(Reading time: 96 - 191 minutes)

மேலே சுற்றிக் கொண்டிருந்த தவபுண்ணியத்தின் உடல் திடீரென பொத்தென்று கீழே விழுந்தது ... எல்லாரும் சென்று அவரைப் புரட்டிப் பார்க்க , அவர் சடலமாகத் திரும்பி வந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது .. வீட்டுக்குள் வீசிக்கொண்டிருந்த புயல் , ஒரு வழியாக நின்றிருந்தது ... சுயநினைவுக்குத் திரும்பிய மரகதமும் , கலையரசனும் , தன் தந்தையின் உடலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தனர் ... கண் விழித்திருந்தார் வேதாந்த சுவாமிகள் .... தவபுண்ணியத்தின் உயிரைக் காப்பாற்ற முடியாத சோகத்தை , அவரிடம் பார்க்க முடிந்தது ...துக்கமான முகத்துடன் , வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ... வேதாந்த சுவாமிகள் வீட்டிலிருந்து வெளியே வர ,ஜனக்கூட்டம் , தவபுண்ணியத்தின் வீட்டை மொய்த்திருந்தது ... மரண ஓலம் அங்கு விண்ணைப் பிளந்திருந்தது .... இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்த , வேதாந்த சுவாமிகள் ,

 ரவி !!! நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன் ... தவபுண்ணியத்தக் காப்பாத்த முடியல ... இந்தப் பிறவியில் , அவன் பண்ணின பாவங்களிலிருந்து அவனை மீட்டேடுக்கவே முடியல .... இதைத் தான் பெரியவங்க முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்ன்னு  சொன்னாங்க என்றார் வருத்தத்துடன் ....

இன்ஸ்பெக்டர் ரவி : “ மன்னிச்சுக்கங்க சுவாமிஜி !!! உங்கள நான் தப்பான கோணத்திலயே வச்சுப் பாத்துட்டேன் ... உங்க பேச்சையெல்லாம் உதாசீனப்படுத்திட்டேன் ... இப்பதான் நான் உண்மையப் புரிஞ்சுகிட்டேன் ... என்ன மன்னிச்சிருங்க !!! “ என்றார் ...

வேதாந்த சுவாமிகள் : “ நான் தான் அப்பவே சொன்னேனே ரவி ,

 ஆன்மீகமும் , அமானுஷ்யமும் .... அறிவியலுக்கு அப்பாற்பட்டதுன்னு . “.. என்றார் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் நாம அடுத்து எங்க சார் போறோம் ...” என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ அன்பாலயத்துக்கு ....... “ என்றார் பூரண நம்பிகையையோடு ....

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

.............................................. 15 – நாட்களுக்குப் பிறகு .............................................

இன்ஸ்பெக்டர் ரவிக்கு மீண்டும் ட்ரான்ஸ்பர் வந்திருந்தது .... ஏட்டுக் கந்தசாமி வருத்தத்துடன் விடை கொடுத்திருந்தார் ... NEXTGEN உரம் தயாரிப்பு நிறுவனம் , தன்னுடைய உரங்களை மறுசீரமைப்பு செய்து கொண்டு இயற்கையான வழியிலேயே உரங்களைத் தயாரித்திருந்தார்கள் ... வேளாண் பேராசிரியர் சதாசிவம் , குமாரசாமி ஐயாவின் , கருத்துக்களைத் தொகுத்து , “விவசாயமும் , அதன் அவசியமும் “ என்கின்ற நூலை வெளியிட்டிருந்தார் ....

-- முற்றும் –

இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .

 

இப்படிக்கு 

பூபதி கோவை . 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.