(Reading time: 96 - 191 minutes)

 நான் வெறும் விவசாயப் பொருட்களையே உணவாக உட்கொள்கிறேன் . தினமும் வயல் வேளைகளில் ஈடுபடுகிறேன் . ஓய்வு என்பது எனக்கு அறவேயில்லைன்னு அவர் சொல்லிருக்கிறார் . “SO , கண்டிப்பா இவ்வளவு சீக்கிரம் , அவருடைய இதய வால்வுகள் பழுதடைய வாய்ப்பே இல்ல இது தான் என்னை இந்த கேஸ்ல மேலும் , மேலும் , விசாரணை பண்ண , எனக்கு உத்வேகம் கொடுக்கிறது “ என்று முடித்தார் .

தவபுண்ணியத்தின் முகத்தில் அதிர்ச்சி தாண்டவமாடியிருந்தது . தூக்கி வாரிப் போட்டிருந்தது சிவனேசனுக்கும் , ராமலிங்கத்துக்கும் .

சிவநேசன் : ஓகே ! ரவி உங்க இன்வெஸ்டிகேஷன ஆரம்பீங்க . எப்படியோ இந்த பிரச்சனை தீர்ந்தா போதும் என்று மழுப்பினார் .

இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவர்களிடமிருந்து விடைபெற்று போலீஸ் ஜீப்பில் ஏறிப் புறப்பட்டிருந்தனர் .

தவபுண்ணியத்தின் முகம் இருண்டிருந்தது . அவரது முகத்தைப் பார்த்த சிவநேசன் சற்று ஆறுதலான வார்த்தைகளை பேசினார் .

சிவநேசன் : நீங்க கவலைப் படாதீங்க தலைவரே ! இன்னிக்கு ராத்திரி அவன எப்படி அலற விடப்போறோம்னு பாருங்க தலைவரே !.

தவபுண்ணியம் : அவன் கண்டிப்பா பயபட்ற ஆளே இல்ல . எனக்கு என்னவோ பயமாயிருக்குது . நம்ம மேல அவனுக்கு ஒரு துளி கூட சந்தேகம் வரக்கூடாது . ஆனா அவன ஏதாவது பண்ணியாகனும் . கொஞ்சம் பொறுமையா இருங்க . நாளைக்கு, அந்த உரம் தயாரிக்கிற கம்பெனிக்காரங்க கூட ( NEXTGEN FRETILIZERS LTD (உரம் தயாரிப்பு நிறுவனம்) ) மீட்டிங்க முடிச்சிட்டு காச வாங்குறவரைக்கும் கொஞ்சம் அவசரப் படாதீங்க .

ராமலிங்கம் : தலைவரே ! நீங்க தைரியமா போங்க . நாங்க பாத்துக்கறோம் .

இருண்ட மனதோடு நடையைக் கட்டியிருந்தார் தவபுண்ணியம் . சிவநேசனும் , ராமலிங்கமும் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் .

நேரம் இரவு 7:3௦ மணி . போலீஸ் ஜீப் சரியாக , தூத்தூர் காவல் நிலையத்தை அடைந்திருந்தது . இருவரும் இறங்கி உள்ளே நடந்திருந்தனர் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரத்திற்கு CALL பண்ணுங்க . அவர்கிட்ட இந்த கேஸ் விசயமா சில சந்தேகங்கள கேக்க வேண்டியிருக்கு “ ... என்றார் .

எஸ் சார் ! என்றவர் மேசையில் இருந்த தொலைபேசியில் எண்களைத் தட்டினார் . “ இந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது “ என்று மறுமுனையில் பதிவு செய்யப் பட்ட பெண்ணின் குரல் பேசியது .

ஏட்டு கந்தசாமி : சார் ! போன் சுவிட்ச் ஆப் சார் !

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிறிது நேரம் யோசித்துவிட்டு......) ........... ஹ்ம்ம் ! ஓகே ! விடுங்க நாளைக்கு பாத்துக்கலாம் .... அப்புறம் நம்ம குமாரசாமியோட போன் நம்பர் குறித்த தகவல்கள் கேட்ருந்தேனே ? என்னாச்சு ???

ஏட்டு கந்தசாமி : சார் ! அவர் இதுவரைக்கும் பேசின , எல்லா நம்பர்சையும் TRACE பண்ணியாச்சு . இந்தாங்க சார் அதோட DETAILS .

அதைப் புரட்டிப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , சில நம்பர்களை மட்டும் வட்டமிட்டுக் கொண்டிருந்தார் .

சரியாக எட்டு மணியளவில் , இரவு நேர சிறப்பு ரோந்து படையினர் 5௦ பேர் தூத்தூர் காவல் நிலையத்துக்கு வெளியே சல்யூட்டுடன் நின்றிருந்தனர் அவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ரவி , அவர்கள் முன்னிலையில் சத்தமான தொனியில் பேசலானார் .

 HELLO GUYS ! GOOD EVENING ஒரு கேஸ் விசயமா , மாத்தூர் கிராமத்துக்கு , இரவு நேரங்கள்ல நம்முடைய பாதுகாப்பு தேவைப்படுது . அதனாலதான் மேலிடத்துல , உத்தரவு வாங்கி , உங்க 5௦ பேர SELECT பண்ணிருக்கேன் . SO , மாத்தூர்ல , எந்த அசம்பாவிதமும் நடக்காம பாத்துக்க வேண்டிய பொறுப்பு நம்மளோடது . அங்க பேய் நடமாட்டம் இருக்கிறதா எல்லாரும் பயபட்றாங்க.அப்படி எதுவும் அங்க இல்லன்னு நிரூபிக்கத் தான் நான் உங்கள அங்க அனுப்புறேன் . வரப்போகிற ரெண்டு வாரம் நாம அங்க பாதுகாப்பு குடுக்கப் போறோம் . நாம குடுக்கப் போற பாதுகாப்புல தான் அவங்களோட பயத்தை போக்க முடியும் . ஒருவேளை , சந்தேகத்திற்கிடமான எதாயவது நீங்க பாத்தீங்கன்னா ! உடனே கன்ட்ரோல் ரூம்க்கு தகவல் குடுத்துருங்க . “YOU CAN CALL ME ANYTIME . I AM REACHABLE AT ANYTIME . BE ALERT AND GO AHEAD ! “ என்று பேசி முடித்திருந்தார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.