(Reading time: 96 - 191 minutes)

 டேய் ! என்ன மட்டும் , தனியா இங்க விட்டுட்டு , நீங்க ரெண்டு பேரும் , போய்ட்டீங்க . என்னையும் , உங்ககூடவே , கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதானே ! “ என்று மார்பில் அடித்துக் கொண்டு அழுதிருந்தார் . எத்தனையோ பேர் ஆறுதல் கூறியும் , தவபுண்ணியத்தை சமாதானம் செய்ய முடியவில்லை . பார்ப்பவர்களைப் பதற வைத்திருந்தது அந்தக் காட்சி . நேரம் ஆக ,ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது . உறவினர்கள் சடங்குகளுக்கும் , சம்பிரதாயங்களுக்கும் தயாராயிருந்தார்கள் . மணி மதியம் 2 –ஐக் கடந்திருந்தது . பல பந்திகள் பரிமாறப் பட்டிருந்தது . இன்ஸ்பெக்டர் ரவி அந்த வீடு முழுவதையும் , தன் பார்வையால் அலசிக் கொண்டிருந்தார் . அங்கு இருக்கின்ற ஒவ்வொருவரின் , குதிங்காலையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார் ஏட்டு கந்தசாமி . ராமலிங்கம் இறந்த செய்தி கேட்டு , அவரின் உறவினர்கள் , நாலாப்புறமும் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ,வேளாண் பேராசிரியர் சதாசிவமும் , அங்கு வந்து துக்கத்தில் பங்கேற்றிருந்தார் . இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் அவரிடம் , பேசிக் கொண்டிருந்தனர் . கொஞ்ச நேரத்தில் , NEXTGEN FERTILIZERS LTD உரிமையாளர்களான பிரனேஷும் , திலீபனும் அங்கு இருண்ட முகத்தோடு வந்திருந்தார்கள் . அவர்களைப் பார்க்கப் பார்க்க , தவபுண்ணியம் முகம் உக்கிரமடைந்திருந்தது . இருந்தும் காரியம் நடந்து கொண்டிருக்கின்ற இடத்தில் , கலவரம் வேண்டாம் என்று பொறுமையோடு காத்திருந்தார் . திடீரென்று , தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் , தவபுண்ணியத்திடம் அழுதுகொண்டே வந்து ,

கலையரசன் : “ அப்பா !! வெண்ணிலாதான்ப்பா !!! இந்த கொலையப் பண்ணது . எனக்கு நல்லாத் தெரியும்ப்பா !!! “ என்றான் இதை பார்த்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டுப்போனார் . ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்த தவபுண்ணியம் , இந்த பதிலைக் கேட்டதும் , கடுப்பான அவர் ,

 பைத்தியகார நாயே ! இன்னும் , அந்த செத்துப் போன பொண்ணு நெனப்பாவே சுத்திகிட்டு திரியற ... எந்த நேரத்துல , எதப் பேசணும்னு உனக்குத் தெரியாது ............ “ என்று அவன் கன்னத்தில் பளார் பளார் என்று அடிக்க ஆரம்பித்தார் ... இது அவங்க குடும்ப விஷயம் என்பதுபோல் , யாரும் அவரைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை .

இன்ஸ்பெக்டர் ரவி இடையில் சென்று , அவரின் கையைப் பிடித்து ,

 சார் ! விடுங்க சார் ! ஏன் தோளுக்கு மேல வளந்த பையனப் போய் இந்த அடி , அடிக்கறீங்க .. “ என்றார் .....

உடனே ரவியின் பக்கம் திரும்பிய , தவபுண்ணியம் ,

வாய்யா !!! வா !!! , இதுக்கெல்லாம் நல்லா வக்காலத்துக்கு வந்துடு .... என் பையன நான் அடிப்பேன் .. அதைக் கேக்கறதுக்கு நீ யாருய்யா ??? “ என்றார் கோபத்தோடு ..

ஏட்டு கந்தசாமி இடையில் வந்து , தவபுண்ணியத்தை சமாதானப்படுத்தி ,

 ஐயா !!! எல்லாரும் பாக்கறாங்க .... கொஞ்சம் பாத்து பேசுங்க .....” என்றார் பௌவ்யமாக ....

இன்னும் கோபம் தணியாத , தவபுண்ணியம் ,

 என்னத்தய்யா !!! பாத்துப் பேசணும் ...... நேத்து சிவநேசன் , இன்னிக்கு ராமலிங்கம் , நாளைக்கு நானா ??????????? .... நீங்கெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க .... இதுவரைக்கும் ஏதாவது துப்பு கிடச்சுதா ..... பெருசா சமாதானம் பேச வந்திட்ட ...... போய்யா ...“ என்றார் . ( இன்ஸ்பெக்டர் ரவியின் கண்கள் சிவந்திருந்தது ...)

ஏட்டு கந்தசாமி : “ ஐயா ! விசாரணை போயிட்டு தான் இருக்கிறது . இது கொலையா இருக்குமேயானால் , இன்னும் கூடிய சீக்கிரத்தில கொலையாளியப் புடிச்சுக் காட்டுறோம் ...”

தவபுண்ணியம் : (.... கோபத்துடன் ....) எப்ப ??? நானும் செத்ததுக்கு அப்புறமா ???? .. எனக்கு என்னமோ இந்த மரணங்கள்ல போலிஸ் தலையீடு , இருக்குமோன்னு சந்தேகமாயிருக்குதுய்யா ?? ” என்றார் .

இன்ஸ்பெக்டர் ரவி : “ சார் ! கொஞ்சம் வார்த்தையை , அளந்து பேசுங்க ........ குமாரசாமி , பேய் அடிச்சுத்தான் செத்துப் போயிட்டார்ன்னு , நீங்க சொன்னீங்க ... அப்ப அத நாங்க நம்பினோம் .... இந்த மரணமும் கூட அதே மாதிரி , இருக்கலாமே .. இதை மட்டும் ஏன் , உங்க மனசு ஏத்துக்க மாட்டிங்குது ??? . “ என்று ஆக்ரோஷமாக பேசிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரவியைத் தடுத்து நிறுத்திய , ஏட்டு கந்தசாமி ,

 சார் !!! சாவு வீட்டுக்கு வந்துருக்கோம் ..... இங்க வந்து , சண்டை போடறது அவ்ளோ , நல்லா இல்லை .... எதுவாக இருந்தாலும் , விசாரணையின் முடிவுல , பேசிக்கலாம் ... “ என்று அவரை சமாதானப் படுத்தினார் .... கோபம் தணியாத முகத்துடன் , கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தார் தவபுண்ணியம் ....... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் , ஓரத்தில் இருந்த நாற்காலிகளில் போய் உட்காந்திருந்து , வெறும் யோசனையிலேயே நேரத்தைக் கடத்தியிருந்தார்கள் ..... களைப்பு மிகுதியால் , இன்ஸ்பெக்டர் ரவி அவ்வப்போது , தூங்கித் தூங்கி விழித்துக் கொண்டிருந்தார் . ராமலிங்கத்தின் உறவினர்கள் வருவதும் , போவதுமாக இருந்தனர் . அவர்களைப் பார்த்துக் கொண்டே , மீண்டும் தன் கண்களை மூடியிருந்த , இன்ஸ்பெக்டர் ரவி திடுக்கிட்டார் ..... நேற்றைய முன்தினம் இரவு அவருடைய வீட்டில் , பார்த்த , அந்த மர்ம உருவம் திடீரென்று அவர் நியாபகத்துக்கு வந்தது அதன் நடை , பாவனைகளைக் கொண்ட ஒருவரை அந்த ஜனக்கூட்டத்தில் , அவருடைய கண்கள் , அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ... திடீரென்று கண்களைத் திறந்து பார்த்த அவர் , ஏட்டுக் கந்தசாமியைக் கூப்பிட்டு அந்த ஆசாமியை அவருக்கு அடையாளம் காட்டினார் ..

இன்ஸ்பெக்டர் ரவி : “ யோவ் ! கந்தசாமி ! , அங்க நிற்கிற ஆள் யார் ??? “ என்றார் பரபரப்பாக .....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.