(Reading time: 96 - 191 minutes)

இன்ஸ்பெக்டர் ரவி : மெல்ல சிரித்தவாறே , அப்ப கும்பல்லயே கோவிந்தா போட்டுட்டு இருக்கன்னு சொல்லு ..... சரி அத விடு . குமாரசாமி பேயடிச்சு.... செத்துப்போய்ட்டதா சொல்றாங்களே , பேய்க்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ? எந்த பேய் அவர சாகடிச்சது ?

ஏட்டு கந்தசாமி : சார் ! கொஞ்ச நாளைக்கு முன்னால , தூக்குப்போட்டு செத்துப் போன வெண்ணிலாப் பொண்ணு தான் பேயா வந்து இதையெல்லாம் பண்ணீட்டு இருக்கிறதா சொல்றாங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : சரி ! அந்த வெண்ணிலாங்கற பொண்ணுக்கும் , குமாரசாமிக்கும் ஏதாவது முன்விரோதம் , பிரச்சனைன்னு இருந்துச்சா ?

ஏட்டு கந்தசாமி : இல்ல சார் ! அதெல்லாம் ஒன்னும் இல்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : அப்புறம் எப்படிய்யா ! ஒரு LOGICக்கே இல்லாம இதையெல்லாம் நம்புறீங்க .

ஏட்டு கந்தசாமி : சார் ! இதுல கூடவா LOGIC பாக்குறீங்க .

இன்ஸ்பெக்டர் ரவி : நிரூபணம் ஆகாத எந்த விசயத்தையும் நான் நம்பறதே இல்ல . குறிப்பா இந்த சாமி , பேய் , ஆவி , இந்த மாதிரி விசயங்கள நான் என்னிக்குமே நம்ப மாட்டேன் என்றார் .

நேரம் இரவு 11.3௦-ஐத் தாண்டியிருந்தது . நெடுஞ்சாலையில் கொஞ்ச தூரப்பயணம் . சற்று தொலைவில் கொள்ளிடம் டீ - ஸ்டால் என்ற பெயர் பலகையைப் பார்த்தவுடன் , வண்டியை ஓரங்கட்டினார் ஏட்டு கந்தசாமி . இருவரும் இறங்கி டீக்கடையை நோக்கி நடந்தனர் . கந்தசாமியைப் பார்த்தவுடன் , வாங்க சார் ! என்று சிரித்தவாறே வணக்கம் வைத்தார் டீக்கடைக்காரர் .

டீக்கடைக்காரர் : சார் ! இவரு யாரு ?

ஏட்டு கந்தசாமி : இவர்தான்யா நம்ம ஊருக்கு , புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் .

டீக்கடைக்காரர் : சார் ! வணக்கம் ! என்று சொல்லி கையில் டீ கிளாஸ்களோடு வந்து நின்றிருந்தார் .

இருவரும் டீயை வாங்கிக்கொண்டு , வெளியே போலீஸ் ஜீப்புக்கு பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்தார்கள் .

இன்ஸ்பெக்டர் ரவி : இன்னும் ஸ்டேஷன் போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும் ?

ஏட்டு கந்தசாமி : சார் ! இன்னும் ஒரு கால்மணி நேரமமாவது ஆகும் சார்.

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! . ஆமா !! அந்த வெண்ணிலாங்கற பொண்ணு யாரு ?

ஏட்டு கந்தசாமி : சார் ! அது வந்து ........ நம்ம ஊர்த்தலைவர் (மாத்தூர்) தவபுண்ணியம் ஐயாவோட , பையன் கலையரசனும் , அந்த வெண்ணிலாங்கற பொண்ணும் ரெண்டு வருசமா உயிருக்குயிரா காதலிச்சுருக்காங்க . இது பையன் வீட்டுக்கு எப்படியோ தெரிஞ்சிருச்சு .... பொண்ணு வேற ஜாதிங்கிரதால , பையன் வீட்டுல கடுமையான எதிர்ப்பு ...... இருந்தாலும் .....கல்யாணம் பண்ணா , அந்தப் பொண்ணத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு , கலையரசன் தம்பி தீர்க்கமா சொல்லியிருக்காரு .... வேற வழியே இல்லாம , தவபுண்ணியம் ஐயா , அவரோட நண்பர்கள் சிவநேசன் , ராமலிங்கம் , அப்புறம் ஊர்க்காரங்களையும் கூட்டிட்டுப் போய் , அந்தப் பொண்ணோட , அப்பா அம்மாவ அடிச்சு மெரட்டிருக்காங்க . ஒரு ஊரே அவங்களுக்கு எதிரா வந்து , நின்னதப் பாத்து , இடிஞ்சு போய்ட்டாங்க அவங்க ரெண்டு பேரும் . அதத் தாங்கிக்க முடியாம , அந்த பொண்ணு , லெட்டர் எழுதி வெச்சுட்டு , தற்கொலை பண்ணிருச்சு . லெட்டர்ல ,கடைசில மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் , மீண்டு வருவேன்னு அந்தப் பொண்ணு எழுதீர்ந்தது . இத வெறும் சாதாரணமாத் தான் நாங்க எடுத்திருந்தோம் ......... ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் தான் ,..... லெட்டர்ல அந்த பொண்ணு எழுதீர்ந்த , சில வார்த்தைகளோட அர்த்தமே , எங்களுக்கு புரிய ஆரம்பிச்சுச்சு ... ஊர்ல பல பேர் , பல விதமான அமானுஷ்யமான விசயங்களைப் பார்த்திருகிறாங்க . தீடீர்னு ஒரு உருவம் , நம்மளத் தாண்டிப் போன மாதிரி இருக்கும் . இரவு நேரங்கள்ல , வீட்டுக் கதவ யாரோ தட்டுற மாதிரி , சத்தம் கேக்கும் . கதவத் திறந்து பார்த்தா , யாரும் இருக்க மாட்டாங்க . குமாரசாமி ஐயா இறந்து போனதும்கூட , ராத்திரி 8 மணிக்கு மேலதான் . இதுனாலதான் எங்க ஊர்ல , ராத்திரி 7 மணில இருந்து , காலைல 6 மணி வரைக்கும் , யாரும் வீட்ட விட்டு வெளியே வர்றதில்ல .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! சரி வண்டிய எடு , ஸ்டேஷன் போலாம் . இருவரும் ஏறி அமர்ந்தவுடன் , போலீஸ் ஜீப் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது . கொஞ்ச தூரம் சென்றவுடன் ,அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கட்டிடம் , சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வண்ணமயமாகக் காட்சியளித்தது . அகல்விளக்குகளின் வெளிச்சம் , அந்த கட்டிடத்தின் அழகை மெருகூட்டியிருந்தது . அதைப் பார்த்தவுடன் , இன்ஸ்பெக்டர் ரவி ,

 யோவ் ! கந்தசாமி . என்ன பங்களாய்யா இது ! . பார்க்கவே ரொம்ப அருமையா இருக்குது ......“ 

வண்டியின் வேகத்தை சற்று குறைத்த ஏட்டு கந்தசாமி ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.