(Reading time: 96 - 191 minutes)

ரோந்து படையினரின் வாகனம் , மாத்தூர் கிராமத்தை நோக்கி முன்னேறியிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியும் கந்தசாமியும் இரு சக்கர வாகனத்தில் , பின் தொடர்ந்திருந்தனர் . வழி நெடுகிலும் ஒரே இருட்டு . சாலையோர மின் கம்பங்களில் வெளிச்சம் , வந்து வந்து போய்க் கொண்டிருந்தது . சற்று நிதானமாகவே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி .கொஞ்ச நேரத்தில் , மாத்தூர் கிராமத்தில் , இன்ஸ்பெக்டர் ரவிக்காகப் பார்த்து வைக்கப்பட்டிருந்த வீடு வந்திருந்தது . இன்ஸ்பெக்டர் ரவியின் கையில் , வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு ,கிளம்ப தயாராயிருந்தார் ஏட்டு கந்தசாமி . வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு ,

வீடு அருமையாக இருக்குதுய்யா ! . “ ஹ்ம்ம் !!! ஓகே ! கந்தசாமி .... நீங்க கெளம்பலாம் . BUT நாளைக்கு சீக்கிரம் வந்துருங்க .. நாம இன்வெஸ்டிகேஷனுக்கு போகனும் . “ .. என்றார் ரவி .மெல்ல தலையை ஆட்டிக்கொண்டே புறப்பட்டிருந்தார் கந்தசாமி ............

ரவி சாப்பிட்டு முடிப்பதற்குள் , கிட்டத்தட்ட மணி இரவு பத்தைக் கடந்திருந்தது . மெத்தையில் படுத்துக்கொண்டே , பிரபல கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் நிதர்சனத்தின் பக்கம் நில் ! ” என்ற நாவலைப் புரட்டிக்கொண்டிருந்தார் . பாதிப் பக்கங்களைப் படித்திருப்பார் . திடீரென்று , அந்த அறையில் இருந்த விளக்கின் வெளிச்சம் , மங்கி மங்கி எரிந்து கொண்டிருந்தது........... அதைப் பார்த்த அவர் , உடனே , தன் தலைக்குப் பக்கத்தில் வைத்திருந்த , ANDROID மொபைல் போனை எடுத்து அதை ON செய்ய முற்பட்டார் . அது CHARGE செய்யப்படாமல் , SWITCH -OFF ஆகியிருந்தது அப்போதுதான் அவருக்குத் தெரிந்திருந்தது ....... ஒரு கட்டத்தில் விளக்கின் வெளிச்சம் முற்றிலுமாக நின்றிருந்தது .... ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஊர் முழுவதும் , இருள் சூழ்ந்து ஒரே மயான அமைதி அங்கு நிலவியிருந்தது . எங்கும் ஒரு துளி கூட வெளிச்சம் இல்லை ........ திடீரென்று கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது ....... திடுக்கிட்டுப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவியின் மனதில் லேசான பதற்றம் தொற்றியிருந்தது .... மாத்தூர் கிராமவாசிகள் சொன்ன சம்பவங்கள் , அவர் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது . நிலைமையை உணர்ந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் தேடிக் கொண்டிருந்தார் .... மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது .... ஒரு வழியாக தீப்பெட்டியையும் , மெழுகுவர்த்தியையும் கண்டுபிடித்த அவர் , தீக்குச்சியைப் பற்ற வைக்கும் போது ,பதற்றத்தில் மெழுகுவர்த்தியைத் தவற விட்டார் ..... எரிகின்ற தீக்குச்சியின் வெளிச்சத்தில் , மெழுகுவர்த்தியைத் தேடிய அவர் , கட்டிலுக்கு கீழே குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார் ..... தூரத்தில் மெழுகுவர்த்தி இருப்பதைப் பார்த்த அவர் , அதை எடுக்கும்போது , திடீரென்று தீக்குச்சி அணைந்திருந்தது . மீண்டும் தீப்பெட்டியை உரசிய அடுத்த வினாடி , தன் பின்னே யாரோ நிற்பதைப் போன்று உணர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ..... திரும்பலாமா ? வேண்டாமா ? என்ற சிந்தனையில் , மெழுகுவர்த்தியில் , ஒளியை ஏற்றியிருந்த அவர் , சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , பின்னே திரும்பினார் .... அங்கு யாரும் இல்லை . கதவு தட்டப்படும் சப்தம் மேலும் நீடித்துக்கொண்டிருந்தது . இந்த முறை இன்ஸ்பெக்டர் ரவி பதற்றமில்லாமல் ,அலமாரியில் இருந்த , போலீஸ் ரிவால்வரை கையில் எடுத்துக்கொண்டு , மெழுகுவர்த்தியை , அணையாமல் பிடித்துக்கொண்டே கதவுப் பக்கத்தில் வந்த அவர் , மெல்ல கதவைத் திறந்து பார்த்தார் . வெளிச்சம் தெரியும் இடமெங்கும் , வெளியே ஆள் அரவமற்று வெறிச்சோடி இருந்தது ஒரே நிசப்தம் . பயத்தில் உறைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . ஒரு கையில் மெழுகுவர்த்தியோடும் மற்றொரு கையில் ரிவால்வருடனும் வீட்டைச் சுற்றி வந்துகொண்டிருந்தார் . இரவு நேரப் பறவைகளின் சப்தம் , மேலும் பீதியை கிளப்பியிருந்தது . ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்திருந்தார் . திடீரென்று ஏதோ ஒரு உருவம் , தூரத்திலிருந்து நகர்ந்து வருவதைப் போல் இருந்தது . பயத்தில் நெஞ்சைப் பிடித்த படியே , அப்படியே வீட்டுச் சுவற்றில் சாய்ந்தபடி உட்கார்ந்தார் . மெழுகுவர்த்தி கீழே உருண்டு எரிந்து கொண்டிருந்தது . இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அவரின் இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதை அவரால் உணர முடிந்திருந்தது . அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை . அவரின் சிந்தனையில் பல எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தன .இதுதான் என் வாழ்வின் கடைசி நாளா ?? என்றெல்லாம் எண்ணத் தோன்றியிருந்தது . கடைசியாக அவர் படித்த நிதர்சனத்தின் பக்கம் நில் ! ‘ என்ற நாவலில் இருந்த ஒரு வாசகம் ,அப்போது அவருக்கு நியாபகம் வந்தது .

 இளமை உன் தோள்களில் இருக்கும்போதே , எது நிஜம் என்பதைத் தொட்டு விடு ! “ என்கின்ற வாசகம் , திடீரென்று அவருக்கு நியாபகம் வந்தது . அது ஒரு நேர்மறையான உத்வேகத்தை அவருக்கு அளித்தது . எதுவாக இருந்தாலும் சரி , என்ன நடந்தாலும் சரி . அது என்ன என்பதை ஒரு கை பார்த்து விடவேண்டும் என்கிற எண்ணத்தோடு , சுவற்றைப் பிடித்துக் கொண்டே ,கடினப்பட்டு எழுந்தார் .... ரிவால்வரை முன்னே நீட்டிக் கொண்டே அந்த உருவத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார் . மீண்டும் மீண்டும் அந்த வாசகம் அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அந்த உருவம் அவர் கண்ணில் இருந்து மறைந்திருந்தது . நல்ல நேரமாக மின்சாரம் மீண்டும் வந்து வெளிச்சம் பரவியிருந்தது . காற்று வேகமாக வீச ஆரம்பித்திருந்தது ....வலதுபுறமாக ஏதோ சலசலப்பு சப்தம் கேட்டது .... அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவி , அங்கு ஒரு ஒருவம் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டார் அதை வேகமாகப் பின் தொடர்ந்திருந்தார் ரவி . அதிவேகமாக ஓடிக் கொண்டிருந்த அந்த உருவம் , கண் இமைக்கும் நேரத்தில் , சோளக்காட்டுக்குள் ஓடி மறைந்திருந்தது . கடைசிவரை பின்தொடர்ந்திருந்த இன்ஸ்பெக்டர் ரவி , களைப்பு மிகுதியால் , மூச்சு வாங்கினார் . சற்று நிதானித்த அவர் , தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.