சென்றால் உடனே அவர்கள் வெறுப்பும் பயமும் கொண்டு அவனைத் துரத்துவதிலேயே நாட்ட மாகித் துரத்தியும் விடுகிறார்கள்.
--------
இவ்விதமே சில தினங்கள் அலைந்தும் பலன் கிடைக்காமையியினால் புலம்பிக் கொண்டே வெகு தூரம் போய்விட்டான். நடக்கும் இடம் தெரியாமல் அலைந்து திரிந்து "அம்மா! அம்மா!" என்று அலற்றிக் கொண்டே போகிறான். காலையிலும் மாலையிலும் கிராமத் தில் சிறு பிள்ளைகள் கோலி முதலிய ஆட்டங்கள் ஆடிக்கொண்டு திரிவதைக் கண்டதும் இவனுடைய பாலியப் பருவத்து நினைவு வந்து விடுகின்றது. அந்த பிள்ளைகள் விளையாடும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நல்ல புத்திகளைப் புகட்டி தனது சகல விதமான அனுபவங்களையும் எடுத்துக் கூறி அவர்களை வீணாக விளையாடாமல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலாவது படிக்கும் படிக்குச் சொல்லுகிறான். தானும் ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்க எண்ணங்கொண்டு சேர்ந்து படிக்கிறான். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளை எல்லாம் கூட்டிக் கொண்டு இவன் தினந்தோறும் அங்கிருக்கும் ஒரு பிள்ளையார் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரின் எதிரில் நின்று,
விக்கினம் தீர்த்திட வா வா வா!
ஆனைமுகனே வா வா வா!
ஷண்முகப் பிராதா வா வா வா!
விகாயக மூர்த்தியே வா வா வா!
அம்பிகை பாலா வா வா வா!
சக்தி கணபதி வா வா வா!
என்று பாடலாக வினாயகர் பேரில் சொல்லிக் கொடுப்பதும், பிறகு "திருடக் கூடாது; பெரியாரை உதாசீனம் செய்யலாகாது. தாயின் வாக்கின்படி நடக்க வேண்டும். வீண் பொழுது