(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : அது அப்படி உங்களுக்கு மட்டும் அந்த அமானுஷ்யம் தெரியுது ? ....

வேதாந்த சுவாமிகள் : (.........கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு...........) அது ஒரு உள்ளுணர்வுதான் ...... எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ஏற்படுகின்ற ஒரு , சாதாரண உணர்வு தான் அது .

(..........மெல்ல சிரித்தார் இன்ஸ்பெக்டர் ரவி..........)

இன்ஸ்பெக்டர் ரவி : “ அப்ப குமார சாமியக் கொன்னது அந்த அமானுஷ்ய ஆவி தான்னு சொல்றீங்க . ”

வேதாந்த சுவாமிகள் : இருக்கலாம் ........ இல்லாமலும் இருக்கலாம் . இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கலாம் ..... இன்னும் என்னோட வார்த்தைகள்ல , உங்களுக்கு நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறேன் .

இன்ஸ்பெக்டர் ரவி : இல்ல சுவாமிஜி ! எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல ... இந்த உலகத்துல இருக்கிற எல்லாவற்றுக்கும் , ஒரு அறிவியல் பூர்வமான சிந்தனை இருக்கும்னு நெனைக்கிறவன் நான் . கடவுள் இல்லைன்னு சொன்ன , ஈ.வெ.ரா.பெரியார நாம நாத்திகன்னு சொன்னோம் . ஆனா .......... இந்த உலகத்துல , கடவுளே இல்லைன்னு ஒரு அறிவியல் விஞ்ஞானி ஆதாரத்தோடு சொல்லிருக்காரு ................. அவர் பேரு , ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் !!! . அது மட்டுமில்லாம , நம்முடைய மரணத்துக்கப்பால் , எதுவுமே இல்லை .... சொர்க்கம் ,நரகம்ன்னு சொல்றதெல்லாம் சும்மா ஒரு கட்டுக்கதைன்னு , அவருடைய ஆய்வுல சொல்றாரு ................ கடவுள் இந்த உலகத்த படைக்கல BIG BANG THEORY ((பெரு வெடிப்புக் கொள்கை))மூலமாத் தான் , இந்த உலகம் உருவானதுன்னு இப்ப , அறிவியல் கண்டுபிடிச்சிருக்கு . இதயெல்லாம் பாக்கும்போது , எனக்கு மாத்தூர்ல நடக்கின்ற சம்பவங்கள் வெறும் வேடிக்கையாய்த்தான் தெரியுது .. இப்படி உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கிறது . ஆனா இன்னும் நாம , ஆவி , அமானுஷ்யம்ன்னு சொல்லிட்டு இருக்கோம் .

(....சிறிது நேர மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தார் வேதாந்த சுவாமிகள்....)

வேதாந்த சுவாமிகள் : நீங்க சொன்னதெல்லாம் சரி தாங்க சார் ..... இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிக்கின்ற , ஒவ்வொன்றுமே நமக்கு ஆச்சரியமாத்தான் தெரியும் ..... BIG BANG THEORYப் படி தான் இந்த உலகம் உருவானதுங்கற கூற்று , பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று .... அதை நான் மறுக்கவில்லை . ஆனா , நம்ம பண்டைய கால , வேதங்களில் , இந்த உலகம் எப்படி உருவானதுங்கறதப் பத்தின குறிப்புகள் இருக்கின்றது . BIG BANG THEORYயின் பல கோட்பாடுகள் , வேதங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற கருத்துக்களோடு ஒத்துப் போகின்றது . நீங்க சொல்றது வெறும் , ஒரு உலகத்தைப் பற்றி தான் , ஆனா வேதங்கள்ல , இதே போல பல பிரபஞ்சங்கள் இருந்திருக்கின்னு சொல்லப்பட்டிருகின்றது .....

இவை எல்லாவற்றையும் விட , இன்று , அதி நவீன கருவிகளுடன் விண்வெளிக்குச் சென்று , அங்கு இருக்கின்ற கிரகங்களைப் பற்றி , அறிவியலாளர்கள் ஆராயச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் ....... ஆனால் அன்று ,,,,,,,,,,, எந்த வகையான அறிவியல் சாதனங்களுமே இல்லாத அந்தக் காலத்திலயே , கோள்களைப் பற்றித் துல்லியமாகக் கணித்த ,ஆர்யப்பட்டாவின் வானவியல் சாஸ்திரம் ஒரு மிகப்பெரும் ஆச்சர்யம் . இதுமாதிரி இன்னும் எத்தனையோ இருக்கின்றது . என்றைக்குமே ஆன்மீகமும் அமானுஷ்யமும் அறிவியலுக்கு அப்பாற்பட்டதுங்கறத விசயத்த மொதல்ல நீங்க புரிஞ்சுக்கணும் .

பதில் பேச மனமில்லாமல் நின்ற இன்ஸ்பெக்டர் ரவி ,

சுவாமிஜி ! உங்ககிட்ட பேசினதுல ரொம்ப மகிழ்ச்சி . நான் கெளம்புறேன் . வேறு ஏதாவதுன்னா நான் உங்கள CONTACT பண்றேன் . THANK YOU சுவாமிஜி .

மெல்ல சிரித்த சுவாமிகள் ,

 தம்பி ! எதுக்கும் நீங்களும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ! ஏன்னா ! இது வெறும் சாதாரண விஷயமல்ல “ .

இன்ஸ்பெக்டர் ரவி : அது என்னவோ சுவாமிஜி ! நீங்க சொன்ன இதே பதிலத்தான் மாத்தூர் கிராமத் தலைவர் தவபுண்ணியமும் சொன்னார் . ஒரு கிராமத்தலைவரே இப்படி பயந்திட்டு இருந்தா , அப்புறம் ஊர் மக்கள் எப்படி பயப்படாம இருப்பாங்க .

சற்றே முகம் மாறிய வேதாந்த சுவாமிகள் , சற்று இறுக்கமான தொனியுடன் ,

 யாரு ! அந்த தவபுண்ணியம் பயப்பட்றான்னா…….. சொல்றீங்க . கண்டிப்பா இருக்காது ..... ஏன்னா ! காசு மேல அதிகமா ஆசை வச்சுருக்கிற எவனுக்கும் , பயம்ங்கற ஒன்னு அறவே இருக்காது.

வேதாந்த சுவாமிகளின் முகமாற்றத்தை , அடையாளம் கண்ட இன்ஸ்பெக்டர் ரவி , மேற்கொண்டு விசாரிக்கலானார் .

இன்ஸ்பெக்டர் ரவி : ஏன் சுவாமிஜி ? அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையா ?

சுவாமிகள் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ..... அன்னதானம் , மருத்துவ உதவிகள்ன்னு , இன்னும் எத்தனையோ உதவிகள , நம்ம அன்பாலயத்தின் மூலமா , அந்த மாத்தூர் கிராம மக்களுக்கு , பண்ணலாம்னு நெனச்சோம் . ஆனா அந்த தவபுண்ணியம்தான் அதுக்குத் தடையாய் இருக்கிறார் . இன்னும் ரெண்டு மாசத்துல உள்ளாட்சித் தேர்தல் வேற வர்றதால , புது ஆளுங்கள யாரையும் , எதையும் பண்ண விடறதில்லை . பாவம் , ஒரு வேடிக்கையான மனுஷன் !!! .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.