பிழை செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும். (காலில் விழுந்து வணங்குகிறாள்)
மல்லி : (நந்தன் சரித்திரம்: ”வருகலாமோ” என்ற பாட்டின் வர்ண மெட்டு)
மாஞ்சி - ரூபகம்
ப. தருமமாமோ? அம்மா - இந்தச்
சிறுமியின் மீதுமக் கேனிந்தக் கோபமோ?
அ. இருவருமோருயி ரென்னவே - என்று
மிருந்ததையாயினு மெண்ணவே - உந்த
மிருடா தங்கள் யான் பணிந்தெத்தினேன் தேவியே! (தரு)
ச. தாயென உம்மையான் - அடைந்தேனே - நொடி
தப்பாம லருகினில் இருந்தேனே.
நாயென நன் றியைச் - சுரந்தேனே - என்றன்
ஆவியே யுமதென - மதித்தேனே - என்ன
விதியோ! யென்றன்தீ மையிதாகுமோ? ஞாயமோ? (தரு)
வஸ : அப்படி ஒன்றுமில்லை எழுந்திரு மல்லிகா! மனப் பூர்வமான உன்னை இவருக்குக் கொடுக்க வேண்டுமென்னும் ஆசையினாலேயே இப்படிச் சொல்லுகிறேனே யொழிய வேறு வித்தியாசமில்லை. (அன்பொழுக) எழுந்திரம்மா! இவருடன் போய் ஸெளக்கியமாக வாழ்ந்து கொண்டிரு. என்னை மாத்திரம் உன் ஞாபகத்தில் வைத்துக் கொள்.