(Reading time: 19 - 38 minutes)
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar
Vasantha Kokilam - Vaduvoor K Duraisamy Iyengar

அற்ப குணத்தைக் கொண்ட தாஸியிடத்தில் உங்களுக்கு இவ்வளவு சபலம் உண்டானது மிகவும் தவறு. தவிர நான் போயிருந்த போது அவளும் அவளுடைய பணிப் பெண்களும் என்னை எவ்வளவு ஏளனம் செய்தார்கள் தெரியுமா? தாஸியின் உறவானது காலில் தைத்த முள்ளைப் போன்றது. முதலில் நுழைவதே தெரியாது. அதைப் பிறகு நாம் எவ்வளவு வருந்திப் பிடிங்கி எடுத்தல் வேண்டும் என்பதை நான் தெரிவிக்க வேண்டியதில்லை. தாஸி நுழைந்த வீடும், சனியன் நுழைந்த வீடும் ஒழியா விஸனத்தை அடை யும். ஆகையால், அவளை நீங்கள் பார்ப்பதும் அவளுடன் சம்பாஷிப்பதும் பிறகு துயரைத் தரும். ஆகையால் அவளைப் பார்க்க இப்பொழுது சந்தர்ப்பமில்லையென்று சொல்லியனுப்பி விடுங்கள்.

   

மாத : விருத்தம்: பைரவி

   

நண்பனே ஏனோ வந்த நங்கையை நினைத்த வாறு

   

புண்படு மொழியாலேசிப் புகன்றனை நவைகள் சால?

   

எண்படு தனத்தி னோர்க்கே விலைமகள் கூற்ற மாவள்

   

திண்கொடு மிடியர் தம்மைத் தெரிவையர் நினைத்தலுண்டோ?

   

சே! அவளை அக்கிரமமாகத் துஷிக்காதே; இதனால் எனக்கு யாதொரு துன்பமும் வராமல் இருப்பதற்கு என்னுடைய ஏழ்மைத் தனமே ஒரு பாதுகாப்பல்லவா? பணத்தாசை உள்ள தாஸி ஏழையை ஏன் விரும்புவாள்? தவிர கற்பிற்கு அரசியாகிய என் மனைவி கோகிலத்திற்கு நான் துரோகம் செய்ய நினைப்பேனோ! என்னுடன் நீ இவ்வளவு காலம் பழகியும் என் மனோ உறுதியையும், நான் எவ்வித நடத்தை உடையவன் என்பதை யும், அறிந்து கொள்ளவில்லையே! அவள் ஏதோ நம் மீதுள்ள அன்பினால் நம்மைக் காண விரும்புகிறாள். நாம் அதைத் தடுப்பது தருமமாமோ? அவள் எதற்காக வருகிறாளோ! அதைப் பற்றி நாம் இப்பொழுது எவ்விதம் ஊகிக்க முடியும்?

   

ஸோமே : அவள் வைர ஸரத்தைப் பெற்றதோடு திருப்தி அடைந்ததாய்க் காணப்படவில்லை. மேலும் ஏதாவது அபகரிக்கலாம் என்னும் எண்ணத்துடன் வருவதாகத் தோன்றுகிறது! நான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.