(Reading time: 96 - 191 minutes)

 தம்பி நாங்க காட்டு மிராண்டிங்க தான் . ஆனா கணக்கு வழக்கு தெரியாதவங்க இல்ல . பேசுனபடி , 2 லட்சம் இதுல இல்லியே . வெறும் அம்பதாயிரம் தான் இருக்குது “ .. என்றார் கோபத்தோடு .

(.....மெல்ல புன்னகைத்திருந்தார் தவபுண்ணியம்.....)

பிரனேஷ் : எதுவுமே குடுக்க வேண்டாம்னு நெனச்சோம் . ஏதோ பழகுன தோஷத்துக்காக வேற வழியில்லாம இதை குடுக்கறோம் . மரியாதையா எடுத்துட்டு போயிருங்க .

சிவநேசன் : “ என்ன தம்பி ! பேசறது யார்கிட்டன்னு தெரிஞ்சுதான் பேசுறியா ? . “ எங்ககிட்டயே உங்க வேலையக் காட்டுறீங்களா ! “ .

ராமலிங்கம் : “ அந்த குமாரசாமி போன இடத்துக்கே நீங்களும் போறீங்களா ................... “

திலீபன் : “ ஐயா !!!!! ஒரு நிமிஷம் WAIT பண்ணுங்க .......... இப்பதான் , தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , வந்து குமாரசாமி கேஸ் சம்பந்தமா , விசாரணை பண்ணிட்டு போயிருக்காங்க.... நாங்க ஒரு வார்த்த உங்களப் பத்தி சொல்லிருந்தோம்னா , இன்னிக்கு நீங்க மூணு பேரும் ஜெயில்ல களி தின்னுட்டு , கம்பி எண்ண வேண்டியது தான் “ .

பிரனேஷ் : “ அதனால மரியாதையா , குடுக்கறத வாங்கிட்டு போயிருங்க .. இல்ல இன்னும் முரண்டு புடிச்சீங்கன்னா இப்பவே இன்ஸ்பெக்டர் ரவிக்கு கால் பண்ணி , எல்லா விவரத்தையும் ,விலாவாரியா சொல்லிருவோம் . அதுக்கப்புறம் உங்க இஷ்டம் “ என்றான் கேலியாக .

இதயெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தவபுண்ணியம் , திடீரென்று எழுந்து சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் பார்க்க அவர்களும் எழுந்து நின்றனர் தவபுண்ணியம் தன் தலையை ,லேசாக வருடிக்கொண்டே , பிரனேஷையும் , திலீபனையும் பார்த்து ,,,,,, லேசாக சிரித்து விட்டு ,

தம்பி ! உரம் தயாரிக்கற வேலைய மட்டும் பாருங்க ! ..... இல்ல ,,,,,,, நீங்களே இந்த மண்ணுக்கு உரமாயிரப் போறீங்க !!! . “ என்று எச்சரித்துவிட்டு வெகு வேகமாக வெளியேறினார் . “ .

வெளியே கைகளைக் கட்டிக் கொண்டு , காருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தான் பொன்னையா வேகமாக சென்ற தவபுண்ணியம் , பொன்னையாவின் காதுகளில் ஏதோ முணுமுணுத்துவிட்டு அனைவரும் காரில் ஏறிப் புறப்பட்டிருந்தார்கள் இதயெல்லாம் ஜன்னலுக்கு வெளியே , நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் அடுத்த பத்தாவது நிமிடத்தில் , இன்ஸ்பெக்டர் ரவியின் காதுகளுக்கு செல்போன் மூலமாக நடந்த விசயங்களையெல்லாம் , தெரியப்படுத்தியிருந்தார் .

பொழுது சாய்ந்து கொண்டிருக்கின்ற நேரம் கடிகார முள் சரியாக , ஏழு மணியைத் தொட்டிருந்தது . இருட்டு மெல்ல மெல்ல பரவிக் கொண்டிருந்தது தூத்தூர் காவல் நிலையத்தை நோக்கி , போலீஸ் ஜீப் பயணித்திருந்தது . அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து , யோசித்துக் கொண்டே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ஏட்டு கந்தசாமி : சார் ! குமாரசாமி ஐயா , பேயடிச்சு செத்துப் போயிட்டார்ன்னு ஒரு ஊரையே நம்ப வச்சிருக்கானுங்க . இது எவ்வளோ பெரிய குற்றம் !!!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் !!! அது மட்டும் இல்ல ,,,, “ பாவம் அந்த வெண்ணிலாப் பொண்ணு மேல , பழியப் போட்டுட்டு , இவனுங்க சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்கானுங்க “ .

ஏட்டு கந்தசாமி : “ பெரிய மனுஷன்ங்கற போர்வைல இன்னும் என்னென்ன அட்டூழியங்கள பண்ணிட்டு இருக்கானுங்களோ ??? “

இன்ஸ்பெக்டர் ரவி : “ இவனுங்க மட்டும் இல்ல கந்தசாமி ..................... நம்ம நாட்ல ,,,, இப்படிப்பட்டவங்க நெறைய பேர் இருக்கானுங்க . “ இவர்களோட போலி பிம்பங்கள் உடைத்தெறியப்பட வேண்டும் . பொதுமக்கள் முன்னிலையில் , இவர்களோட கபட நாடங்கள வெளிக்கொண்டு வரணும் .

ஏட்டு கந்தசாமி : “ சார் !!! ..... இருந்தாலும் ,,,,,, நாங்க பார்த்த அந்த அமானுஷ்யமான விசயங்கள் , கேட்ட சப்தங்கள் எல்லாம் பொய்ன்னு நீங்க நெனைக்கிறீங்களா ???.

இன்ஸ்பெக்டர் ரவி : “ நான் எதையுமே பொய்ன்னு சொல்லல . எல்லாமே ஒரு IMAGINATION தான் .... ஒரு சின்ன லாஜிக் தான் அது . நாம தனியா இருக்கும் போது , ஒரு சின்ன சப்தம் கேட்டாக்கூட அதுவே நம்மளோட மனசுக்கு , கொஞ்சம் நெருடலாக இருக்கும் . ஆனா இவனுங்க வேண்டுமென்றே , மக்கள் மனசுல , ஒரு அமானுஷ்ய சாயத்த பூசியிருக்கானுங்க .... SO ,அதைப் பற்றி நெனைக்க , நெனைக்க , நம்மளோட மனசும் , எந்த ஒரு புது விஷயம் நடந்தாலும் , அதை இதோட தொடர்புபடுத்தியே சிந்திக்கும் . அதுதான் இப்ப மாத்தூர் கிராமத்து மக்கள் மனசுல நடந்துட்டு இருக்கு . குமாரசாமியின் மரணத்துக்கு , கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணு செத்துப் போயிருக்கு ..... SO இத அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திட்டு , பழியை , அந்தப் பொண்ணு மேல போட்ருக்கானுங்க .................... அப்படிப் பார்க்கும்போது , அன்னிக்கு என் வீட்டுக் கதவத் தட்டினது கூட ,,,,,,, இவனுங்க வேலையா இருக்கலாம்ன்னு எனக்கு நினைக்கத் தோணுது ... “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.