(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : “ சரி அதெல்லாம் இருக்கட்டும் ..... ஆனா நீ ...... எதுக்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் கொலை பண்ணின ?? அவங்க கூடவே இருந்த நீ , எதுக்கு அவங்கள கொலை செஞ்ச ????? அவங்களுக்கும் உனக்கும் அப்படியென்ன தனிப்பட்ட பிரச்சனை ??

(.... மௌனமாக இருந்தான் பொன்னையா .....)

ஏட்டு கந்தசாமி : “ எதுக்காக அவங்கள நீ கொலை பண்ணின ? .... நீ கொலை பண்ணதுக்கான ஆதாரங்கள் எங்க கிட்ட இருக்குது .... மரியாதையா உண்மைய சொல்லிடு .... உனக்கு பின்னாடி , யார் யாரெல்லாம் இருக்கா ???? உன்னோட அடுத்த குறி யாரு ???? தவபுண்ணியம் தானே .... சொல்லு !!!...... “ .

பொன்னையா : “ அவங்க , ரெண்டு பேர்த்தையும் , கொலை பண்ண சொன்னதே , தவபுண்ணியம் ஐயா தான் ...... “ என்றான் கோபமாக .

(... அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ...)

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன ??? தவபுண்ணியமா ??????? அவர் எதுக்காக அவருடைய நண்பர்களையே ????? .......... “ என்றார் .

பொன்னையா : “ இதுவரைக்கும் நாங்க பண்ண எல்லாமே சரியாத்தான் நடந்துட்டு வந்துச்சு ... ஆனா நாங்க எதிர்பாராத ஒன்னு , என்னன்னா ??? அது உங்களோட விசாரணை தான் .... நீங்க விசாரிக்கிறதப் பார்த்த , இன்னும் கொஞ்ச நாள்லயே , தவபுண்ணியத்த நெருங்கிருவீங்களோன்னு , பயந்து தான் ... அவர் ஒரு திட்டம் போட்டார் ... அதன்படி தான் , இந்த கேஸ திசை திருப்புவதற்காக , சிவநேசனையும் , ராமலிங்கத்தையுமே , அவர் கொலை பண்ண முடிவெடுத்தார் ... அவங்கள கொலை பண்ணிட்டா , இந்த கேஸ் மறுபடியும் , ஆவி , அமானுஷ்யங்கற கோணத்திலேயே , இன்னும் கொஞ்ச நாளைக்கு , இழுத்தடிக்கும் ... அதனால தான் , அவர் இதை பண்ண சொன்னார் ...”

(... இன்ஸ்பெக்டர் ரவி , தன் கன்னத்தில் கை வைத்து , பொன்னையாவையே பார்த்துக் கொண்டிருந்தார் .... அவனிடம் , ஆர்வமாக , அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டுகொண்டிருந்தார் கந்தசாமி ...)

ஏட்டு கந்தசாமி : “ SO , ஒரு கொலைய மறைக்கறதுக்காக , நீங்க ரெண்டுபேரும் , அடுத்தடுத்து ரெண்டு கொலை பண்ணீருக்கீங்க ..... நாளைக்கு , உங்க ரெண்டு பேரையும் , உங்க ஊர்க்காரங்க முன்னாடி அடிக்கிற அடியில , தவபுண்ணியத்தோடு வாயிலயிருந்தே , எல்லா உண்மையையும் வெளில கொண்டு வர்றோம் .... “

(... அதை நினைத்து , அதிர்ந்து போன பொன்னையா ... உடனே ...)

பொன்னையா : “ சார் ! சார் ........ ! நான் அவங்கள கொலை பண்ணத்தான் அங்க போனேன் ... ஆனா அவங்க ரெண்டு பேருமே , என்னைப் பார்த்த உடனே எதோ ஒரு அதிர்ச்சியிலயே செத்துட்டாங்க ... நான் அவங்கள கொலை பண்ணல சார் !!! நான் நிரபராதி ..... என்ன விட்டுடுங்க சார் !!! .. நான் புள்ளகுட்டிக்காரன் .... எனக்கு குடும்பம் இருக்குங்க சார் !!! ... “ என்று திரும்பத்திரும்ப இதையே சொல்லி , அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான் ....

இன்ஸ்பெக்டர் ரவி : (.... உக்கிரமான முகத்துடன்....) “ அப்ப ..... செத்துப் போனவங்களுக்கெல்லாம் குடும்பம் இல்லையா ???? ... “ என்று மீண்டும் , ஆத்திரம் தீரும் அளவுக்கு அவனை அடித்துவிட்டு , வெளியே வந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் “ ....

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் , அவனை விசாரணை செய்திருப்பார்கள் .... மணி 9 –ஐத் தொட்டிருந்தது ... இருவரும் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து , சிகரெட்டைப் பற்ற வைத்து , புகையை ஊதித் தள்ளியிருந்தனர் ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ! எப்ப சார் ??? நாம , தவபுண்ணியத்த கைது பண்ணப் போறோம் ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ நாளைக்கு காலைல , சரியா 9 மணிக்கு , பொதுமக்கள் முன்னாடியே , தவபுண்ணியத்தோட கையில , விலங்க மாட்டி , ஸ்டேஷனுக்கு இழுத்துட்டு வரப் போறோம் .... அதுக்கு அடுத்தபடியா அன்பாலய வேதாந்த சுவாமிகளையும் கைது பண்ணி ஸ்டேஷன்ல வெச்சு வெளுத்தா எல்லா உண்மையும் வெளில வந்துரும் .... இன்னிக்கு ஒரு நாள் ராத்திரி மட்டும் , நீங்க ஸ்டேஷன்லயே இருங்க ... ஏன்னா .... பொன்னையாவ கொஞ்சம் பத்திரமா பாத்துக்கணும் “ ... என்னால முடியல . ரொம்ப நாளைக்கு அப்புறம் , இன்னிக்குதான் நான் நல்லா தூங்கப் போறேன்னு நெனைக்கிறேன் ... “ என்றார் சிரித்துக்கொண்டே ...

ஏட்டு கந்தசாமி : “ சார் ......! அதெல்லாம் நான் பாத்துக்கறேன் சார் .... நீங்க வந்ததுக்கப்புறம் தான் இந்த ஊருக்கும் இந்த கேஸ்க்கும் ஒரு விடிவு காலமே பொறந்திருக்குது ... உங்களுக்காக இதைக் கூட , நான் பண்ண மாட்டெனா ??? “ என்றார் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.