(Reading time: 20 - 40 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

   

பாவவுலகினில் வாழல்பெருமிடர் போதுமடி யிணைதருவாயே.

   

"மானமழிந்த பின் வாழாமை முன்னினிதே!” என்று சொன்னவர் அதிமேதாவியென்பது இப்பொழுதே பரிஷ்காரம் ஆயிற்று. ஸோமேசன் தன்னுடைய மனோ வேதனையில் ஏதாவது அக்கிரமமான காரியத்தைச் செய்துவிடப் போகிறானோ என்று என் மனம் கவலைப்படுகிறது! ஸோமேசா! ஸோமேசா! அங்கு என்ன செய்கிறாய்? (ஸோமேசன் வருகிறான்.)

   

ஸோமே : ஸ்வாமி! களவு போன நகைகளுக்குப் பதில் நகை செய்கிறேன்.

   

மாத : என்னுடைய மூடத்தனத்திற்காக நகை செய்கிறாயோ? அல்லது என் விதியை நினைத்து நகை செய்கிறாயோ?

   

ஸோமே : நம்மை அவமானப்படுத்த எண்ணும் விதியைப் பார்த்து இந்த வைர ஸரம் நகை செய்கிறதைப் பாருங்கள்.

   

மாத : (திடுக்கிட்டு) ஸோமேசா இதென்ன இது? என்ன காரியம் செய்தாய்? எங்கிருந்து இந்த நகையை அபகரித்துக் கொண்டு வந்தாய்?

   

ஸோமே : நான் எங்கிருந்தும் அபகரிக்கவில்லை. புருஷனுடைய யோக்கியதைக்குத் தகுந்த உத்தம குண மனைவியர் செய்யக் கூடிய காரியமே இது! காணாமற் போன நகைகளுக்குப் பதிலாய் இதை அனுப்பும்படி தங்கள் பிராண பத்தினி இதை அனுப்பினார்கள். தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள்.

   

மாத : ஆகா!

   

விருத்தம்: காம்போதி

   

வறுமையிற் சிறிதுமாறா அன்பினையுடைய பெண்டீர்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.