(Reading time: 96 - 191 minutes)

டுத்த நாள் காலை 11 மணி . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் படு வேகத்துடன் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் . மாத்தூர் பிரதான சாலையை அடைந்திருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : ” சார் ! இப்ப நாம எங்க போறோம் சார் “ ???

இன்ஸ்பெக்டர் ரவி : “ பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் . அங்க போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் கந்தசாமி ? “

ஏட்டு கந்தசாமி : “ சார் கிட்டத்தட்ட ஒன்றை மணி நேரம் ஆகும் சார் “ என்று வண்டியை வேகமாக செலுத்தியிருந்தார் ............

 ஆனா இப்ப அங்க எதுக்கு சார் நாம போறோம் ? “

இன்ஸ்பெக்டர் ரவி : வேளாண் ஆசிரியர் குமாரசாமியோட CONTACTSல , யார் யார்கிட்டல்லாம் , அவர் அதிகமா பேசிருக்கார்ன்னு பாத்ததுல , பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துல ,அவரோடுகூட வேலை பார்த்த , சதாசிவமும் ஒருத்தர் . குமாரசாமி , கடைசியாப் பேசின நம்பரும் சதாசிவத்தோடதுதான் SO JUST ஒரு FORMAL ENQUIRY . அவ்ளோதான் .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஏதோ ஒரு மாதிரியா இருக்கீங்க .. நேத்து இராத்திரி ஏதாவது நடந்துச்சா ?

இன்ஸ்பெக்டர் ரவி : ஆமாய்யா ! ராத்திரி கதவு தட்ற சத்தம் கேட்டுச்சு அதுக்கப்புறம் வெளிய போய் பார்த்தேன் .............................

ஏட்டு கந்தசாமி : (.....அதிர்ந்தவராய்......) என்ன சார் ? என்ன பாத்தீங்க ? எதாவது அமானுஷ்யத்தப் பாத்தீங்களா ?

இன்ஸ்பெக்டர் ரவி : (......சிரித்துக்கொண்டே......) நான் பாத்த உருவம் அமானுஷ்யமா ? இல்ல அது ஒரு ஆசாமியா ??ன்னு , இன்னும் எனக்குத் தெளிவா தெரியல . ஆனா அதோட அசைவுகள் ஒவ்வொன்னும் இன்னும் , என் கண்ணுக்குள்ளேயே இருக்குது .

ஏட்டு கந்தசாமி : சார் ..........................???????????????? உங்களுக்கு பயமாவேயில்லையா !!!

இன்ஸ்பெக்டர் ரவி : “ பயம் இல்லைன்னு யாருய்யா சொன்னா ?? பயமாத்தான் இருந்துச்சு . போலீஸ் வேலைக்கு வந்ததுக்கப்புறம் , இதயெல்லாம் ஒரு பொருட்டா எடுத்துக்க கூடாதுன்னு ,நெனச்சு , அந்த உருவத்தை பின் தொடர்ந்தேன் . ஆனா அது கண் இமைக்கிற நேரத்தில் , ஓடி மறஞ்சிடுச்சு . ஆனா இன்னொரு தடவ , அது என் கண்ணுல பட்டுச்சு..... அவ்ளோதான் “ .

ஏட்டு கந்தசாமி : “ சார் ! உண்மையாலுமே நீங்க பெரிய ஆள் தான் சார் . நான் மட்டும் அங்க இருந்திருந்தேனா , பயத்துலயே செத்துருப்பேன் . இந்நேரம் நீங்க எனக்கு மலர்வளையம் வச்சிருக்க வேண்டியிருக்கும் “ என்றார் சிரித்துக்கொண்டே ..

இன்ஸ்பெக்டர் ரவி : (.....சிரித்தவாறே......) சரி ! கொஞ்சம் வேகமாப் போங்க . நமக்கு நேரம் ரொம்ப குறைவா இருக்கு .

ஒரு மணிநேரம் இருபது நிமிடத்தில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை அடைந்திருந்தார்கள் . தஞ்சாவூரில் , வல்லம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்த , பெரியார் நகரில் ,கிட்டத்தட்ட 216 ஏக்கர்களில் , பிரம்மாண்டமாக காட்சியளித்தது அந்த பல்கலைக்கழகம் . எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு ,

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் . வல்லம் , தஞ்சாவூர்  613403 என்று செதுக்கப்பட்ட எழுதுக்கள் , அந்த பிரம்மாண்ட பல்கலைக்கழகத்தின் , தலைப் பகுதியை அலங்கரித்திருந்தது . சற்று விலாசமாக இருந்த போர்டிகோவில் , வண்டியை நிறுத்தி விட்டு , வெளியே நடந்து வந்தார்கள் . உள்ளே , ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே , வரவேற்பறையை அடைந்திருந்தார்கள் . DEPARTMENT OF AGRICULTURE என்று வலதுபுறமாக அம்புக்குறிடப்பட்டிருந்த பதாகையைப் பார்த்தவுடன் , வலதுபுறம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் .

 இந்தியாவின் தேசியத் தொழில் விவசாயம் . உழவனின் வியர்வையில் தான் , இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது “ .

 இயற்கை உரங்களை நிராகரித்து விடாதீர்கள் “

 மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தவிருங்கள் . ”

 விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு , எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம்முடையது 

என்கின்ற வாசங்ககள் வழியெங்கும் நிரம்பியிருந்தது . ஆங்காங்கே அரியவகை மரங்கள் , தங்கள் பெயர்களுடன் கூடிய விளக்கத்தைத் தாங்கிக் கொண்டு , நின்று கொண்டிருந்தன . ஒருவழியாக AGRICULTURE DEPARTMENTக்குள் நுழைந்திருந்தார்கள் . பழங்காலத்தில் இருந்து , இன்று வரை மனிதன் பயன்படுத்திய விவசாயக் கருவிகள் அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது ........... சதாசிவம் , வேளாண் பேராசிரியர் . என்ற பெயர்பலகை தொங்கப்பட்டிருந்த அறையில் நுழைந்திருந்தார்கள் . உள்ளே பழைய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சதாசிவம் , காக்கிச்சட்டைகளைப் பார்த்ததும் , எழுந்து நின்று வரவேற்றார் . அவர் முகத்தில் தொங்கிக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியும் நரைமுடிகளால் மூடப்பட்டிருந்த கபாலமும் , அவரின் 6௦ வயதைத் தெளிவாகக் காட்டியிருந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.