(Reading time: 96 - 191 minutes)

குமாரசாமியின் மரணத்தில் இருக்கின்ற மர்மத்தை , இந்த தகவல் மேலும் உறுதிப்படுத்தியிருந்தது . இவர்களிடத்தில் , ஏதோ ஒரு உண்மை மறைந்திருப்பதை , ஏட்டு கந்தசாமியின் கண்கள் ,இன்ஸ்பெக்டர் ரவிக்கு அடையாளம் காட்டியிருந்தது . அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் வழக்கமான விசாரணை போல , அவர்களிடம் விசாரித்துவிட்டு வெளியே வந்தனர் .....

இன்ஸ்பெக்டர் ரவி : “ ஓகே ! THANK YOU FOR YOUR KIND CO-OPERATION . நாங்க கெளம்புறோம் . “ என்று வண்டியில் ஏறியிருந்தார்கள் அவர்கள் போகும் வரை பார்த்திருந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரனேஷ் “ ஒரு வழியா அவங்கள சமாளிச்சு அனுப்பிட்டோம் . கொஞ்ச நேரத்துல , கதி கலங்கிடுச்சே !..

திலீபன் : “ எனக்கும் அப்படிதான் இருந்துச்சு . எதுக்கும் , இந்த விசயத்துல நாம கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கணும் ..... “ என்று சொல்லி முடித்த அடுத்த வினாடி , திலீபனின் செல்போன் திடீரென்று அலறியது . எடுத்துப் பார்த்த அவர் , ஹலோ ! என்றார் .. மறுமுனையில் , சிவநேசன் பேசினார் .

சிவநேசன் : “ தம்பி ! நான் சிவநேசன் பேசுறேன் ... நாங்க இப்ப அங்கதான் வந்துட்டு இருக்கோம் ..... ரெடியா இருங்க .. இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவோம் . “ என்றவுடன் இணைப்பைத் துண்டித்திருந்தார்....

எரிச்சலுடன் செல்போனை பாக்கெட்டில் வைத்தான் தீலீபன் .

பிரனேஷ் : “ போன்ல யாரு ? “

தீலீபன் : “ மாத்தூர் கிராமத்துக்காரனுங்க .... காசு வாங்கறதுக்குன்னே ! வரிஞ்சுகட்டிட்டு வந்திட்டுருக்கானுங்க “ என்றான் உச்சகட்ட எரிச்சலோடு .

பிரனேஷ் : வரட்டும் ! வரட்டும் ! ................ சரி ! அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு ஒரு யோசனை தோணுது .....

திலீபன் : என்ன யோசனை ????

பிரனேஷ் : “ நாம எதுக்குடா காசு குடுக்கணும் ?? . இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து , இன்ஸ்பெக்டர் வந்துட்டு போனதைச் சொல்லி அவங்கள மெரட்டுவோம் . வேறு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா , அவனுங்கள போட்டு குடுத்துருவோம்ன்னு சொல்லி பயமுறுத்துவோம் நாமளா பாத்து , என்ன குடுக்கறோமோ , அதை வாங்கிட்டு போகட்டும் “ ... நீ என்ன சொல்ற ???

திலீபன் : “ எனக்கென்னமோ ? இது சரியாப்படல .... இருந்தாலும் , நீ சொல்றியேன்னுதான் பாக்குறேன் ” ..

பிரனேஷ் : “ விடுடா ! நான் பாத்துக்கறேன் .....” என்றவன் ,,,,, வேலையாட்கள் பதிவேட்டைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான் .

 என்னடா யாரோ ஒருத்தன் , இன்னிக்கு வேலைக்கு வர்ல போல இருக்கு . “

திலீபன் : “ ஆமாண்டா ! அவன் எதோ பேயப் பார்த்து பயந்துருக்கானாம் ... அதுனாலதான் அவன் இன்னிக்கு லீவாம் .....” என்றான் சிரித்துக்கொண்டே .

பிரனேஷ் : “ இந்த மாத்தூர் கிராமத்துக்காரனுங்களுக்கு வேற வேலையே இல்ல போல . லீவ் எடுத்துக்கறதுக்காக , என்னல்லாம் , சாக்குபோக்கு சொல்றானுங்க பாத்தியா ...“ என்றான் .

சரியாக அரைமணி நேரம் ... மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியத்தின் , ஸ்கார்பியோ கார் , உள்ளே வந்திருந்தது . காரிலிருந்து வேலைக்காரன் பொன்னையா முதல் ஆளாக வெளியே இறங்கினான் . சிவநேசனும் ராமலிங்கமும் பின்னே இறங்க , கடைசியாக இறங்கினார் தவபுண்ணியம் . வேலைக்காரன் பொன்னையாவைப் பார்த்த அவர் , 

 நீ இங்கயே இரு நாங்க போயிட்டு வந்தர்றோம் “ என்று அவனை காருக்குப் பக்கத்தில் , நிக்க வைத்துவிட்டு , முன்னேறினார் . பிரனேஷும் , திலீபனும் , வேண்டா வெறுப்பாக ,அவர்களை வரவேற்றிருந்தனர் . அனைவரும் உள்ளே சென்றவுடன் அலுவலகக் கதவுகளையும் ஜன்னலையும் சாத்தியிருந்தார்கள் .

ராமலிங்கம் : “ என்ன பிரனேஷ் ? வெளியே , வேலையெல்லாம் படு பயங்கரமா நடந்துகிட்டு இருக்குது போல “ , என்றார் சிரித்தவாறே .

பிரனேஷ் : “ ஆமாங்கய்யா ! இந்த வாரத்துக்குள்ள எல்லா வாடிக்கையாளர்களுக்கும் உரங்கள கொண்டுபோய் சேர்க்கணும் அதுக்கான ஆயத்த பணிகள் தான் இப்போ வேகமா போயிட்டு இருக்கு . “

சிவநேசன் : “ அப்ப அடுத்த வாரத்துக்குள்ள நம்ம மாத்தூர் கிராமம் முழுவதற்கும் உங்க உரங்கள தான் உபயோகப்படுத்த போறாங்க அப்படித்தானே ! இல்லையா ! “

திலீபன் : “ ஆமாம்யா ! “ என்றவன் , உள்ளே சென்று ஒரு பையை எடுத்து வந்து கொடுத்தான் .

அதை வாங்கிப் பார்த்த ராமலிங்கமும் , சிவநேசனும் உள்ளே இருந்த பணக்கட்டுகளைப் பார்த்தவுடன் , எண்ண ஆரம்பித்தனர் தவபுண்ணியம் எதுவும் பேசாமல் , அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார் . பணத்தை எண்ணிக் கொண்டிருந்த அவர்களின் முகம் , ஒரு கட்டத்தில் , மாறியிருந்தது திடீரென்று முகம் சிவந்த ராமலிங்கம் அவர்களைப் பார்த்து ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.