலுக்குச் சென்று வழி தப்பிவிடுகிறது. அது அழுதுகொண்டே இருக்கையில் அக் குழந்தையைப் பார்த்த இவன் அதைத் தூக்கிக் கொண்டு ஓரிடத்திற்கு வந்து நகைகளை எல்லாம் கழட்டிக்கொண்டு குழந்தையைக் கிணற்றில் தள்ளப்போகிறான்.
அச் சமயம் அவனை யறியாத ஓர் விதமான உணர்ச்சி உண்டா கின்றது. "ஆ! இக் குழந்தை என் சகே தரி பாலாவின் சாயலாகவன்றோ இருக்கின்றது. குழந்தையைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வதற்கா நம் மனந்துணிந்து விட்டது. ஐயோ! திருட் டுப் புத்தியிலிருந்து கொலைக்குமா வந்து விட்டோம். குழந்தை பரிதாபமாக அழுவதைக் கண்டும் இரங்காமல் அதன் நகைகளைக் கழட்டினோம். குழந்தையைக் கிணற்றில் தள்ளப் போகிறோமா! சீச்சீ1 கொலை செய்ய வேண்டாம். அதிலும் பால் மணம் மாறாத குழந்தையைக் கொலை செய்ய வேண்டாம். குழந்தையோ கிருஷ்ண விக்ரகம் போன்ற ஆண் குழந்தையாக விருக்கிறது. ஐயோ! என் தாயார் எனக்குப் பல விதமான புத்திகளைக் கூறி எத்தனை விதத்தில் என்னைத் திருத்த முயன்றும் என் திருட்டு மதி என்னைக் கடைசி வரையில் விடாது பாழாக்கி விட்டதே! ஒருவித பாபமும் செய்யாத, உலகமே அறியாத ந்த பச்சைக் குழந்தையைக் கொலை செய்வதால் அதன் பெற்றோரின் வயிறு எவ்விதம் துடிக்கும்? அதன் ஆத்மா எவ்விதம்