சசி : (வஸந்தஸேனைக்கு) ஸ்திரீ ரத்னமே! உனக்கு ஈசுவரன் சகல மங்களமும் அளிக்கட்டும். அடி மல்லிகா! உனக்கு சுதந்திரமும், மனைவி என்னும் மேன்மை நிலைமையும் அளித்த பேருபகாரியாகிய உன் எஜமானியை நன்றி பெருக வணங்கி விடை பெற்றுக் கொள்.
வஸ : பிரிய மல்லிகா! சுகமாய்ப் போ!
(”ஷாஜமான்” என்ற இந்துஸ்தானியின் மெட்டு)
மல்லி : பெண்மணீ! சென்று வருவேன் தல்லியே!
வஸ : கண்மணீ! சென்று-வருவாய் மல்லிகா!
மல்லி : காணக் கிடைக்காத வென்றன் - மானே!
நற்றேனே! என்னன்பே - என்னாவியே!
வஸ : ஆசைக்குகந்த வென்றன்மாதே! நற்கோதே!
கவலாதே! மறவாதே!
மல்லி : சுந்தராங்கி! நின்னையினி - மறவேன்.
வஸ : சொன்னமே! நின் நன்மையினி - மறவேன்.
(மல்லிகா விசனத்துடன் வணங்கச் சசிமுகன் அவளை அழைத்துக் கொண்டு மாளிகையை விட்டு வெளியில் வரு கிறான். அந்த சமயத்தில் இராஜபாட்டையில் ஒருவன் அடியில் வருமாறு பறை சாற்றுகிறான்.)
”துடும், துடும், துடும், துடும்,