(Reading time: 96 - 191 minutes)

பேராசிரியர் சதாசிவம் : “ வணக்கம் சார் ! உக்காருங்க . சொல்லிருந்தீங்கன்னா ! நானே நேர்ல வந்திருப்பேனே “ என்றார் .

ஏட்டு கந்தசாமி : பரவாயில்லைங்க சார் ! . நாங்க குமாரசாமி ஐயாவோட மரணம் பற்றிய விசாரணைக்காக வந்துருக்கறோம் .

இன்ஸ்பெக்டர் ரவி : அது ஒரு திட்டமிட்ட கொலையாகக்கூட இருக்கலாம்ன்னு நாங்க சந்தேகப்பட்றோம் ................. குமாரசாமி ஐயா ,,, அடிக்கடி உங்களோட தான் தொலைபேசியில் பேசியிருக்கிறார் . இறப்பதற்கு முன் , அவர்கூட கடைசியாப் பேசின ஆளும் நீங்கதான் . SO , நீங்க சொல்லப் போற பதில்களில் இருந்துகூட , எங்களுக்கு ஏதாவது துப்பு கெடைக்க வாய்ப்பிருக்கிறது . அவரபத்தி , உங்களுக்குத் தெரிஞ்ச தகவல்கள , நீங்க தைரியமா சொல்லுங்க . அது கூட இந்த கேஸ்ல உபயோகமா இருக்கலாம் .

பேராசிரியர் சதாசிவம் : இன்ஸ்பெக்டர் சார் ! உங்களோட கேள்விகளக் கேளுங்க . எனக்குத் தெரிந்த உண்மைகள , மறைக்காமல் சொல்றேன் .

ஏட்டு கந்தசாமி : அவர் பேயடிச்சு இறந்திட்டதா எல்லாரும் சொல்றாங்களே . அது உண்மையாக இருக்கும்னு நம்புறீங்களா ?

(.....சற்று நேரம் யோசித்த சதாசிவம் , மெல்ல பேச ஆரம்பித்தார் .....)

பேராசிரியர் சதாசிவம் : எனக்கும் அந்த மாதிரி விஷயங்களில் , நம்பிக்கை இல்லை . ஆனா !............ அது , எனக்கே ஆச்சர்யமாத்தான் இருக்கு . அங்கு பேய் நடமாட்டம் இருப்பதாக ,ஊர்மக்களே சொல்லும்போது , அதுக்கு நாம எப்படி மறுப்பு சொல்ல முடியும் ? . குமாரசாமி ஐயா ..................................................., விவசாயத்துறைல எங்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி .......... இந்த பல்கலைக்கழகத்துல , எனக்கு முன்னாடி , வேளாண் பேராசிரியரா இருந்தவர் . விவசாயம் குறித்து பல ஆராய்ச்சிகள் பண்ணியிருக்கிறாரு . பல நூல்கள் எழுதியிருக்கிறார் . கடைசியா அவர் எழுதின “ நம் பாரத மண்ணின் மகத்துவம் பாரீரோ ! “ என்ற கட்டுரைக்காக , மத்திய அரசு விருது வழங்கி சிறப்பித்திருக்கின்றது . அவருடைய இழப்பு என்பது , விவசாயத்துறைக்கே ஈடுகட்ட முடியாத ஒரு பேரிழப்பு .

சதாசிவத்தின் ஒவ்வொரு அசைவையும் , இன்ஸ்பெக்டர் ரவி கூர்ந்து கவனித்தார் . குமாரசாமி ஐயாவின் பிரிவை அவர் முகத்தில் காண முடிந்தது.

இன்ஸ்பெக்டர் ரவி : குமாரசாமி ஐயாவுக்கு , எதிரிகள் யாராச்சும் .............

பேராசிரியர் சதாசிவம் : ஹ்ம்ம் !!! எனக்குத் தெரிந்தவரை அவருக்கு எதிரிகளே கிடையாது . அவர் எதுக்காகவும் , யார்கிட்டயும் கோபப்பட்டு நான் பார்த்ததில்ல ....... ஏன்னா ! அவர் அதிகமா பழக்கம் வச்சிக்கிட்டதெல்லாம் , ஏழைபாழைங்க கூடத்தான் . அந்தக் காலத்து விவசாய உத்திகள , மீண்டும் , இந்த நவீன காலத்துல பயன்படுத்துவதைத் தான் , அவர் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் .

ஏட்டு கந்தசாமி : சார் !.................... அப்படி என்னதான் நீங்களும் , அவரும் போன்ல பேசிக்குவீங்க ????.

பேராசிரியர் சதாசிவம் : (....சிரித்துக்கொண்டே.....) “ வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையைப் பத்தி ......... வாழப் போறதே , இன்னும் கொஞ்ச நாள் தானே ! அதுக்குள்ள விவசாயத்தப் பத்தின ஒரு விழிப்புணர்வ , வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் . அதப்பத்தி தான் அவர் சதாகாலமும் சிந்தித்தார் . குறிப்பா ! எங்க வேளாண் பிரிவு இளைஞர்கள் மத்தியில் , எப்படி அதைக் கொண்டுபோய் சேர்க்கணுங்கரதப் பத்தி தான் என்கிட்ட அவர் பேசுவார் . இதுவரைக்கும் அவர் சொன்ன கருத்துக்களையெல்லாம் , தொகுத்து , ஒரு புத்தகமா எழுதியிருந்தேன் அதை அவர் கையாலயே வெளியிடலாம்ன்னு நெனச்சிருந்தேன் . ஆனா அதுக்குத்தான் வாய்ப்பில்லாமல் போச்சு “. என்றார் வருத்தத்துடன் .......

இன்ஸ்பெக்டர் ரவி : அவர் என்னைக்காவது மன வருத்தப்பட்டு எதாச்சும் பேசிருக்காரா ??? நல்லா யோசிச்சுப் பாருங்க ..

பேராசிரியர் சதாசிவம் : (.....நன்றாக யோசித்துவிட்டு.....) என்கிட்ட இதுவரைக்கும் அப்படி பேசினதில்ல சார் !

கொஞ்ச நேர மௌனம் ........... இன்ஸ்பெக்டர் ரவி ஏமாற்றத்துடன் ஏட்டு கந்தசாமியைப் பார்க்க அவரும் போகலாம் என்பதைப் போல தலையை ஆட்டியிருந்தார் . சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்த சதாசிவம் , திடீரென்று அவர்களைப் பார்த்து ,

 சார் ஒரு நிமிஷம் . கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவர் பேசும்போது , ஒரு விஷயத்த என்கிட்ட சொன்னார் ... அது எந்த அளவுக்கு உங்களுக்கு , உபயோகமா இருக்கும்ன்னு தெரியல .இருந்தாலும் சொல்றேன் . “ என்றார் . இன்ஸ்பெக்டர் ரவியும் , கந்தசாமியும் ஆர்வமாய் அவரைப் பார்க்க , சதாசிவம் தொடர்ந்தார் ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.