(Reading time: 96 - 191 minutes)

NEXTGEN FRETILIZERS LTD என்கிற உரம் தயாரிப்பு நிறுவனம் , கொஞ்ச நாளைக்கு முன்னாடி , அவங்களோட புதியவகை உரங்கள அறிமுகப்படுத்தியிருந்தாங்க . அந்த உரங்களத்தான் இந்த முறை , விவசாயத்துக்கு பயன்படுத்தப் போறதா , நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்களான தவபுண்ணியம் ஐயாவும் , அவரது சகாக்களும் முடிவு பண்ணியிருந்தாங்க . அப்ப அந்த உரங்கள சோதனை பண்றதுக்காக , நம்ம குமாரசாமி ஐயாவும் உடன் போயிருந்தார் . அதைச் சோதித்துப் பார்த்த குமாரசாமி ஐயா , இந்த ரசாயன உரங்கள் விவசாயத்திற்கு ஏற்றதல்ல . இதைப் பயன்படுத்தினால் நம்முடைய மண் மலடாகிப் போய்விடும் இந்த செயற்கை உரங்களால் நமக்கு மிகப்பெரிய அபாயம் இருக்கிறது . இதைத் தவிர்த்து விடுங்கள்ன்னு நம்ம மாத்தூர் கிராமத்தலைவர்கள் கிட்ட சொல்லியிருந்தார் . அவங்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்ன்னு அவர் என்கிட்ட சொல்லியிருந்தார் “ என்று முடித்தார் சதாசிவம் . இதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி , சற்றே தெளிவு பிறந்ததை அடுத்து  சார் ! நீங்க குடுத்த தகவல்களுக்கு , ரொம்ப நன்றி குமாரசாமி ஐயாவப் பத்தி நாங்க நெறைய தெரிஞ்சுக்கிட்டோம் .நாங்க வர்றோம் என்று கிளம்பியிருந்தார்கள் .

NEXTGEN FERTILIZERS LTD “ - உரம் தயாரிப்பு நிறுவனம் , மாத்தூரின் பிரதான சாலையில் , வடக்கு நோக்கி அமைந்திருந்தது ......... நன்றாக திணிக்கப்பட்ட உரமூட்டைகள் , அங்கு மலை போல் குவிக்கப்பட்டிருந்தது . கட்டுக்கோப்பான உடம்புகளுடன் கூடிய வேலையாட்கள் , அந்த மூட்டைகளை , கனரக வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர் . நன்றாக செதுக்கப்பட்ட உடற்கட்டுகளில் , அவர்களின் கடின உழைப்பின் பயன் தெரிந்தது . வரவேற்பறையின் உள்ளே அந்த நிறுவனத்தின் பங்குதார்களான பிரனேஷும் , திலீபனும் வெள்ளை நிற ஆடைகளில் ஜொலித்திருந்தார்கள் . சற்று நேரத்தில் , மிகுந்த இரைச்சலுடன் வந்த , போலீஸ் ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் ரவியும் ஏட்டு கந்தசாமியும் வந்து இறங்கியிருந்தார்கள் . இதை சற்றும் எதிர்பாராத ப்ரனேஷும் , திலீபனும் திகைத்து நின்றிருந்தார்கள் . இனம்புரியாத ஒரு பதற்றம் அவர்களைத் தொற்றியிருந்தது . சற்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு , அவர்களை வரவேற்று உட்கார வைத்திருந்தார்கள் .

திலீபன் : “ WELCOME சார் ! IM திலீபன் . and HE IS பிரனேஷ் .“ என்று இருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ WELL MR. திலீபன் ......... WE ARE FROM தூத்தூர் போலீஸ் ஸ்டேஷன் . IM இன்ஸ்பெக்டர் ரவி . and HE IS கந்தசாமி . ஒரு சின்ன ENQUIRYக்காக வந்துருக்கோம் “ .

பிரனேஷ் : “ எஸ் சார் ..............! நாங்க முழு ஒத்துழைப்பு கொடுக்க கடமைப் பட்டுருக்கோம் . “ என்றான் புரியாத புதிராக .

ஏட்டு கந்தசாமி : குமாரசாமி ஐயா , மரணம் தொடர்பான விசாரணை தான் இது . அவர் கடைசியா கலந்து கிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சிகள் , மற்றும் அவர் போன இடங்களிலெல்லாம் விசாரணை நடந்துகிட்டு இருக்குது . அது சம்பந்தமான ஒரு FORMAL என்குயரி தான் இது . SO ஒன்னும் பயப்பட தேவையில்ல “ .

( அதிர்ந்து போயிருந்தார்கள் ப்ரனேஷும் திலீபனும் .... அவர்கள் முகத்தில் கலவரம் வெடித்திருந்தது . ) .

இன்ஸ்பெக்டர் ரவி : “ என்ன MR பிரனேஷ் ? பேச்சையே காணோம் “.. என்றார் மெல்ல சிரித்தவாறே .

பிரனேஷ் : “ NO ! NO ! , அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைங்க சார் . அவரோட மரணத்த எங்களாலையே நம்ப முடியல . வயசானாவே அப்படிதான் சார் .... குமாரசாமி ஐயாவ , நாங்க கடைசியா எப்ப பாத்தோம்ன்னா....... என்று இழுத்தார் . உடனே பக்கத்தில் இருந்த திலீபன் நிலைமையைப் புரிந்துகொண்டு , “ சார்ர்ர்ர்ர்ர்ர்…………… ! போன மாசம் , எங்களோட கம்பெனி உரங்கள , கிராமத்து விவசாயத்துக்கு , பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியிருந்தோம் . அதை சோதனை பண்றதுக்காக , மாத்தூர் கிராமத்துல இருந்து , தவபுண்ணியம் , ராமலிங்கம் ,அப்புறம் ...... சிவநேசன் இவங்கெல்லாம் வந்துருந்தாங்க . கூடவே நம்ம குமாரசாமி ஐயாவும் வந்துருந்தாரு . அப்பதான் நாங்க , அவரக் கடைசியாப்பார்த்தோம் . ஆனா .......... நல்லாருந்த மனுஷன் , இவ்வளவு சீக்கிரம் போய்ட்டாரேன்னுதான் வருத்தமா இருக்குது சார் ... , போகிற காலம் வந்துச்சுன்னா போக வேண்டியது தானே “ என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஹ்ம்ம் ! .... ஓகே ..... அப்புறம் என்னாச்சு ? உர சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சா ? “

பிரனேஷ் : “ ஆமா சார் ! சோதனையெல்லாம் முடிஞ்சுடுச்சு . அவங்க எல்லாத்தையும் , தரவா சோதனை பண்ணிட்டு , எங்களோட உரங்கள பயன்படுத்த ஒப்புதல் குடுத்துட்டாங்க . இன்னும் ஒரு வாரத்துல , எங்க கம்பெனியோட உரங்கள் , பயன்பாட்டுக்கு வந்துரும் “ .

( பிரனேஷின் இந்த பதிலைக் கேட்டதும் அதிர்ந்து போயிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் . பேராசிரியர் சதாசிவத்தின் கருத்துக்களுக்கு , முற்றிலும் முரண்பட்டதாக இருந்தது பிரனேஷின் அந்த பதில் . சற்று சுதாரித்துக்கொண்ட கந்தசாமி , அடுத்த கேள்வியைத் தொடங்கினார் ............. )

ஏட்டு கந்தசாமி : “ நம்ம குமாரசாமி ஐயா...அதப் பத்தி என்ன சொன்னாரு ?

திலீபன் : (.....பதற்றத்துடன்......) “ எங்க கம்பெனி உரங்கள பயன்படுத்த , அவர்தான் சார் , மொதல்ல ஒப்புதல் குடுத்தாரு ...... ” என்றார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.