Page 6 of 21
அபகரித்துக் கொண்டு வந்தேன்.
மல்லி : (வள்ளி சரித்திரம்: ”நெஞ்சையடைக்குதே நான் என்ன செய்குவேன் - நஞ்சை கொடுத்தாயோடி” என்ற பாட்டின் மெட்டு.)
அடானா - சாப்பு
நல்ல வினை செய்தீர்! ஐயா! இனி இங்கு நில்லாமல் ஏகுவீர்.
தீயவர் செய்திடும் காரியமல்லாவோ போம் போம் நீர்.
சசி :
என்ன மொழி சொன்னாய்? எங்ஙனஞ் செய்குவேன்!
கன்னியர் மாமணியே
நின்னையடைத்திட இவ்வினை செய்தேன்
சொன்னது நீதி யன்றே?
மல் :
எந்தப் பிறப்பினு மேலென வோதிடும்
அந்தணர் செய்வினையோ?
இந்தக் குணமுடையாரை விரும்பிடேன்
வந்தவழி இதுவே