மறவாது துதித்தாலன்றோ நமக்குத் தாயின் சேவை கிடைக்கும்! இல்லையேல் தாயை எங்ஙனம் அடையக் கூடும். மாதவா! கேசவா! மது சூதனா!
(தன்யாசி ராகம். ஆதி தாளம்)
1. காரிருள் சூழ்ந்தாலும், கடலொன்று சேர்ந்தாலும்,
காருண்ய மூர்த்தியின் கழல் மறவேன்.
பாரெங்கும் புரண்டாலும், வாரிதி வரண்டாலும்,
தாரக நாமனின் தாள் மறவேன்.
2அஞ்சன வண்ணனின் கஞ்ச மலாடியில்
நெஞ்சம் பதித்திடும் நேர் மறவேன்.
கஞ்சனை வென்று, சஞ்சலம் போக்கியே
கண்ணன் அடி மறவேன்.
கருணாகரா! கக வாகனா!" என்று திண்ணைப் பள்ளிகூடத்து வாத்தியார் கற்றுக் கொடுத்த பாடல்களைப் பாடித் துதிக்கின்றான், இரவு பூராவும் தத்தளித்தான்; அவனைத் தாங்காமல் தூக்கம் சுழற்றுகின்றது. விடியற் காலம் வந்து விட்டது. கீழே இறங்கி ஒரு மாத்தடியில் "எதுவரினும் நீயே துணை" என்று நம்பிப் படுத்து விடுகிறான். நன்றாக அயர்ந்து தூங்கி விடுகிறான். பொழுது விடிந்ததே தெரிய வில்லை.
பிறகு கண் விழித்துப் பார்க்கிறான். ஒரு டேராவின் உள்ளே படுத்திருப்பதாகத் தெரிந்து சுற்று முற்றும் பார்க்கிறான். நல்ல நாகரிகமான சிலர் இவன் முன்பு இருக்கக்கண்டு வியப்புற்று "ஐயா! நீங்கள் யார்! என்னை யார் இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது? எனக்கு விவரங் கூற வேண்டும்" என்றான். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். இதுகேட்ட அவர்கள் "ஐயா! உடம்பு