Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
குறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை - 5.0 out of 5 based on 1 vote
Pin It

குறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை

police

கோயம்புத்தூர் ரயில் நிலையம் , அந்த மதிய வேளையிலும் , படு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது . சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய ரயில்வே கடிகாரத்தில், மணி 3.20 -ஐ தொட்டிருக்கும் . மதியம் 3.30 மணிக்கு வர வேண்டிய மங்களூர் எக்ஸ்பிரஸ் வண்டியை எதிர்பார்த்து , மிகப்பெரிய கூட்டம் நடைமேடையில் அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது .

திடீரென்று அங்கிருந்த ஒலிபெருக்கியிலிருந்து , பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் , அழுத்தமான தமிழில் ஒலித்தது .

டின் ! டின் ! டின் ! ........ பயணிகளின் கனிவான கவனத்திற்கு, மங்களூரிலிருந்து , சென்னை வரை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் , தடம் 2-ல் , இன்னும் சற்று நேரத்தில் , வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

பயணிகள் தங்கள் உடமைகளை சரிபார்த்துக் கொண்டு தயாராயிருந்தார்கள் . அடுத்த சில நிமிடங்களில் , மங்களூர் எக்ஸ்பிரஸ் தண்டவாளம் -2 இல், மெல்ல, தலை காட்டியிருந்தது .பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களின் பட்டியலை ரயில் பெட்டிகளில் , வேக வேகமாக ஒட்டிக்கொண்டிருந்தார்கள் ரயில்வே ஊழியர்கள் . S-7 பெட்டியில் , பயணம் செய்பவர்களின்பட்டியலில் ,

சீட் நம்பர் 27 , பெயர் : ரவிவயது : 35 என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் , தன் தோளில் மாட்டியிருந்த பையுடன்ரயில் பெட்டியின் உள்ளே பிரவேசித்தார் இன்ஸ்பெக்டர் ரவி . நல்ல உயரம் . காவல்துறைக்கே உரிய கட்டுக்கோப்பான உடம்பு . அசட்டு தைரியம் , இவை அனைத்துமே அவரை போலீஸ் என்று அப்பட்டமாக காட்டிக்கொடுத்திருந்தது.

ஜன்னல் ஓரத்தில் , படுக்கை வசதியுடன் கூடிய சீட் அவருக்கு தயாராயிருந்தது . சமீபத்தில் , அவர் விசாரணை நடத்திய வழக்கில், ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்களால் , அரியலூர் மாவட்டம் தூத்தூர் காவல் நிலையத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் . அதன் தாக்கத்தை அவர் முகத்தில் தெளிவாக உணர முடிந்திருந்தது . ரயில் மெல்ல புறப்பட தொடங்கியிருந்தது . சற்றே படுக்க முற்பட்ட அவரின் செல்போன் அலறியது . உடனே எடுத்து பார்த்தார் .

அவருடைய நண்பர் கணேஷ் . (தினச்செய்தி பத்திரிகையின் ஆசிரியர் ) லைனில் இருந்தார் .

கணேஷ் : ஹலோ ! ரவி ! என்ன ரயில் கெளம்பிடுச்சா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! இப்பதாண்டா கெளம்பிருக்கு . ஆமாம் நான் கேட்ட DETAILS என்னாச்சு ?

கணேஷ் : ஹ்ம்ம் ! எல்லா DETAILSயும் COLLECT பண்ணிட்டேன் !

நாளைக்கு நீ டூட்டில JOIN பண்ற தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , சரியா 1௦ கிலோமீட்டர் தூரத்துல தான் , அந்த மாத்தூர் கிராமம் இருக்கு . போன மாசம் 6 ஆம் தேதி தான் , வேளாண் ஆசிரியர் குமாரசாமிங்கற பெருசு அங்க செத்துப் போயிருக்காரு அவர் சாதாரணமா சாகல . பேயடிச்சு செத்துப்போயிட்டதா அந்த கிராம மக்கள் சொல்றாங்க . அந்த ஊர்ல பேய் நடமாட்டம் இருக்குன்னும் நம்புறாங்க . இந்த கேஸ விசாரிச்ச போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரம் , ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வேற ஊருக்குப் போயிருக்காரு . காரணம் கேட்டதற்கு மன அழுத்தம்னு சொல்லிருக்காரு BUT அந்த ஊர்ல எதோ ஒரு மர்மம் ஒளிஞ்சிருக்கு .

இன்ஸ்பெக்டர் ரவி : (.......... சிறிது நேரம் மௌனம் .......... ) .

கணேஷ் : என்ன ரவி ரொம்ப பயமுறுத்திட்டனா ? பேச்சையே காணோம்? என்றார் சிரித்துக்கொண்டே .

மறுமுனையில் மீண்டும் மௌனம் தொடரவே ,

ரவி ! ரவி ! என்றவர் பதற்றத்துடன் , இணைப்பைத் துண்டித்து விட்டு , மீண்டும் அவருக்கு போன் பண்ணினார்.

மறுமுனையில் , ரவி மீண்டும் பேசினார் .

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இன்ஸ்பெக்டர் ரவி : ஹலோ ! என்றார் (தூக்க கலக்கத்தோடே)

கணேஷ் : என்னடா ! பேச்சையே காணோம் . தூங்கிட்டயா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாண்டா ! போன்ல CALL RECORDING OPTION CHOOSE பண்ணிருந்தேன் . அதான் தூங்கிட்டேன். நான் அப்புறம் கேட்டுக்கறேன் என்றார் சிரித்துக்கொண்டே .

கணேஷ் : இன்னும் உன்னோட போலிஸ் புத்தி , உன்ன விட்டுப் போகல இல்ல . ஓகே ! ANYWAY கொஞ்சம் ஜாக்கரதையா இரு . மீடியா LEVELல என்ன உதவி வேணாலும் எங்கிட்ட கேளு . நான் இருக்கேன் .

ஓகே GOOD NIGHT . என்று இணைப்பைத் துண்டித்தார் ரவி .

அடுத்த சில நிமிடங்களில் கணேஷின் RECORD செய்யப்பட்ட குரல்இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது . வெளியே ஜெட் வேகத்தில் ரயில் பறந்து கொண்டிருந்தது .

About the Author

Boopathy

Add comment

Comments  
# well doneinfanto 2018-08-04 10:32
dear story writer,

nala story, adikadi thirupangal, nala erunthuchi, officela eaniku work panala, unga story tha paichitu erukan , nizz script ..
Reply | Reply with quote | Quote
# Thanks infantoBoopathy 2018-08-04 13:13
Thanks a lot for your comments. Please suggest this story to ur friendslist
Reply | Reply with quote | Quote
# RE: குறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவைAmmu_c 2018-07-19 19:34
Very gud thriller. Amanushyam poinu mudiyumnu expect seithen.
Good read (y)
Reply | Reply with quote | Quote
# ThanksBoopathy 2018-08-04 13:13
Thanks a lot.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top