(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

உத்தியோகத்தைச் செய்வேன் என்று நான் பிறந்த பொழுதே எப்படி அறிந்து கொண்டார் களோ தெரியவில்லை. என்னுடைய காரியம் சோம்பலே நிறைந்த இரவை அவமானப்படுத்தி, நித்திரா தேவியைத் தோற்கடித்து, ஏமாந்த காவலை ஏளனம் செய்கிறதல்லவா! ஆனால் நான் ஒருவருக்கும் தெரியாமல் எவ்வளவோ சாமர்த்தியமாய் இந்தக் காரியத்தை முடித்த போதிலும், என் செய்கைகளை எல்லாம் பார்த்த வண்ணம், என்னுடன் தொடர்ந்தும் நடந்தும் ஓடியும் வருபவ னும், எல்லாத் திருட்டையும் தன் கண்ணால் காண்பவனும், எவராலும் ஏமாற்ற முடியாத அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தனான கடவுளை நினைக்க, என் அச்சம் அதிகரிக்கிறது. என் மனதே இது குற்றம் இதுகுற்றமென்று நீதி போதனை செய்த வண்ணம் இருக்கிறது, என்ன செய்வேன்? என் மனதில் முற்றிலும் குடி கொண்ட அந்த யெளவன மங்கையின் பொருட்டல்லவோ நான் இப்படி இரவைப் பகலாக்கி, எவ்வளவோ தந்திரம் செய்ய வேண்டியிருக்கிறது. இதுதான் வஸந்தஸேனையின் மாளிகை. மல்லிகா எங்கிருப்பாளோ தெரியவில்லையே!

   

தன்யாசி-ரூபகம்

   

ப: எவ்விடங் காண்பேனோ? என் ரதியை எத்தினமடைவேனோ?

   

அ. செவ்விய மேனியள், ஜெகத்திலிணையே இல்லாள்

   

ஒவ்வொரு நொடிவளர் சுந்தரவல்லியை (எவ்)

   

ச. 1 நொடியுக மானது; நோயெனைத் தீய்த்தது;

   

வடிவழகியை யடை நற்றினம் வருமோ? (எவ்)

   

2 இப்பெரு நிதியினுக் கிந்திர லோகமும்

   

ஒப்புயர் வாகுமோ? உரைத்திடப் பெறுமோ? (எவ்)

   

(கையில் ஒரு விசிறியுடன் மல்லிகர வருகிறாள்)

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.