(Reading time: 96 - 191 minutes)

என் காதலன் கலையரசனுக்கு ,

ஜாதியும் , வசதியும் தான் , நம் காதலைத் தீர்மானிக்கின்றது என்றால் , அப்படிப்பட்ட காதல் நமக்குத் தேவையேயில்லை . நம்முடைய காதலுக்கு எதிராக ,ஊரே அணி திரண்டு நிற்கிறது . நம் காதல் கரை சேரும் என்கின்ற நம்பிக்கை , உனக்கே இல்லாத போது அது எப்படி சாத்தியமாகும் . உன்னுடைய நினைவுகளை , … மறப்பதை விட ,இறப்பதே சிறந்தது என்று நான் முடிவெடுத்து விட்டேன் .

.......... மீண்டும் சந்திக்க வாய்ப்பிருந்தால் மீண்டு வருவேன் ........

இப்படிக்கு

உன் வெண்ணிலா ...

என்று படித்து முடித்தார் இன்ஸ்பெக்டர் ரவி . அடுத்த நிமிடம் இருவரும் போலீஸ் ஜீப்பில் ஏறியிருந்தார்கள் .

ஏட்டு கந்தசாமி : சார் ! இப்ப நாம எங்க போகப் போறோம் சார் ????...

இன்ஸ்பெக்டர் ரவி : மாத்தூர் கிராமத்தலைவர் தவபுண்ணியம் வீட்டுக்கு ...

போலீஸ் ஜீப் ..... வேகம் எடுத்திருந்தது . சாலையோரத்தில் இருந்த மரங்களெல்லாம் , இவர்களுக்கு பின்னே வேகமாக சென்று கொண்டிருந்தன ................ 2௦ நிமிடப் பயணம் . காலை 7.3௦மணி . மாத்தூர் கிராமத்தின் எல்லையை அடைந்திருந்தார்கள் அறிவியல் தொழில்நுட்பங்களை , அதிக அளவில் கண்டிராத ஒரு கிராமம் . எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென வயல்வெளிகள் ............... எந்த விதக் கவலையும் இல்லாமல் , ஒலி எழுப்பிக்கொண்டு , சுதந்திரமாகப் பறந்து சென்றுகொண்டிருக்கின்ற பறவைகள் கூட்டம் ...... ஏசுநாதரைப் போன்று ,இடுப்பில் வெறும் வேட்டியுடன் தோளில் கலப்பைகளை சுமந்தபடி , உழவர்கள் ஒரு பக்கம் வயலில் இறங்கியிருந்தார்கள் . கிராமத்துப் பாட்டின் ஒரு வரியை ஒருவர் பாட , அதே வரியைப் , பின்னணியில் இருப்பவர்கள் ஒரு சேரப் பாடிக்கொண்டே , ஒருபுறம் நாற்று நடவும் பணி தொடர்ந்திருந்தது .

 என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் , ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் , ஒழுங்காய் பாடுபடு வயற்காட்டில் .. உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் “ என்ற அந்தக் காலத்துப் பாடல் வரிகளுக்கு , இந்த மாத்தூர் கிராமமே சாட்சியளித்திருந்தது .

சற்று நேரத்தில் , ஊர்த்தலைவர் தவபுண்ணியத்தின் தென்னந்தோப்பை நோக்கி போலீஸ் ஜீப் சென்று கொண்டிருந்தது .

ஏட்டு கந்தசாமி : என்ன சார் ! ஒரே மௌனமா இருக்கீங்க ....

இன்ஸ்பெக்டர் ரவி : உங்க ஊரோட அழகு என்ன மெய்சிலிர்க்க வைக்கின்றது . உழவன் சேற்றில் கால் வைத்தால் தான் , உன்னால் சோற்றில் கை வைக்க முடியும்ன்னு சும்மாவா சொன்னாங்க ! உங்க கிராமம் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குய்யா .... என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தவபுண்ணியத்தின் வீடு வந்திருந்தது . தென்னந்தோப்பை ஒட்டி , ஒரு பெரிய மாடி வீடு தெரிந்தது . போலீஸ் ஜீப் சத்தம் கேட்டதும் , உள்ளே இருந்து தவபுண்ணியத்தின் மகன் , கலையரசன் , இருண்ட முகத்தோடு எதிர்பட்டான் . அவனுடைய காதலின் வலியை , அவன் முகத்தில் நன்றாக உணர முடிந்திருந்தது . 

ஏட்டு கந்தசாமி : தம்பி ! ஐயா வீட்ல இருக்காருங்களா என்றார் பவ்யமாக.

கலையரசன் : அப்பா ! வாக்கிங் போயிருக்காரு .. உள்ள வாங்க என்று அவர்களை வீட்டுக்குள் அழைத்து சென்று , உட்கார வைத்து விட்டு , அவனுடைய அறைக்குச் சென்று விட்டான் .

தவபுண்ணியத்தின் மனைவி மரகதம் இவர்களைப் பார்த்தவுடன் , வாங்க !........... என்றார் முகமலர்ச்சியுடன் . அவரு இப்பதான் வாக்கிங் போயிருக்காரு . இப்ப வந்துருவார் . என்ன சாப்ட்றீங்க ? காபியா ? டீயா ?

அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்கம்மா ! என்று இன்ஸ்பெக்டர் ரவி சொல்ல ஆரம்பிப்பதற்குள் , காபியே குடுத்துருங்கம்மா ! என்றார் ஏட்டு கந்தசாமி. சற்று நேரத்தில் , காபி டம்ளர்களில் இருந்து ஆவி பறந்திருந்தது .

ஏட்டு கந்தசாமி : அம்மா ! தம்பி இப்ப எப்படி இருக்கிறாரு .. கொஞ்சம் பரவாயில்லையா ?

மரகதம் : எங்கப்பா ! நானும் என்னென்னவோ சொல்லிப் பாத்துட்டேன் . கேக்கவே மாட்டீங்கறான் . ராத்திரியெல்லாம் தனியா , அவனாவே பேசிட்டு இருக்கிறான் . கேட்டா வெண்ணிலாகூடதாம்மா பேசிட்டு இருக்கேன்கிறான் . நானும் எத்தனையோ டாக்டர்ஸ் கிட்ட காட்டிப் பாத்துட்டேன் . இது அந்தப் பொண்ணு இறந்த அதிர்ச்சிதான் , போற போக்குல சரியாயிருன்னுதான் எல்லாரும் சொல்றாங்க . ஆனா எனக்கு என்னமோ பயமாயிருக்குது நீங்களே வந்து பாருங்க என்று கலையரசனின் அறையைக் காண்பித்தாள் . மெத்தை மீது அமர்ந்துகொண்டு , வெண்ணிலாவின் புகைப்படத்தையே , பார்த்துக் கொண்டிருந்தான் கலையரசன் . சின்னச்சின்னதாக சிகரெட் துண்டுகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்திருந்தன .அறையின் சுவர் முழுவதும் , வெண்ணிலாவின் பெயரால் நிரம்பியிருந்தது . ஏட்டு கந்தசாமி , மெல்ல கலையரசன் பக்கம் சென்று , அவன் தோள்களைத் தொட்டு , “தம்பி!!!! “ என்றார் .

கலையரசன் : (திடீரென்று திரும்பி ) அவரையே உற்றுப் பார்த்தான் .

ஏட்டு கந்தசாமி : வெண்ணிலா ............என்று ஆரம்பித்தவுடன் , கலையரசனின் முகத்தில் மெல்ல மகிழ்ச்சி தெரிந்தது .

 சொல்லுங்க சார் !! வெண்ணிலாவுக்கு ... என்னாச்சு என்றான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.