(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி ! வெண்ணிலா ................. இப்ப உயிரோட இல்லைங்கற விஷயம் உங்களுக்குத் தெரியும்னு நெனைக்கிறேன் .  என்றார் தயக்கத்துடன் .

(அதைக் கேட்டவுடன் உரத்த குரலில் சிரித்தவாறே கலையரசன் ...)

 சார் ! யார் சொன்னது வெண்ணிலா செத்துப்போய்ட்டான்னு .. நீங்க உட்கார்ந்துட்டு இருக்கிற இதே இடத்துல தான் , நேத்து ராத்திரி , அவளும் உக்காந்து பேசிட்டுப் போனா .. யார ஏமாத்தப் பாக்குறீங்க ..?????? என் அப்பா அம்மாதான் என்ன ஏமாத்த நெனைக்கிறாங்க ..... இப்ப புதுசா வந்துருக்கிற நீங்களுமா .............. என்றான் .

அதற்கும்மேல் எதுவும் பேச மனதில்லாமல்இருவரும் நடந்து , வெளியே வராந்தாவில் வந்து உட்கார்ந்திருந்தார்கள் .

அந்த நேரம் பார்த்து , உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு , வியர்த்து வழிந்த முகங்களுடன் , தவபுண்ணியமும் , அவர் சகாக்களான சிவநேசனும் , ராமலிங்கமும் வந்து கொண்டிருந்தார்கள் .அவர்களை நெருங்கியதும் ,

ஐயா ! வணக்கம் என்றார் ஏட்டு கந்தசாமி . இவர்தான்யா நம்ம ஊருக்கு புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் ! என்றார் பௌவ்யமாக . இன்ஸ்பெக்டர் ரவி , தவபுண்ணியத்திடம் , கை குலுக்கி விட்டு , சார் ! நான் ரவி என்றார் .

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .. வணக்கம் .... உங்களப்பத்தி நெறையா கேள்வி பட்ருக்கேன் ...... அப்புறம் எங்க ஊர் எல்லாம் எப்படி இருக்குது ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு . இங்க வந்ததுக்கப்புறம் , இயற்கையோடவே வாழ்ற மாதிரி ஒரு FEELING இருக்குது சார் . ஆனா ............ என்று இழுத்தார் .

சிவநேசன் : அப்புறம் என்ன சார் ! அந்த ஆனா .............????

இன்ஸ்பெக்டர் ரவி : .................... அது ஒன்னும் இல்ல . இந்த ஊர்ல சொல்றமாதிரி இந்த ஆவி , பேய்ங்கற கட்டுக் கதைகளைத்தான் என்னால நம்ப முடியல .

சிவநேசன் : ( ..... சிரித்துக்கொண்டே .....) சார் ! நீங்க என்ன நாத்திகரா ????....

இன்ஸ்பெக்டர் ரவி : நான் நாத்திகன்ல்லாம் கெடையாது சார் ....... நிருபீக்க முடியாத எதையுமே நான் நம்பறதேயில்ல அவ்ளோதான் ..... வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் மரணம் ,ஒரு திட்டமிட்ட கொலைன்னு தான் நான் நெனைக்கிறேன் ..................... என்னால முடிஞ்சவரைக்கும் அதை நிருபீக்க முயற்சி பண்ணுவேன் . இதுல எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் நான் சந்திக்கத் தயாரா இருக்கேன் சார் .

( ..... தவபுண்ணியம் முகத்தில் பிரளயம் தெரிந்திருந்தது ....)

சற்று சுதாரித்துக் கொண்ட ராமலிங்கம் பேசத் தொடங்கினார் .

ராமலிங்கம் : இன்ஸ்பெக்டர் சார் ! நான் உங்க மன தைரியத்தப் பாராட்றேன் ... போலீஸ்காரன்னா ! இப்படித்தான் இருக்கணும் . ஆனா அதுக்காக எல்லா விசயத்துலயும் , இந்த மாதிரி குருட்டு நம்பிகையை வைக்கக் கூடாது . மொதல்ல நாங்களும் இந்த விசயத்தை நம்பல . நேர்ல பாத்ததுக்கப்புறம் தான் , எங்களுக்கே நம்பிக்கை வந்துச்சு .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி என்ன பாத்தீங்க .. எங்கிட்ட சொல்லுங்க . இந்த கேஸ்ல எனக்கு உபயோகமாயிருந்தாலும் இருக்கலாம் .

இதுவரை பேசாமல் இருந்த தவபுண்ணியம் பேச ஆரம்பித்தார் .

தவபுண்ணியம் : தம்பி ! நீங்க இப்பதான இங்க வந்துருக்கீங்க . போகப் போகப் பாருங்க . உங்களுக்கே தெரியும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் இதே மாதிரி தான் பேசிட்டுத் திரிஞ்சார் ..இப்பப் பாருங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாரு ... ஏன் போனார்ங்கிற காரணம் யாருக்குமே தெரியல . எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்றார்..

இன்ஸ்பெக்டர் ரவி : (சற்று புன்னகைத்தவாறே) .......... நான் பாத்துக்கறேன் .. கூடிய சீக்கிரம் , இந்த புதிருக்கான விடையை நான் கண்டுபுடிச்சுக் காட்றேன் சார் ! என்றார் பெருமிதத்தோடு . 

தவபுண்ணியம் : ஹ்ம்ம் .... வாழ்த்துக்கள் என்றார் வெற்றுப்புன்முறுவலுடன் ...

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் . அவர்கள் கிளம்பியவுடன் ,

ராமலிங்கம் : தலைவரே ! இவன இப்படியே விட்ரக்கூடாது . இன்னிக்கு ராத்திரி , நாம பண்ற வேலையில , அவன் நாளைக்கு காலைலயே , தானா ஊர விட்டே ஓடிருவான் .

தவபுண்ணியம் : இவன் சாதாரணமான ஆள் மாதிரி தெரியல . இவன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கங்க . எதா இருந்தாலும் , யோசிச்சுப் பண்ணுங்க . அப்புறம் , இன்னும் ரெண்டு நாள்ல , அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க .. (NEXTGEN FERTILIZERS LTD) கூட ஒரு மீட்டிங் இருக்குது மறந்திராதீங்க . 

நேரம் காலை 11 மணி . வேதாந்த சுவாமிகளின் அன்பாலயத்துக்குள் , போலீஸ் ஜீப் நுழைந்திருந்தது நாலாப்புறமும் மரங்களடர்ந்து , பறவைகள் சூழ , ஒரு எழில்மிகு பூங்காவாகக் காட்சியளித்தது அன்பாலயம் . அன்பாலய பாதுகாவலர்கள் , போலீஸ் வாகனத்தைக் கண்டதும் , வணக்கத்துடன் , வலது புறமாக கையசைத்து , போர்டிகோவுக்கு வழி காட்டினர் .போர்டிகோவில் வண்டியை நிறுத்தி விட்டு , இருவரும் வெளியே நடந்தார்கள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.