(Reading time: 22 - 44 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

உதித்த நான் இதைச் செய்தேன். அடிமை நிலையில் இருந்து உன்னை விலக்கி, ஆயுட் காலம் எல்லாம் சுதந்திரத்தையும், என் மனப் பூர்வமான பிரியத்தையும் உனக்குக் கொடுத்ததற்கு, என்னை நீ ஏளனம் செய்வதும், வேறொருவனைப் பற்றி நீ கவலைப் படுவதும் பதில் உபகாரமோ? புஷ்பிக்கும் பாலிய காலமாகிய உன்னத மரமானது வீணிற் பழங்களைச் சுமந்து, வேசைகளாகிய பறவைகளுக்கு அல்லவோ அவற்றை இரை ஆக்குகின்றது! செல்வமும் புருஷத்வமும் இன்னம் நாம் விசேஷமாய் மதிப்பன யாவும், அடக்க முடியாத காமாக்கியினால் நாசம் அடை கின்றன. ஆகா! எப்பொழுதும் சலனப்படும் குணமுடைய ஸ்திரீகளிடத்திலும், எப்பொழுதும் மாறும் நமது அதிர்ஷ்டத்திலும் நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் எவ்வளவு மடையர்கள்! ஏழைகளை ஸ்திரீகளும் அலட்சியம் செய்வதாய் இருந்தால், அவர்கள் பேரில் பிரியம் வைப்பதை விட நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் நாயின் பேரில் அந்த அன்பை வைத்தால், அது எவ்வளவோ நன்றியுடையதாய் இருக்கும்! முதலில் அவர்களே நம் மீதில் ஆசையைக் காட்டினால், அவர்கள் அவ்விதம் இருக்கும் வரையில் நாமும் பிரியத்தைக் காட்டிப் பிறகு பேசாமல் விட்டு விடுவது நல்ல காரியம்! ஸ்திரீகள் பணத்தின் பொருட்டு, நினைத்தால் அழுவார்கள்; நினைத்தால் சிரிப்பார்கள்; தம்மால் விரும்பப்படாதவனாய் இருந்தாலும், இவர்கள் தமது பாசாங்கினால், அவனுடைய நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்வார்கள். ஆகையால், நற்குலத்தில் உதித்த யோக்கியதை உடைய யெளவன புருஷர், ஸ்மசானத்தில் உண்டாகும் புஷ்பங்களைப் போல ஏராளமாகக் காணப்படும் பரத்தையரின் வலையிற் படாமல் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். சமுத்திரத்தின் அலைகள் கூட ஸ்திரீகளின் பிரியத்தைக் காட்டிலும் சிறிது நேரம் நிலைத்தவையாய் இருக்கும். மாலை நேரத்தில் வானத்தில் உண்டாகி மாறும் நிறங்கள் கூடச் சற்று உறுதியானவை என்று நினைக்கலாம். பணமே அவர்களுடைய நோக்கம்; பணமே அவர்களுடைய ஆகாரம், பானம், இன்பம் முதலியன. ஆனால் ஒருவனுடைய செல்வம் ஒழிந்து போய்விட்டால், அவனை உடனே ஓட்டி விட வேண்டியதே காரியம்! அதுவே அவர்களுடைய குல தருமம். மின்னலின் ஒளி தோன்றி மறைதலைப் போன்றது அவர்களுடைய மோகம். மனதில் ஒருவன்மீது ஆசையை வைத்துக் கொண்டு, வேறொருவனிடத்தில், தான் அவனுக்கே தன்னை அர்ப்பணம் செய்து விட்டதாய்ப் பாசாங்கு செய்வார்கள். ஒருவனை ஆசையுடன் ஆலிங்கனம் செய்து கொண்டிருக்கையில் வேறொருவனை நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள். தானாகக் கனியாததைத் தடியால் அடித்தால் கனியப் போகிறதா? இயற்கையிலேயே இல்லாததை விரும்பினால் அது எப்படிக் கிடைக்கும்? கற்பாறையின் மீது தாமரைப் புஷ்பம் எப்படி உண்டாகும்? அல்லது குதிரையின் பாரத்தைக் கழுதை சுமக்குமோ? வரகு தானியத்திற்குள் அரிசி எப்படி உண்டாகும்? ஸ்திரீகளின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.