(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : “ இல்ல கந்தசாமி ..... நீங்க இல்லைன்னா .... இதப் பண்ணீருக்க முடியாது ..... நீங்க உங்க குடும்பத்தக் கூட , பாக்காம , இந்த மூணு நாளா , என்கூடவே இருந்தீங்க ...அதனால தான் இதப் பண்ண முடிஞ்சது ... “ என்றார் பெருமிதத்தோடு ....

ஏட்டு கந்தசாமி : “ சார் ! இன்னைல இருந்து , நானும் உங்களமாதிரி ஒரு நாத்திகன் சார் ..... “ என்றார் கர்வத்தோடு .....

இன்ஸ்பெக்டர் ரவி : (... சிரித்துக்கொண்டே ...) “ அடப்போய்யா..... “ என்று சொல்லிக்கொண்டே , தன் வீட்டுக்கு கிளம்பியிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .

ருபது நிமிடப் பயணத்தில் ,,,,, வீட்டை அடைந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... எதையோ சாதிருந்த மகிழ்ச்சி , அவர் முகத்தில் தெரிந்திருந்தது . அடுத்தநாள் காலையில் செய்ய , வேண்டிய பணிகளைப் பற்றியே , அவரது சிந்தனை இருந்தது .... அதே யோசனையிலேயே இரவு உணவை முடித்திருந்தார் .... வழக்கம் போல கிரைம் நாவல்களை , அவர் வீட்டுப் புத்தகக் கிடங்கில் ,தேடிக்கொண்டிருந்தார் .... பிரபல எழுத்தாளர் நடேசனின் , “ மரணத்துக்கு அப்பால் ” என்ற நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்திருந்தார் ... மனிதனின் மரணத்துக்குப் பிறகு ,நடக்கக் கூடிய சம்பவங்களை ஒட்டி மிக விறுவிறுப்பாகவும் , பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்தது அந்த நாவலின் கதைக்களம் ... நிறைவேறாத ஆசையுடன் கூடிய ஆன்மாக்கள் ,மீண்டும் கடந்து வந்த பாதைகளைகளியே , சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் , என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருந்தார் அந்த நாவலாசிரியர் நடேசன் ... பாதிப் பக்கங்களைப் புரட்டியிருப்பார் .... திடீரென அவர் வீட்டுக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது .... இந்த நேரத்தில் யாராக இருக்க முடியும் ??? என்று யோசித்துக் கொண்டே , கையில் டார்ச்சையும் ,ரிவால்வரையும் எடுத்துக் கொண்டு , கதவுப் பக்கத்தில் சென்றார் ... கதவு வேகமாக தட்டப்பட்டுக் கொண்டிருந்தது .... மின்னல் வேகத்தில் , கதவைத் திறந்தார் ரவி ... வெளியே ஆள் அரவமற்று இருந்தது ... சற்றே திடுக்கிட்டுப் போனார் இன்ஸ்பெக்டர் ரவி ... வெளியே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு , கதவுப் பக்கம் திரும்பிய அவரின் அடுத்த வினாடி , திடீரென்று , ஏதோ ஒரு உருவம் , வேகமாக அவரைக் கடந்து செல்வதைப் போல் இருந்தது ... பயத்தில் உறைந்திருந்த அவர் , உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார் .... அந்த நேரம் பார்த்து மீண்டும் மின்சாரம் வந்து , வந்து போய்க்கொண்டிருந்தது .... டார்ச் விளக்கை , தயாராகவே வைத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி ... உள்ளே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் ... ஒரு கட்டத்தில், மின்சாரம் முற்றிலுமாக நின்றிருந்தது ... டார்ச் விளக்கை அடித்துக் கொண்டே , முன்னேறியிருந்தார் ... யாரோ தன்னைப் பின் தொடர்வதைப் போல அவர் உணர்ந்தார் ..... பயத்தின் உச்சத்தில் இருந்த அவருக்கு உடல் முழுக்க வியர்த்து வழிந்திருந்தது .... அவரின் வலதுபுறமாக கண்ணாடிக்குப் பக்கத்தில் , யாரோ நிற்பது போல் இருந்தது .... டார்ச்சை வலதுபுறமாகத் திருப்பிய அவர் , அரண்டு போயிருந்தார் ... தலைவிரிக் கோலத்தில் ஒரு பெண் குனிந்து அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்ததை , அந்தக் கண்ணாடி அவருக்கு அடையாளம் காட்டியிருந்தது ... யார் .... யார்ரர்ர்ரு ????? என்று உளற ஆரம்பித்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி .... குனிந்திருந்த அந்த முகம் திடீரென நிமிர்ந்து அவரைப் பார்த்து சிரித்தது ... சப்த நாடிகளுமே அடங்கிப் போயிருந்தது அவருக்கு ... கோர முகத்துடன் இறந்து போயிருந்த வெண்ணிலாதான் அங்கு நின்று கொண்டிருந்தாள் ... மீண்டும் மின்சாரம் வந்திருந்தது .... அந்த உருவம் மறைந்திருந்தது .... அவருடைய மனம் படபடத்திருந்தது ... அந்தக் கண்ணாடியில் , எதோ குறிப்பு எழுதியிருப்பதைப் போல அவருக்குத் தெரிந்தது .... அதைப் பக்கத்தில் சென்று ,படிக்க ஆரம்பித்த அவர் அதிர்ந்து போனார் ....

“ ... தவபுண்ணியத்தின் கடைசி அரைமணி நேரம் ...“ என்று அதில் எழுதப்பட்டிருந்தது .... அப்பொழுது தான் பொன்னையா சொன்ன , பதில்கள் அவருக்கு நியாபகம் வந்திருந்தது ...சிவநேசனையும் , ராமலிங்கத்தையும் , வெண்ணிலாவின் ஆவிதான் பழி வாங்கியிருகிறது என்பதை , அவர் உணர்ந்தார் ... பதற்றத்துடன் தவபுண்ணியத்தின் , தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டார் .... ரொம்ப நேரமாகவே அழைப்பு மணி அடித்துக் கொண்டிருந்தது ... யாரும் எடுத்த பாடில்லை ... போலிஸ் ஜீப்பில் ஏறியிருந்த , அவர் மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டார் .... “ THE NUMBER YOU ARE TRYING TO REACH IS NOT ATTENDING THE CALL .. PLEASE TRY AGAIN LATER “ என்ற பதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் பேசியிருந்தது .... போலீஸ் ஜீப்பை வேகமாக செலுத்தியிருந்தார் .... ஏட்டு கந்தசாமியின் எண்களைத் தொடர்பு கொண்டார் .... வெகுநேரமாகியும் அவரிடமிருந்தும் ஒரு பதிலுமில்லை ...அவருக்கு “ CALL ME – URGENT ” என்று MESSAGE அனுப்பிருந்தார் ... குழப்பத்தின் உச்சத்தில் , போலிஸ் ஜீப் புயலாகக் கிளம்பியிருந்தது .... அந்த நேரம் பார்த்து அவருக்கு அன்பாலாய வேதாந்த சுவாமிகளின் நியாபகம் வந்திருந்தது ... தேடித்பிடித்து அவருடைய எண்களைத் தட்டினார் .. மறுமுனையில் , தொடர்ந்து ரிங் போய்க் கொண்டிருந்தது .. கடைசி நேரத்தில் போனை எடுத்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ....

இன்ஸ்பெக்டர் ரவி : ( ... பதற்றத்தில் ...) சுவாமிஜி !!! சுவாமிஜி !!! என்று பதறினார் .... அவரின் பதற்றத்தைப் புரிந்து கொண்ட சுவாமிகள் ,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.