(Reading time: 96 - 191 minutes)

நேரம் சரியாக இரவு 1௦:5௦ மணி . மங்களூர் எக்ஸ்பிரஸ் , மிகுந்த சப்தத்துடன் , அரியலூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கியது . அரியலூர் ரயில் நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..... என்கின்ற வாசகங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. கடைசி ஆளாக படிக்கட்டில் இருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர் ரவி . கைகளை மேலே தூக்கி சோம்பலை முறித்து விட்டு ,சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவர் , தன் கையில் இருந்த மொபைல் போனை எடுத்து , கந்தசாமி என்கிற நம்பரைத் தேடிக் கொண்டிருக்கிருந்தார் . சார் !!! என்ற குரல் கேட்டு , பின்னால் திரும்பிப் பார்த்த அவருக்கு , சல்யூட்டுடன் எதிர்ப்பட்டார் ஏட்டு கந்தசாமி வயதில் 40–ஐ நெருங்கியிருந்தார் . கட்டையான உயரம் . காவல்துறைக்கே சற்றும் சம்பந்தப்படாத ஒரு உடல் வாகு .

சார் ! நான்தான் சார் ! ஏட்டு கந்தசாமி ............. என்று அவர் ஆரம்பிப்பதற்குள் அவரைக் கையமர்த்தினார் இன்ஸ்பெக்டர் ரவி . என்னவென்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தார் கந்தசாமி .

இன்ஸ்பெக்டர் ரவி : உன்னப் பத்தி நானே சொல்றேன் என்று பேச ஆரம்பித்தார் ....... உன் பேரு கந்தசாமி . வயசு 40 . ரெண்டு புள்ள . ஒரு பொண்டாட்டி 1௦ வருஷமா இதே ஸ்டேஷன்லகான்ஸ்டபிளா இருந்து , இப்பதான் ஏட்டா ப்ரொமோஷன் வாங்கிருக்கே . எதப்பத்தியும் கவலைப்பட்றதே இல்ல ..... சொந்த ஊர் மாத்தூர்லயே , போஸ்டிங் வாங்கினது , ரொம்ப சவ்ரியமாப் போச்சு ......... பெரிய பெரிய ஆபீசர்ஸ்களுக்கு , ஜால்ரா போட்டே காலத்தைக் கடத்தியாச்சு .... உன் பர்சனல் ரெகார்ட்ஸ எடுத்துப் பார்த்தேன் . ரொம்பக் கேவலமா இருந்துச்சு . இது போதுமா ! இன்னும் ஏதாவது சொல்லனுமா ? என்றார் ரவி .

ஏட்டு கந்தசாமி : முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல்இல்ல சார் ! நேரமாயிடுச்சு ! இன்னைக்கு இது போதும் ! போலாம் . என்று இருவரும் போலீஸ் ஜீப்பை நோக்கி நடந்தார்கள் . இருவரும் ஏறியவுடன் , ஜீப்பை வேகமாக ஓட்ட ஆரம்பித்தார் ஏட்டு கந்தசாமி .

நேரம் இரவு 11-ஐக் கடந்திருந்தது . ஆள் நடமாட்டமே இல்லாமல் , எங்கு பார்த்தாலும் , காரிருள் சூழ்ந்திருந்தது . எண்ணிப் பார்த்து விடக் கூடிய அளவிலே , தெரு விளக்குகளின் எண்ணிக்கை இருந்தது . இவரிடம் ஏதாவது கேட்கலாமா வேண்டாமா என்கின்ற குழப்பத்துடனே ஜீப்பை ஒட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . ஜீப்பின் வேகம் சீராக அதிகரித்திருந்தது . அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

இன்ஸ்பெக்டர் ரவி : என்ன கந்தசாமி ? எதோ கேக்கணும்னு நெனைக்கிற. ஆனா சொல்ல மாட்டீங்கிற . எதாருந்தாலும் தைரியமா கேளு .

ஏட்டு கந்தசாமி : அது ஒன்னும் இல்ல சார் ! என்னப்பத்தி எப்படி இவ்ளோ DETAILS கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்கீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நான் யார்கிட்ட பேசுனாலும் , மொதல்ல அவங்களோட முழு விபரமும் தெரிஞ்சு வெச்சு கிட்டு தான் பேசுவேன் . அதான் என்னோட வழக்கம் ......... ஹ்ம்ம் !!! சரி அதெல்லாம் இருக்கட்டும் . பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆள் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : கிட்டத்தட்ட ஒரு அஞ்சேமுக்கால் அடி இருப்பார் சார் . WEIGHT ஒரு 65 இருப்பார்னு நெனைக்கிறேன் . நல்ல மாநிறம் ! தாடி மீசையெல்லாம் வெச்சு பயங்கரமா இருப்பார் சார். அப்புறம் அவர் வலது கைல மொத்தம் ஆறு விரல் இருக்கும் .

இன்ஸ்பெக்டர் ரவி : யோவ் ! நான் என்ன MILITARYக்கா ஆள் எடுக்கிறேன் . HEIGHT WEIGHTல்லாம் சொல்லிட்டிருக்கிற .... அவர் மத்த விசயத்திலல்லாம் எப்படி ?

ஏட்டு கந்தசாமி : அவரா சார் ! அவர் ரொம்ப நல்ல மனுஷன் சார் . கை சுத்தம் . மாமுல் வாங்கினா திட்டுவார் சார் ! ஸ்டேஷன்ல மட்டும் இல்ல பொதுமக்கள்கிட்ட கூட அவருக்கு நல்ல மரியாதை இருந்துச்சு . ஆனா கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்தமாறியே இருந்தார் . நானும் கேட்டு பாத்துட்டேன் ஆனா அவர் எதையுமே சொல்லல . கடைசில ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு ஊர விட்டே போய்ட்டார் சார் ! எனக்கு தெரிஞ்சு அவரும் பேயப் பாத்து பயந்துருப்பார்னு நெனைக்கிறேன் சார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ( ...... சிரித்துக்கொண்டே ......) யோவ் ! இந்தக் காலத்துலயும் இன்னும் இந்த மாதிரி கன்றாவிகள , நாம நம்பிட்டுதான் இருக்கிறோம் இல்லையா . இந்தக்காலத்துல அவனவன் FACEBOOK , TWITTER னு போய்கிட்டு இருக்கானுங்க , இன்னும் நீங்க பேய் , பிசாசுன்னு பயந்துட்டு இருக்கீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! நீங்க வேற , நானே ரெண்டு மூணு தடவ பேயப் பாத்து பயந்துருக்கென் .

இன்ஸ்பெக்டர் ரவி : IS IT ? அப்படியா ? பேய் எப்படிய்யா ? இருக்கும் என்றார் சிரித்துக்கொண்டே .

ஏட்டு கந்தசாமி : தனியா இருக்கும்போது திடீர்னு நம்ம கண்ணு முன்னாடி , எதோ ஒரு உருவம் வந்துட்டு போன மாதிரி இருக்கும் சார் ! . அவ்ளோதான் ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது .எந்த வேலையும் பண்ண முடியாது . அதனால தான் சார் நாம் எப்பவுமே தனியா இருக்கிறதில்ல . 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.