(Reading time: 96 - 191 minutes)

வேதாந்த சுவாமிகள் : “ என்னாச்சு ரவி ??? ஏதாவது அமானுஷ்யத்தைப் பார்த்தீங்களா???? என்றார் படபடப்பாக ...

( .. இன்ஸ்பெக்டர் ரவி , நடந்த அனைத்தையும் சொல்ல , வேதாந்த சுவாமிகள் அன்பாலயத்தில் இருந்து புறப்பட்டிருந்தார் ...) . இந்தமுறை , தவபுண்ணியத்தின் வீட்டுத் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டார் ரவி ...

மீண்டும் ரிங் போய்க் கொண்டிருந்தது ... “ COME – ON , PICK-UP , PICK-UP .... என்று இன்ஸ்பெக்டர் ரவியின் உள்ளுணர்வு அடித்துக் கொண்டிருந்தது .. ஒரு வழியாக போன் எடுக்கப் பட்டிருந்தது ....

 ஹலோ !!! என்றார் இன்ஸ்பெக்டர் ரவி .... மறுமுனையில் இருந்த குரலும் ஹலோ என்றது ..... தவபுண்ணியத்தின் மகன் கலையரசன் பேசினான் ..... ( ... இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் கலையரசனிடம் .... )

இன்ஸ்பெக்டர் ரவி : “ .... கலையரசன் .... நான் இன்ஸ்பெக்டர் ரவி பேசுறேன் ... உங்க அப்பாவ ஜாக்கிரதையா பார்த்துக்கோ .... வெண்ணிலாப் பொண்ணோட ஆவி , இன்னிக்கு உங்க ,அப்பாவ பழி வாங்க காத்துட்டு இருக்குது .... நான் இப்ப அங்க தான் வந்துட்டே இருக்கேன் ... என்றார் ...“

கலையரசன் : “ சார் !!! என்ன சார் சொல்றீங்க .... என் வெண்ணிலா , என் அப்பாவ கொலை பண்ணப் போறாளா ???? “ என்று சிரித்தான் ...

இன்ஸ்பெக்டர் ரவி : “ தம்பி இது ரொம்ப சீரியஸான விஷயம் ... விளையாடாத ... உங்க அப்பாவப் போய்ப் பாரு என்றார் வண்டியின் வேகத்தோடே .......“

கலையரசன் : “ சார் !!! நீங்க தான் சார் ...விளையாடறீங்க .... வெண்ணிலா என் கூட தான் இப்ப உட்கார்ந்து பேசிகிட்டிருக்கிறாள் .. “ என்றான் ...

(.... அதிர்ந்து போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி , இணைப்பைத் துண்டித்து விட்டு , வண்டியின் வேகத்தைக் கூட்டீனார் ...) அடுத்த 5 நிமிடத்தில் , ஏட்டு கந்தசாமியிடம் இருந்து போன் வந்தது ...நடந்த விவரங்களை அவரிடமும் சொல்ல , கந்தசாமியும் கான்ஸ்டபிள்களோடு அங்கு புறப்பட்டிருந்தார் ... தவபுண்ணியத்தின் வீட்டை அடைந்த இன்ஸ்பெக்டர் ரவி ஜீப்பை , வெளியே அவசர அவசரமாக பார்க் செய்து விட்டு வீட்டு GATEஐத் திறக்க முயற்சித்தார் .... கடினமான பூட்டால் , பூட்டப் பட்டிருந்த அந்த GATE-ஐ எளிதில் , திறக்க முடியவில்லை ... மீண்டும் மீண்டும் முயற்சித்து ஒரு வழியாக GATE –ஐ உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற அவர் , அந்த வீட்டுக் கதவை வேக வேகமாகத் தட்டினார் ..... உள்ளேயிருந்து பதில் இல்லை ... வீட்டுத் தொலைபேசிக்கும் , விடாமல் தொடர்பு கொண்டிருந்தார் ... அந்த நேரம் பார்த்து , வேதாந்த சுவாமிகள் தன்னுடைய சீடர்களுடன் வந்திறங்கினார் ... சீடர்கள் வேகவேகமாக உள்ளே வந்து ,கதவைத் திறக்க முயற்சித்தார்கள் ... நிலைமையை உணர்ந்த வேதாந்த சுவாமிகள் தன் பிரார்த்தனையால் , கதவைத் திறக்க முற்பட்டிருந்தார் ,, பதறிப் போயிருந்த இன்ஸ்பெக்டர் ரவி ,அந்த வீட்டு ஜன்னல்களை கற்களைக் கொண்டு உடைக்க முற்பட்டார் .... அவர் எவ்வளவோ , முயற்சிகள் செய்தும் , அவரால் அதை உடைக்க முடியவில்லை .. அந்த இடம் முழுவதுமே ,வெண்ணிலாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது ... அந்த நேரம் பார்த்து ஏட்டுக் கந்தசாமியும் , தன் போலிஸ் படையுடன் வந்து , இவர்களுக்கு உதவ முற்பட்டிருந்தார் ... அந்த இடம் முழுவதுமேஒரே பதற்றம் நிலவியிருந்தது .... கொஞ்ச நேரத்தில் சப்தம் கேட்கக் கேட்க ஊர்மக்களும் தவபுண்ணியத்தின் வீட்டில் கூடியிருந்தனர் ... ஒரு கட்டத்தில் , வேதாந்த சுவாமிகளின் இடைவிடாத பிரார்த்தனையால் , கதவு படாரென்று திறந்தது .... உள்ளே தவபுண்ணியத்தின் வீடே இருண்டிருந்தது ... தயாராக வைத்திருந்த அகல் விளக்குகளோடு , வேதாந்த சுவாமிகளின் சீடர்கள் , உள்ளே நுழைந்து , வீடு முழுவதும் தீபங்களை ஏற்றியிருந்தனர் ... இன்ஸ்பெக்டர் ரவியும் , ஏட்டு கந்தசாமியும் முதலில் உள்ளே செல்ல , வேதாந்த சுவாமிகளும் , ஊர் பெரியவர்களும் பின்னே சென்றிருந்தனர் .. வீட்டின் நடு ஹாலில் , வேதாந்த சுவாமிகள் , இரவு 12 மணிக்குப் பண்ண வேண்டிய , அர்த்த சாம யாகத்தை இப்பொழுதே தொடங்கியிருந்தார் ...தீப ஒளியின் வெளிச்சத்தால் , வீடு முழுவதையும் சல்லடை போல சலித்துக் கொண்டிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் ரவியும் , அவரைச் சுற்றியிருந்தவர்களும் ... உள்ளே ஒரு ஓரத்தில் ,தவபுண்ணியத்தின் மனைவி மரகதமும் மகன் கலையரசனும் , எதுவும் பேச முடியாமல் , பிரம்மை பிடித்தவர்கள் போல அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்... ஏட்டு கந்தசாமி ,அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருந்தார் ... அவர்கள் மேலேயே அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர் ... சட்டென்று மேலே பார்த்த ரவி , பதறினார்.... எல்லாருடய கண்களும் , மேலே பார்க்க , அந்தரத்தில் தவபுண்ணியத்தின் உடல் ஊசலாடிக் கொண்டிருந்தது ... வேதாந்த சுவாமிகள் , மந்திர உச்சாடனங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தார் ... உள்ளே இருக்கின்ற பொருட்களெல்லாம் , நாலாப்புறமும் ஓடி , சிதறிக் கொண்டிருந்தன .... ஆனால் அன்பாலய அகல் விளக்குகள் மட்டும் , எந்த சலனமுமின்றி அதே ஒளியை விடாது தந்து கொண்டிருந்தது ... அடுத்த பத்தாவது நிமிடத்தில் , தவபுண்ணியத்தின் வீட்டை , தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார் வேதாந்த சுவாமிகள் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.