(Reading time: 96 - 191 minutes)

மிகப்பெரிய குழப்பத்தினிடையில் போலீஸ் ஜீப் , புயலாகக் கிளம்பியிருந்தது . போலிஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் வழிநெடுகிலும் இருந்த இருட்டு , தன்னை விலக்கிக் கொண்டு அவர்களுக்கு வழிகாட்டியிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் சந்தேக மேகங்கள் சூழ்ந்திருந்தது . எப்பொழுதும் எதையாவது பேசிக்கொண்டு வரும் , ஏட்டு கந்தசாமியும் மௌனம் காக்க , ஒரு மயான அமைதி அங்கு நிலவியிருந்தது இருபது நிமிடப் பயணத்தில் , மாத்தூரின் எல்லையை அடைந்திருந்தார்கள் ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர் . கொஞ்ச நேரத்தில் , சிவநேசனின் தோப்புவீடு வந்திருந்தது . அந்த இரவு நேர அமைதியிலும் , அழுகுரல் சத்தம் அந்த ஏரியாவையே துக்கத்தில் ஆழ்த்தியிருந்தது .தோளில் துண்டுகளோடு பெருசுகள் தோப்பின் வெளியே நின்றுகொண்டு , பேசிக் கொண்டிருந்தார்கள் . அவர்களையெல்லாம் தாண்டி வீட்டை நோக்கி முன்னேறியிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் ............ வீட்டின் உள்ளே , போர்வையின் விரிப்பில் , நேராகப் படுத்தவாறு கிடத்தப்பட்டிருந்தார் சிவநேசன் ........ சிவநேசனின் மனைவி , அவரின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் , பிரம்மை பிடித்தவர் போல் ,,, அவர் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார் அவரைச் சுற்றி அழுதபடியே பெண்கள் கூட்டம் மொய்த்திருந்தது . உள்ளே சென்று பார்த்து விட்டு வெளியே வரும்போது , திண்ணையில் தவபுண்ணியமும் , ராமலிங்கமும் சோகமே உருவாய் உட்காந்திருந்தார்கள் சிவந்து கிடந்த தவபுண்ணியத்தின் கண்களில் தண்ணீர் தடாகம் , ஊற்றெடுத்திருந்தது . எப்பொழுதும் கம்பீரமாய் தோற்றமளிக்கும் தவபுண்ணியத்தின் முகம் , சிவநேசனின் ஈடுகட்ட முடியாத இழப்பால் கலவரமடைந்திருப்பதை அங்கு காண முடிந்திருந்தது . ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ராமலிங்கம் , தவபுண்ணியதைப் பார்த்து

ராமலிங்கம் : “ ஐயா ! நீங்க கவலைப்படாதீங்க ஐயா ! , எனக்குத் தெரிஞ்சு , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அந்த NEXTGEN உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரனுங்க தான் , இப்படி பண்ணியிருக்கணும் .அவனுங்கள............. நாளைக்கு காலைலக்குள்ள அவனுங்களோட கதைய முடிச்சிட்றேன் . அப்பதான் என்னோட ஆத்திரம் தீரும்யா . “ என்று எழுந்து நின்றார் கோபமாக .

தவபுண்ணியம் : ( ...... கோபத்துடன் நின்றிருந்த ராமலிங்கத்தைப் பார்த்து , கையமர்த்திய தவபுண்ணியம் ...... ) “ ராமலிங்கம் ! கொஞ்சம் அமைதியா இரு . அவனுங்க இதப் பண்ணீருக்க மாட்டாங்க . அவனுங்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்ல . நல்லா யோசிச்சுப் பாரு ... நம்மளப் பத்தி , நல்லா தெரிஞ்ச எவனோ தான் இதைப் பண்ணீருக்கான் ....... “ .

பக்கத்தில் இருந்த நபர்களிடம் , விசாரித்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி , இன்ஸ்பெக்டர் ரவியின் பக்கத்தில் வந்து ,

 சார் ! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி , இந்த வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்ருக்குது . சிவநேசன் ஐயா , எழுந்து போய் கதவத் திறந்து பாத்துருக்காரு . வெளில யாருமேயில்ல அப்பநல்ல மழை வேற . கையில டார்ச் எடுத்துட்டு வெளில போயிருக்காரு . போனவர் ரொம்ப நேரமா திரும்பி வரலையேன்னு இவங்கெல்லாம் போய்ப் பார்த்துருக்காங்க . அப்பதான் அவர் அந்த இடத்துலேயே இறந்து கிடந்தது இவங்களுக்கு தெரிஞ்சுருக்கு . உடனே நமக்கு தகவல் குடுத்துருக்காங்க . இது ஒரு இயற்கையான மரணாமாக்கூட இருக்கலாம் சார் !!! ஆனா வெண்ணிலாவோட ஆவி தான் இவர பழி வாங்கிருக்குன்னு ஊர்க்காரங்கல்லாம் பேசிக்கிறாங்க இவங்க சொல்றபடி பாத்தா , கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் , அவர் இறந்துருக்கார் .ஆனா அவர் உடம்புல எந்தவிதமான காயங்களுமே இல்ல . .... “

இன்ஸ்பெக்டர் ரவி : (................ சற்று நேரம் யோசித்துவிட்டு ................) ஹ்ம்ம் !!! ஓகே !!! . அவர் இறந்து கிடந்த ஸ்பாட்ட நான் பார்க்கணும் . ” என்றார் .

பக்கத்தில் இருந்த நபர் வழியைக் காட்ட , ஏட்டு கந்தசாமியும் , இன்ஸ்பெக்டர் ரவியும் பின்தொடர்ந்திருந்தார்கள் . கொஞ்ச நேர நடையில் வீட்டுக்குப் பின்னால் இருந்த , செம்பருத்தித் தோட்டத்தை நெருங்கியிருந்தார்கள் . சிவநேசன் இறந்து கிடந்த இடத்தை , அடையாளம் காட்டிவிட்டு சென்றிருந்தார் அந்த நபர் ... ( ஏட்டு கந்தசாமி , அடையாளம் காட்டப்பட்ட இடத்தைச் சுற்றி ஒரு பெரிய வட்டம் போட்டிருந்தார் .) அந்த இடம் முழுவதையும் , தன் கண்களால் அலசியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் பார்வை ,தூரத்தில் இருந்த செம்பருத்திச் செடியை நோக்கிச் சென்றது .. அந்தச் செடியின் கிளைகள் சற்றே உடைக்கப்பட்டிருந்தது அப்போது தெரியவந்தது . பக்கத்தில் சென்று அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் . அதன் வழியாக , யாரேனும் ஊடுருவி வந்திருக்கலாம் என்கின்ற யூகத்தில் குறிப்பிட்ட அந்த இடத்தைச் சுற்றியே மேலும் , தனது பார்வையைக் கூர்மைப்படுத்தியிருந்தார் . கனமழை பெய்ததன் காரணமாக , அந்த இடமே சேறும் சகதியுமாகக் காட்சியளித்திருந்தது . கொஞ்ச நேரமாகவே , அந்த சகதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஏட்டு கந்தசாமி திடீரென இன்ஸ்பெக்டர் ரவியைக் கூப்பிட்டு அந்த சகதியின் ஓரத்தை நோக்கி , தன் கையைக் காட்டினார் அதில் மனிதக் காலடித்தடம் பதிந்திருந்ததைக் கண்டதும் திடுக்கிட்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அதே காலடித்தடம் , தூரத்தில் இருந்த மதில் சுவர் வரை , பரவியிருந்ததை அங்கு பார்க்க முடிந்தது . அந்த கால்தடங்களையே , நன்கு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , தன்னுடைய செல்போனில் அவற்றைப் புகைப்படமெடுத்துக் கொண்டார் . அந்தக் கால்தடங்களின் இடதுகுதிங்காலில் ஏதோ ஒரு வெட்டு விழுந்திருப்பதைப் போல , எல்லாப் புகைப்படங்களிலும் தெரிந்திருந்தது . அதை உணர்ந்து கொண்ட இருவரும் அந்த மதில் சுவர் வரை சென்று பார்த்தார்கள் . வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடியிருந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.