(Reading time: 96 - 191 minutes)

அங்கிருந்த பொதுமக்கள் , தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி விட்டு , அந்த தீர்த்தத்தை வாங்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்திருந்தனர் . அதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , எதுவும் பேசமனதில்லாமல் , கந்தசாமியைப் பார்த்து ,

வாய்யா போலாம் !!! .... என்றார் எரிச்சலோடு ..

இருவரும் மீண்டும் , ஜீப்பை நோக்கி செல்ல ஆரம்பித்த கணம் , வேதாந்த சுவாமிகள் இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்து ,

 ரவி ! ரவி “ என்று கூப்பிட ஆரம்பித்தார் .... திரும்பிப் பார்த்த இருவரும் ,,,, வேதாந்த சுவாமிகளின் பக்கம் வந்தனர் .

வேதாந்த சுவாமிகள் : “ என்ன ரவி ! நீங்க சொன்னமாதிரி , மாத்தூர் கிராமத்துல , நடக்குற சம்பவங்களுக்கான , அறிவியல் பூர்வமான உண்மையை எதையாவது , கண்டுபிடிச்சீங்களா ??? “ என்றார் கேலியாக . “

இன்ஸ்பெக்டர் ரவி : (... மிகுந்த எரிச்சலுடன் ...) “ ஆமாங்க சுவாமி ! இன்னும் கூடிய சீக்கிரத்துல , இந்த மாத்தூர் கிராமத்த ஏமாத்திகிட்டு , சுத்திட்டு இருக்கற , அத்தனை பேர்த்தையும் ,புடிச்சு ஜெயில் கம்பிக்குள்ள தள்ளி , களி திங்க வைக்கத்தான் போறேன் . அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை ...... “ என்றார் .

வேதாந்த சுவாமிகள் : (... ரவி மறைமுகமாக , தன்னையும் தாக்குகிறார் என்பதைத் தெரிந்தும் , முகமலர்ச்சியுடன் , சிரித்துக்கொண்டே .... )

“ ..... உங்களோட முயற்சிக்கு , என்னோட வாழ்த்துக்கள் .... ஆனா இதுக்கப்புறம்தான் , நீங்க இன்னும் ஜாக்கிரதையா இருக்கனும் ... உங்களுடைய பாதுகாப்புகள துரிதப்படுத்துங்க ... எந்த நேரத்திலும் , என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் . “ என்றார் எச்சரிக்கையோடு .

இன்ஸ்பெக்டர் ரவி : (... உச்ச கட்ட எரிச்சலோடு ...) “ சுவாமிஜி !!! என்ன பண்ணனும்னு எங்களுக்கு நல்லாத் தெரியும் . உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி .... என்று இருவரும் , அங்கிருந்து கிளம்ப முற்பட்ட அடுத்த வினாடி , இன்ஸ்பெக்டர் ரவியின் செல்போன் கதறியது எடுத்துப் பேச ஆரம்பித்திருந்த அவரின் முகம் , கொஞ்ச நேரத்தில் , சட்டென்று மாறியிருந்தது .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! என்னாச்சு ??? . “

(... சிரித்தபடியே நின்றுகொண்டிருந்தார் வேதாந்த சுவாமிகள் ....)

இன்ஸ்பெக்டர் ரவி : “ நேத்து ராத்திரி தூங்கச் சென்ற ராமலிங்கம் ஐயாவோட , அறைக்கதவு இதுவரை திறக்கப்படவில்லையாம் .... தட்டுனாலும் , உள்ள சப்தமே இல்லையாம் .. “

(.... வேதாந்த சுவாமிகளின் முகத்தில் இருந்த புன்னகை , இன்னும் மறையவில்லை ....)

வேதாந்த சுவாமிகள் : “ அதனோட ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சு ... உங்களுக்கான வேலையும் வந்திடுச்சு ..... “ என்றார் .

அவரின் பேச்சுக்கு மதிப்புகொடுக்காமல் , அடுத்த இரு வினாடிகளில் , அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டிருந்தது போலீஸ் ஜீப் . 15 நிமிடப் பயணத்தில் , ராமலிங்கத்தின் வீட்டை அடைந்திருந்தார்கள் . அங்கு ஒரு மயான அமைதி நிலவியிருந்தது . அந்த வீட்டில் இருந்த மேல் தளத்தில் , ராமலிங்கத்தின் உறவினர்கள் பதற்றத்தின் உச்சத்தில் , நின்று கொண்டிருந்தார்கள் . வெகுநேரமாக தட்டியும் , ராமலிங்கத்தின் அறைக் கதவு திறக்கப்படாததால் , அது உடைக்கப்பட்டு , கீழே வைக்கப்பட்டிருந்தது உள்ளே ராமலிங்கம் மெத்தையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார் . மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் . முகத்தில் சேலைத்தலைப்பை வைத்துக்கொண்டு , கண்கள் கலங்கியபடி நின்று கொண்டிருந்தாள் ராமலிங்கத்தின் மனைவி . மருத்துவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளை எதிர்பார்த்து , ராமலிங்கத்தின் உறவினர்கள் நின்று கொண்டிருந்தார்கள் . அந்த நேரம் பார்த்து , மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் , மனைவி மரகதம் , மற்றும் மகன் கலையரசனோடு அங்கு வேகமாக வந்திருந்தார் . தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் ,ராமலிங்கத்தின் மனைவிக்கு ஆறுதலான வார்த்தைகளை சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தார் கனத்த இதயத்தோடு காத்திருந்தார் தவபுண்ணியம் . திடீரென்று எழுந்த மருத்துவர்கள் ,ராமலிங்கம் இறந்துவிட்டதாக அறிவித்தார்கள் . அங்கே மரண ஓலம் ஆரம்பமாயிருந்தது . ராமலிங்கத்தின் மனைவி கதறிக்கொண்டிருந்தாள் . கண்ணீர் தாரை தரையாக வழிந்து கொண்டிருந்தது . ஏட்டு கந்தசாமியின் முகத்தில் , ஈ ஆடவில்லை . அதிர்ச்சியில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . இந்த செய்தியைக் கேட்டுத் திகைத்துப் போயிருந்த தவபுண்ணியம் ,சவமாய்க் கிடக்கின்ற தன் நண்பன் ராமலிங்கத்தின் பக்கத்தில் வந்து , தன் தலையில் அடித்துக்கொண்டு , கதறியிருந்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.