(Reading time: 36 - 71 minutes)
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal
Parimala Kesavan - Vai.Mu.Kothainayagi Ammal

பிறகு பாலா பெரு நகை புரிந்தவாறு "அம்மா! உலகம் எவ் விதமிருக்கின்றது பார்த்தாயா! உண்மையில் போலீஸ்காரர்கள் தான் வந்துவிட்டதாக எண்ணி அப்பாவுக்கு இத்தகைய மொட்டச்சி வேஷங்கள் போட்டு நாமும் நடித்தோமே! இவ்விதம் திடீரென்று வந்து தடபுடல் செய்தால் என்ன நினைப்பது?" என்றாள்.

   

கங்காதரன்.--கண்மணி! பாலா! எனக்கு ஓர் தோன்றுகின்றது. எந்தவிதமான சம்பவத்தை உண்டாக்கியபோதி லும் கடவுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நன்மையை வைத்திருப்பார் என்பது பெரியாரின் வாக்கு; இன்று இந்த அதிசயமான சம்பவத்திலும் ஒருவிதமான நன்மை நமக்கு ஏற்படக்கூடுமென்று நான் நினைக்கின்றேன்! என் மனத்தில் கடவுள் அத்தகைய எண்ணத்தை உண்டாக்குகின்றார். அம்மனிதன் கேட்டதுபோல நாம் பிரியப்பட் டவர்கள் இந்தப் படக்காக்ஷியில் நடிக்கலாமல்லவா! என்னை என்னவோ ஒரு பெருங் குற்றம் சூழ்ந்துகொண்டிருக்கின்றது. நான் எந்த விடத்திலிருப்பினும் அவ்வாபத்து துடர்ந்து வந்தாலும் வரலாம். அவ்வாறு வந்தால் தப்புவதற்கு முடியாது, நான் இக்கம் பெனியில் சேர்ந்து அவர்களுடனேயே சுற்றிக்கொண்டிருக்கலாமா என்று தோன்றுகின்றது. ஏனெனில் படம் பிடிப்பவர்கள் ஒரே இடத்தில் எடுக்கமாட்டார்கள். பல இடங்கள் சுற்றுவார்கள். அவர்களோடு நான் சென்று சேர்ந்துவிடுகிறேன். அதோடு என்னைப் பார்த்தால் சாதாரணமாக அடையாளம் தெரியாது. நான் என்னோடு நீலாவையும் அழைத்துக் கொண்டு அப்படக் காட்சியில் சேர்ந்து நடிக்கிறேன். அவளோ சிறுமி. என்னை யப்படி கண்டு பிடித்துக் கேட்டால் நான் நீலாவுடன் தப்பித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகின்றது. ஆதலால் என்ன சொல்கிறீர்கள்?

   

-------

பாலா - இதென்ன திடீரென்று ஏதோ பெரிய யோசனை செய்துவிட்டீர்களே! நீங்கள் குற்றவாளி என்ற பயத்துடனிருப்பவர்கள் ஒளிந்து மறைவிடத்தில் இருப்பின் நலமா! அன்றி பகிரங்கமாகப் படக்காட்சியில் சேருவது நலமா என்பதை யோசித்துப் பாருங்கள். நான் இது விஷயமாக உடனே பதில் கூறமுடியாது. சற்று நிதானித்து யோசித்துச் சொல்கிறேன்.

   

கோமதி;- பாலா! அப்பா சொல்வது எனக்கும் சரி என் தோன்றுகின்றது. ஏனெனில் அவர் எந்தவிதமாவது தப்பித்துக் கொள்ளும் வழியைச் செய்யவேண்டுவது நமது கடமையாகும். அவர் யாரோ சினிமாவில் நடிப்பவர் என்ற நிலைமையில் இந்த தீவை விட்டுக் கடந்து விட்டால் பிறகு நாமும் எந்தவித மார்க்கத்தைச் செய்தேனும் நமது தாய் நாட்டிற்குச் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.