(Reading time: 96 - 191 minutes)

ஏட்டு கந்தசாமி : “ சார் அவன் பேர் பொன்னையா !!! தவபுண்ணியம் வீட்டு வேலைக்காரன் சார் ....“ என்றார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : (... யோசனையிலேயே ....) “ ஹ்ம்ம் !!! “ என்றார் .

(... அடுத்த 2 நிமிடங்களில் , பொன்னையாவையே , பார்த்துக்கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி சார் ! சார் ! என்று பதறினார்......)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்னாச்சு கந்தசாமி ???? எனிதிங் சீரியஸ் ??? “

ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! அவனோட இடது காலைப் பாருங்க ... “ என்றார் .

சேற்றில் பதிந்திருந்த , அந்த இடதுகால் வெட்டுத் தடயம் , அவன் காலில் இருந்தது அவர்களை மேலும் அதிர வைத்திருந்தது ...... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .

தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அந்த சாயுங்கால நேரத்திலும் , உச்சகட்ட பரபரப்பில் இருந்தது ....... இன்ஸ்பெக்டர் ரவி , நாற்காலியில் சாய்ந்தபடியே , வாயில் சிகரெட் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார் .... சிறை அறையில் இருந்து , “ அய்யோ !! அம்மா !! ” என்று கத்துகின்ற சத்தம் , தொடர்ந்து வந்து கொண்டிருந்தது ..... எரிந்து கொண்டிருந்த சிகரெட்டின் கடைசித் துண்டை , வீசி எறிந்து விட்டு கோபமாக எழுந்த அவர் , நேராக சிறை அறையை நோக்கி , வேகமாக வேகமாக நடந்தார் ....... உள்ளே , வீங்கிய முகத்துடனும் , உடல் முழுக்க இரத்த காயங்களோடும் , கீழே படுக்க வைக்கப் பட்டிருந்தான் பொன்னையா ..... உடம்பின் பல பகுதிகளில் இருந்து , இரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்ததும் , ஏட்டு கந்தசாமியும் , மற்ற காவலர்களும் பொன்னையாவை , மேலே எழுப்பி , ஒரு நாற்காலியில் உட்கார வைத்திருந்தனர் ... ஒரு குண்டூசி விழுந்தாலும் , சப்தம் கேட்கும் அளவுக்கு , அங்கு அமைதி நிலவியிருந்தது ..... பொன்னையாவின் இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது ... அங்கிருந்த நிசப்தத்தைக் கலைத்தார் இன்ஸ்பெக்டர் ரவி ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ பொன்னையா ! இப்ப நான் கேக்கிற கேள்விகளுக்கு , உண்மையான பதில , டக்கு டக்குன்னு சொல்லனும் ... இல்ல ,,, விசாரணை முன்பை விட , பயங்கரமா இருக்கும்..... என்ன ?? “ என்றார் .

( சரி என்பதைப் போல தலையை ஆட்டினான் பொன்னையா .....)

பொன்னையாவின் பதில்களை , பதிவு செய்ய , அவன் எதிரே கேமரா ஒன்று வைக்கப்பட்டிருந்தது ..... (... இன்ஸ்பெக்டர் ரவி பேச ஆரம்பித்தார் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! பொன்னையா ..... அன்னிக்கு ராத்திரி , என்னோட வீட்டுக் கதவத் தொடர்ந்து தட்டிகிட்டே இருந்தது ... , அப்புறம் என்ன பாத்த உடனே ஓடினது .... எல்லாமே நீதானே ... சொல்லு என்றார் ....

முகத்தில் வடிந்திருந்த இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு , பொன்னையா பேச ஆரம்பித்தான் ...

 ஐயா !!! ஆமாங்கய்யா !!! “ நான் தான் .... 

இன்ஸ்பெக்டர் ரவி : “ யார் அத பண்ண சொன்னது ????? “

பொன்னைய்யா : “ யாரும் என்ன பண்ண சொல்லல ... நான் தான்யா வேணும்னே பண்ணுனேன் “ என்றான் ...

கேமராவை சற்று நேரம் , ஆப் செய்து விட்டு அவன் கன்னத்தில் பளார் , பளார் என்று பலமாக அறைந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... அவர் அடித்த அடியில் , நிலை குலைந்து போயிருந்த பொன்னையா ,

 ஐயா !! அடிக்காதீங்க !!! எல்லா உண்மையும் நானே என் வாயால சொல்லீறேன்ங்கய்யா !!! தயவு செய்து அடிக்காதீங்க !!! “ என்று கதறினான் .

மீண்டும் கேமராவில் , அவனுடைய பேச்சு , பதிவாகிக் கொண்டிருந்தது .

பொன்னையா : “ குமாரசாமி ஐயாவ , கொலை பண்ணது நான் தான் .. ஆனா அதை பண்ண சொன்னது , தவபுண்ணியம் ஐயாவும் , அவரோட நண்பர்களான சிவநேசனும் , ராமலிங்கமும் தான் .... ஆனா அந்தப் பழிய இறந்து போன , அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , போட்டுட்டு , ஊர் மக்கள நம்ப வச்சிட்டோம் ....... நான் அன்னிக்கு , உங்க வீட்டுக் , கதவத் தட்டின மாதிரி, எல்லார் வீட்டுக் கதவையும் , இரவு நேரங்கள்ல தட்டுவேன் ... அதை , பேய் அமானுஷ்யம்னு எல்லாரும் நம்பிட்டாங்க ...

( அவன் பேசிக் கொண்டிருந்தது அனைத்தும் , தெளிவாக அந்த கேமராவில் , பதிவாகிக் கொண்டிருந்தது ... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவனுடைய வாயிலிருந்து வரும் ,ஒவ்வொரு வார்த்தையையும் உற்று கவனித்துக் கொண்டிருந்தனர் ... அவனை இடைமறித்த கந்தசாமி , )

ஏட்டு கந்தசாமி : “ வேதாந்த சுவாமிகளுக்கும் , உங்களுக்கும் என்ன தொடர்பு ???? ... “

பொன்னையா : “ சார் !!! மொதல்ல இருந்து , வேதாந்த சுவாமிகளுக்கும் தவபுண்ணியம் ஐயாவுக்கும் , எந்த விஷயத்திலுமே ஒத்து வராது .... ஆனா இந்த விசயத்தில் மட்டும் , அவர் எப்படி ஒத்துப் போனார்ன்னுதான் இன்னும் எனக்கு தெரியலைங்கய்யா !!! ..... ஆனா இந்த ஆவி , பேய் விசயத்துல , நாங்க சொன்னதைக்காட்டிலும் , வேதாந்த சுவாமிகள் சொன்னதத்தான் மக்கள் அதிகமாக நம்பினாங்க ..... அதை நாங்களும் எங்களுக்கு , சாதகமாப் பயன்படுத்திகிட்டோம் ... இந்த கேஸ விசாரிக்க வந்த , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்த , பல வகைல துன்புறுத்தி ,இந்த கிராமத்த விட்டே ஓட வச்சிட்டோம் ... அதுக்கப்புறம் தான் நீங்க வந்தீங்க ..... உங்களையும் , இந்த கிராமத்த விட்டே ஓட வைக்கத்தான் நான் அன்னிக்கு , உங்க வீட்டுக்கு வந்தேன்..ஆனா நீங்க சுதாரிச்சுட்டீங்க ... ” என்று பேசி முடித்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.