(Reading time: 96 - 191 minutes)

ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு , அன்பாலயத்தின் நடவடிக்கைகள் கண்காணிக்கப் பட்டிருந்தது . ஓய்வறைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமிருந்தது . நன்றாக வழித்து எடுக்கப்பட்ட தலையுடன் கூடிய அன்பாலய நிர்வாகிகள் , அங்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் ரவி அன்பாலாயத்தின் ஒவ்வொரு அசைவையும்கண்காணித்துக் கொண்டே வந்தார் . அன்பாலய நிர்வாகி ஒருவர் , இவர்கள் இருவரையும் பார்த்து , சார் ! நீங்க யாரப் பார்க்கணும் என்றார் ..

ஏட்டு கந்தசாமி : நாங்க வேதாந்த சுவாமிகளப் பாக்கணும் ...

அன்பாலய நிர்வாகி : அதோ அந்த கலையரங்கத்தில் தான் சுவாமிகள் பிரசங்கத்தில் இருக்கிறார் .. இன்னும் 1௦ நிமிஷத்துல பிரசங்கத்த முடிச்சுடுவார் . நீங்க உள்ள போய் உட்காருங்க ..நான் சுவாமிகள் கிட்ட விசயத்த சொல்றேன் .. என்றார்

இருவரும் நடந்து உள்ளே சென்றார்கள் . துளசிதாசர் கலையரங்கம் என்று பெயரிடப்பட்டிருந்த , அந்த மண்டபத்துக்குள் நுழைந்திருந்தார்கள் .

மனித வாழ்க்கையின் , உன்னதமான கருத்துக்கள் , அந்த மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன . அதன் உட்பக்க சுவரில் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் , அவர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது .

 அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை . நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு , அழகாய் இருக்கிறது ... “ . 

அதைப் படித்துப் பார்த்துவிட்டு , இருவரும் நடந்தார்கள் .

கொஞ்ச தூரம் உள்ளே நடந்ததும் , ஆழ்ந்த நிசப்தத்துக்கு நடுவே , வேதாந்த சுவாமிகள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் . நம்பிக்கை தரக்கூடிய ஒரு குரலால் , அந்த கலையரங்கத்தில் இருந்தவர்களைத் தன் வசப்படுத்தியிருந்தார் சுவாமிகள் .

மிகுந்த உற்சாகத்துடன் , பேசிக் கொண்டிருந்த அவர் ,

 ஜனனம் , மரணம் இந்த இரண்டுமே மனித வாழ்க்கையில் , மறுக்க முடியாத இரு தருணங்களாகும் . இந்த பூமியில் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் , மரணம் ஒரு நாள் சம்பவிக்கத்தான் போகின்றது . அந்த மரணத்திற்கான யாத்திரைதான் , மனிதனின் இறுதியாத்திரை . மரணத்தினால் , சில பாவங்கள் தீரும் . மரணத்தினால் , சில சாபங்கள் தீரும் . ஒரு உயிர் , இந்த பூமியில் ஜெனித்த உடனேயே , அதனுடைய இறுதியாத்திரைக்காண கடிகார முள் ஓட ஆரம்பித்துவிடுகின்றது . எந்த நேரத்திலும் , அந்த கடிகார முள்ளின் ஓட்டம் நின்று விடலாம் . எனவே நாம் ,நம்முடைய இறுதியாத்திரைக்காகத் எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும் . “ எதற்கும் தயாராயிருங்கள் . உங்களிடம் மலை போன்ற உறுதியிருந்தால் , பாம்பின் விஷம் கூட , உங்கள் முன் சக்தியற்றுப் போய்விடும் . இந்த அளவிலே , இன்றைய பிரசங்கத்தை முடிக்கிறேன் நன்றி வணக்கம் “. என்று பேசி முடித்திருந்தார் . பிரசங்கத்தைக் கேட்ட பக்தர்கள் , புத்துணர்ச்சி பெற்றவர்களாய் கலைந்து சென்று கொண்டிருந்தனர் . இன்ஸ்பெக்டர் ரவியும் ஏட்டு கந்தசாமியும் , வேதாந்த சுவாமிகளின் பக்கம் சென்று , வணக்கம் வைத்தனர் புன்னகையான முகத்துடன் அவர்களை வரவேற்ற சுவாமிகள் , அவர்கள் இருவருக்கும் , எதிரே இருந்த நாற்காலியை , அடையாளம் காட்டினார் . இருவரும் அமர்ந்தவுடன் , ஏட்டு கந்தசாமி பேச ஆரம்பித்தார் .

ஏட்டு கந்தசாமி : சுவாமிஜி ! இவர்தான் நம்ம ஊருக்குப் புதுசா வந்துருக்கிற இன்ஸ்பெக்டர் . அவர் கேஸ் விசயமா , சில சந்தேகங்கள உங்ககிட்ட கேக்கணும்னு நெனைக்கிறார் .

புன்முறுவலுடன் , இன்ஸ்பெக்டர் ரவியைப் பார்த்த , வேதாந்த சுவாமிகள் “ தயக்கமில்லாம , உங்க கேள்விகளக் கேளுங்க ...” என்றார் .

உடனே இன்ஸ்பெக்டர் ரவி , ஏட்டு கந்தசாமியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார் . உடனே கந்தசாமி , முகத்தைத் திருப்பிக்கொண்டு , அந்த மண்டபத்தின் கதவுகளுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டார் .

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூரில் நடக்கின்ற சில விசயங்கள் ரொம்ப விசித்திரமா இருக்கு . ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருக்குன்னு , நீங்களே கூட சொல்லிருக்கீங்க .

 ஆமாம் ! நான் தான் சொன்னேன் ........”

இன்ஸ்பெக்டர் ரவி : அப்படி அந்த ஊர்ல , என்னதான் நடக்குது ?

சுவாமிகள் : “ ஹ்ம்ம் !!! ............... அந்த ஊர்ல , நிச்சயமா , ஏதோ ஒரு அமானுஷ்யம் இருக்கு . போன மாசம் ..... அந்த ஊருக்கு பிரசங்கத்துக்கு போன அன்னிக்கே என்னால அத உணர முடிஞ்சது . நானும் , எனக்குத் தெரிந்த பரிகாரங்கள பண்ணிப் பாத்துட்டேன் . இதுவரைக்கும் எந்த பலனும் இல்ல கடைசியா நம்ம முன்னோர்கள் எழுதி வச்சிருந்த , சில புத்தகங்கள புரட்டிப் பார்த்தபோது தான் , எனக்கு ஒரு தீர்வு கெடச்சுச்சு ..... அதான் வர்ற பௌர்ணமியன்று ஒரு அர்த்த சாம யாகம் பண்ணலாம்னு இருக்கிறேன் . அதற்கான முயற்சிகளத்தான் இப்ப பண்ணிட்டு இருக்கிறேன் . அதப் பண்ணிட்டன்னா ! என்னால அந்த அமானுஷ்யத்தக் கட்டுப்படுத்த முடியும் . பௌர்ணமி வர்றதுக்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு . அதுவரைக்கும் எல்லாரையும் , கொஞ்ச நாளைக்கு , எச்சரிகையா இருக்க சொல்லிருக்கிறேன் “ .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.