ஏட்டு கந்தசாமி : “ சார் !!! இதுல எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு . மாத்தூர் கிராமத்துல , அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குதுன்னு , வேதாந்த சுவாமிகள் ஏன் சொல்லணும் ?? “
(....சற்று நேரம் யோசித்துவிட்டு....)
இன்ஸ்பெக்டர் ரவி : “ எனக்கும் அது சந்தேகத்திற்கிடமாத்தான் இருக்குது . ஏன் அவர் இத சொல்லணும் ? . தவபுண்ணியம் , சிவநேசன் , ராமலிங்கம் , வேதாந்த சுவாமிகள் , இவங்க எல்லாருமே , அமானுஷ்யம்ங்கற ஒரே விசயத்துல ஒத்துப்போறாங்க . SO , இந்த விசயத்தில , இவங்க எல்லாருக்குமே தொடர்பு இருக்குமோன்னு நான் சந்தேகப்பட்றேன் . மொதல்ல ,விசாரணை பண்ண வேண்டிய விதத்தில , மாத்தூர் கிராமத்தலைவர்கள விசாரிச்சா , பல உண்மைகள் வெளில வந்துரும் . “ என்றார் . திடீரென்று மழை , தூறல்போட ஆரம்பித்திருந்தது .சற்று நேரத்தில் , அதுவே பெரிய மழையாக உருமாறியிருந்தது . அதற்குள் தூத்தூர் காவல் நிலையம் வந்திருந்தது . ஜீப்பிலிருந்து வெளியே இறங்கியதும் , வேகவேகமாக இருவரும் உள்ளே புறப்பட்டிருந்தார்கள் . காவலுக்கு நின்றுகொண்டிருந்த போலீசார் , சல்யூட்டுடன் அவர்களுக்கு எதிர்பட்டிருந்தார்கள் . உள்ளே விசாரணைக் கைதிகளை விசாரிக்கக் கூடிய அறையில் ,இருவரும் தனியாக விவாதிக்க ஆரம்பித்திருந்தனர் .
இன்ஸ்பெக்டர் ரவி : “ கந்தசாமி ! இப்ப மணி 8 ஆகப்போகுது . இன்னிக்கு ராத்திரி சரியா பத்து மணிக்கு , தவபுண்ணியத்தையும் , அவரோட சகாக்களையும் , விசாரணைங்கற பேர்ல ,தனித் தனியா ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரப்போறோம் . நாம அவங்கள கைது பண்ணப் போறோம்ங்கற விஷயம் , எக்காரணத்தைக் கொண்டும் , யாருக்குமே தெரியக்கூடாது . குறிப்பா அவங்க மூணு பேருக்குமே , இந்த விஷயம் தெரியவே கூடாது .
ஏட்டு கந்தசாமி : “ எஸ் சார் ! ... ஆனா இதுல ஏதாவது பிரச்சனை வருமோன்னு நெனக்கிறேன் ... விசாரணைன்னு சொன்னா , அவங்க ஒத்துழைப்பாங்கன்னு நெனைக்கிறீங்களா ! “ .
இன்ஸ்பெக்டர் ரவி : “ வேற வழியில்ல . அவங்கள எப்படியாச்சும் ஒத்துழைக்க வெச்சு , இங்க கூட்டிட்டு வந்தே ஆகணும் ... ஏன்னா நாம கைது பண்ணப் போறோம்ன்னு , தெரிஞ்சா அவனுங்க ALERT ஆயிருவாங்க . தப்பிக்க நெனைப்பாங்க . அதுக்கு முன்னாடி , மேலிடத்துல உத்தரவு வாங்கிட்டுத்தான் , நாம நம்ம வேலைய ஆரம்பிக்கணும் . நான் இன்னும் கொஞ்ச நேரத்துல மேலிடத்துல பேசி APPROVAL வாங்கிடுவேன் . அதுக்குள்ள நீங்க மத்த வேலைகளைப் பாருங்க . “
ஓகே சார் ! என்ற கந்தசாமி , அடுத்த கட்ட வேளைகளில் துரிதம் காட்டியிருந்தார் ........... மேலதிகாரிகளோடு , அரை மணி நேரமாகப் பேசிக்கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . “ சார் !கவலைப்படாதீங்க ! எந்தப் பிரச்சனையும் வராது . அப்படி வந்தாலும் நான் பாத்துக்குறேன் . நீங்க PERMISSION மட்டும் குடுங்க . “ என அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக , கடைசிவரை பேசிக்கொண்டிருந்தார் . நேரம் மணி 9 –ஐத் தொட்டிருந்தது . ஒரு வழியாக அவர்களிடம் , சமாதானம் வாங்கிய அவர் , பெருமூச்சு விட்டிருந்தார் . அதைப் பார்த்த ஏட்டு கந்தசாமி , “ சார் ! ஒரு வழியா அவங்கள ஓகே பண்ணீட்டீங்க போல “ என்றார் சிரித்துக்கொண்டே “ .
இன்ஸ்பெக்டர் ரவி : “ ஆமாய்யா !................ எப்படியோ சம்மதிக்க வச்சுருக்கேன் . இன்னிக்கு ராத்திரியோட ராத்திரியா , மாத்தூர் கிராமத்து மர்மத்துக்கு , ஒரு முற்றுப்புள்ளி வச்சிர வேண்டியதுதான் .... சரி கெளம்ப ரெடியா இருங்க .. “
ஏட்டு கந்தசாமி : “ ஓகே சார் ! கண்டிப்பா .....“ என இருவரும் கிளம்ப தயாராயிருந்தார்கள் . மழையும் விட்டிருந்தது . நீடித்திருந்த மர்மம் , நீங்கிய சந்தோஷத்தில் , இன்ஸ்பெக்டர் ரவி ,தன்னுடைய முகத்தில் தண்ணீரைத் தெளித்து , நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்தார் . அந்த நேரம் பார்த்து , ஏட்டு கந்தசாமியின் செல்போன் அலறியது . எடுத்துப் பார்த்த , அவர் ஹலோ என்று பேச ஆரம்பித்தார் ......... கொஞ்ச நேரத்தில் , ஏட்டு கந்தசாமியின் முகம் மாறியிருந்தது . அவரது முகமாற்றத்தை , ஆச்சர்யமாகப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து , “யோவ் ! என்னாச்சுய்யா ????? ” . என்றார்
ஏட்டு கந்தசாமி : “ சார் !!!!!!!!! மாத்தூர் கிராமத்தலைவர்களில் ,, ஒருவரான சிவநேசன் ................................................. இறந்துட்டாராம் “ .
இன்ஸ்பெக்டர் ரவி : (..... பேரதிர்ச்சியுடன் .....) “ WHAT ????????????????? “ .
ஏட்டு கந்தசாமி : “ ஆமா சார் ! , இப்பதான் , நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து , நமக்குத் தகவல் வந்துருக்கு . “ .
மீளாத அதிர்ச்சியில் உறைந்திருந்த , இன்ஸ்பெக்டர் ரவி ,,, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு , “ எப்படிடிடிடிடி இறந்தாராம் ???? “ . என்றார் .
ஏட்டு கந்தசாமி : “ தெரியல சார் ! நாம போய்தான் பாக்கணும் . “ .
இன்ஸ்பெக்டர் ரவி : “ COME ON , LET’S GO ...........“ என்றவுடன் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .