(Reading time: 20 - 40 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

ஸோமே : இதென்ன ஆச்சரியம்! நீங்கள் தான் பரிஹாஸம் செய்கிறீர்கள்! வீணில் என்னோடு வாக்குவாதம் செய்யாமல் நகை மூட்டை இருக்கிறதா என்று முதலிற் பாருங்கள்.

   

மாத : நீ என்னிடத்தில் எப்பொழுது கொடுத்தாய்?

   

ஸோமே : உங்கள் கை குளிர்ச்சியாய் இருக்கிறதென்று சொல்லிக் கொண்டே சற்று முன்பாகக் கொடுத்தேனே!

   

மாத : (தனக்குள்) ஓகோ! அப்படித்தான் இருக்க வேண் டும் (நான்கு பக்கங்களையும் சுற்றிப் பார்த்து) மித்திரா! உன்னுடைய உபகாரத்தை நான் மறக்கவே மாட்டேன்.

   

ஸோமே : ஆபத்து சமயம் என்பதை அறிந்து மூட்டையை உங்களிடத்தில் கொடுத்தேன். இது ஒரு உபகாரமா?

   

மாத : நீ செய்தது உபகாரமல்ல. ”தரித்திரன் வீட்டிற்குள் நுழைந்தேனே, ஒன்றும் அகப்படவில்லையே” என்று திருடன் என்னைத் துஷிக்காமல் இருக்கச் செய்தாயே! அதுதான் உதவி! (யோசனை செய்கிறார்)

   

ஸோமே : என்ன ஆச்சரியம்? மூட்டை திருட்டா போய் விட்டது! எப்படிப் போயிற்று? நம்மை நம்பி அவள் நம்மிடத்தில் ஒப்புவித்தாளே!

   

மாத : (பெரிதும் விசனத்துடன்) ஆஹா! நம்பிக்கை மோசம் செய்து விட்டேனே! அவள் வந்து கேட்டால் என்ன சொல்வேன்? ஈவரா! (மூர்ச்சிக்கிறார்)

   

ஸோமே : ஸ்வாமி! வருத்தப்பட வேண்டாம். நகைகளைத் திருடன் கொண்டுபோய்விட்டால் அதற்கு நாமென்ன செய்கிறது? இதைப் பற்றி நீங்கள் இவ்வளவு விசனப்படுவானேன்?

   

மாத : அடே மித்திரா! திருட்டுப் போய் விட்டதென்று சொன்னால் என்னை யார் நம்புவார்கள்! எனக்கு என்னமோ பெருத்த துன்பம் சம்பவிக்கப் போகிறது! தரித்திரனிடத்தில் சந்தேகம் உதிப்பதே இந்த உலக இயற்கை. இதுவரையில் நான் ஏழ்மைத் தன்மையினால் வருந்தி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.