Page 21 of 21
தேகத்தில் மாத்திரம் அழகைப் பெற்று, அதை ஆபரணங்களினாலும், உடைகளினாலும், பரிமள கந்தங்களினாலும் அலங்கரித்துக் கொண்டு, செல்வச் செருக்கை அடைந்து இறுமாந்திருக்கும் போலிப் பிரபுக்கள், குணத்தழகைப் பெற்ற இந்த வள்ளலின் பாத தூசிக்கும் ஒப்பாவரோ! புருஷனை அடைவதாய் இருந்தால் இவரையே அடைதல் வேண்டும். இல்லா விட்டால் இந்தத் தேகத்தை அக்கினிக்கு இரையாக்க வேண்டும். இருக்கட்டும்; இன்று சாயங்காலம் போய் முயன்று பார்க்கிறேன்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...