அக்கிரமக் காரியம் செய்து பணம் சம்பாதித்தேன். அதைப் பற்றி உனக்கு என்ன கவலை?
வஸ : இவன் பார்வைக்கு நல்ல மனிதனாய் இருக்கிறானே! என்ன அக்கிரமக் காரியம் செய்திருப்பான்?
மல்லி : விருத்தம்: சஹானா
ஐயனே! நன்றே சொன்னீ ரறிவினர்க் குரிய தாமோ?
மெய்யென நாடி யற்ப வின்பநீர் விரும்பி முற்றும்
பொய்யனாய்க் குலத்தின் மேன்மை புகலருங்கலையின் ஞானம்
வெய்யனாய் விலக்கித் தீய வியற்றிடல் தகுதியாகுமோ?
ஒரு க்ஷணத்தில் ஒழியும் அற்ப சுகத்தை உத்தேசித்து நீர் அருமையான இரண்டு பொருட்களுக்கு ஆபத்தைத் தேடிக் கொண்டிரே!
சசி : இரண்டு பொருள்கள் எவை?
மல்லி : உம்முடைய தேகம் ஒன்று. பெயர் ஒன்று.
சசி : நீ பெரிய முட்டாள். இந்த காலத்தில் துணிந்து செய்பவருக்குத்தான் அதிர்ஷ்டம் உண்டாகிறது! அது உனக்கென்ன தெரியும்?
மல்லி : (ஏளனமாய்) நீர் செய்தது கொஞ்சமும் குற்றம் இல்லாத காரியம்! என்பேரில் உமக்கு இருக்கும் காதலினால் நீர் இந்த அக்கிரமம் செய்தீர். ஆகையால் இது அக்கிரமமாகாது; மிகவும் நீதியான விஷயம்!
சசி : அடி தங்கமே! கோபித்துக் கொள்ளாதே! இந்த நகைகளை நான் ஒரு வீட்டில் இருந்து