(Reading time: 96 - 191 minutes)

 சார் ! அது ஒரு ஆசிரமம் , அதுக்கு பேரு அன்பாலயம் . வேதாந்த சாமிகள்ங்கறவர் தான் , அந்த ஆஸ்ரமத்த நடத்துறாரு . ரொம்ப சக்திவாய்ந்த சாமியார் சார் அவரு . எங்க ஊர்ல சில அமானுஷ்ய நடமாட்டங்கள் இருக்குன்னு , அவர் தான் மொதல்ல கண்டுபிடிச்சாரு . கொஞ்ச நாளைக்கு யாரும் , இரவு நேரங்கள்ல , வெளியே வரவேண்டாம்னு அவர் தான் சொல்லியிருந்தார் சார் ! ..”

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் !!! ஓகே !......... அப்ப அவர கண்டிப்பா நாம MEET பண்ணியே ஆகணும் ......

கிட்டத்தட்ட பத்து நிமிடப் பயணம் . தூத்தூர் காவல் நிலையம் ... என்ற பெயர் பலகை போலீஸ் ஜீப்பின் வெளிச்சத்தால் , மின்னிட்டுத் தெரிந்தது . இருவரும் இறங்கி , போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்கள் . தூங்கிக் கொண்டிருந்த , இரவு நேர பாதுகாப்பு போலீஸ்காரர்கள் , திடீரென்று எழுந்து சல்யூட்டுடன் எதிர்பட்டார்கள் . தூக்கக் கலக்கம் அவர்கள் கண்களில் , தெரிந்திருந்தது. அவர்களைக் கையமர்த்திய இன்ஸ்பெக்டர் ரவி , கந்தசாமியைப் பார்த்து ,

 மாத்தூர் கிராமத்துல நான் STAY பண்றதுக்கு ஒரு வீடு கேட்ருந்தேனே ... என்னாச்சு ? .... ” என்றார் .

ஏட்டு கந்தசாமி : சார் ! வீடெல்லாம் ரெடி பண்ணியாச்சு . இன்னிக்கு மட்டும் இங்க ரெஸ்ட் எடுங்க .. காலைல அங்க போய்ப் பாத்துக்கலாம் ..

சார் ! அப்படியே நான் கெளம்புறேன் சார் ... என்றார் தலையை சொரிந்து கொண்டே .

இன்ஸ்பெக்டர் ரவி : ஹ்ம்ம் ! சரி ! ... நாளைக்கு காலைல ஆறு மணிக்கு வந்து என்ன PICK UP பண்ணிக்கோங்க ..... GOOD NIGHT என்றவர் , அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே ,அப்படியே மேசையில் கால் வைத்து மல்லார்ந்தார் ..

காலைல ஆறு மணிக்கே வரணுமா ! என அதிர்ச்சியடைந்தவராய் , தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார் ஏட்டு கந்தசாமி . மணி 12.00 –ஐக் காட்டியிருந்தது . வேக வேகமாகப் புறப்பட்டிருந்தார்....

டுத்த நாள் காலை 6.3௦ மணி . பொழுது புலர்ந்திருந்தது . ஏட்டு கந்தசாமி அவசர அவசரமாக வந்து , வண்டியை நிறுத்தி விட்டு , காவல் நிலையத்துக்குள் நுழைந்திருந்த அவருக்கு , ஒரே ஆச்சர்யம் . நேற்றைய ஒரே இரவில் , காவல் நிலையம் தூசி தட்டப்பட்டு , மிடுக்காக காட்சியளித்திருந்தது . காலையில் வீட்டுக்குச் செல்ல தயாராயிருந்த , இரவு நேரக் காவல்துறையினர் ,

 DUTYல JOIN பண்ண மொதல் நாளே , எங்கள இப்படி நல்லா வேலை வாங்கிட்டாருய்யா ! என்று கந்தசாமியின் காதுகளில் , முனுமுனுத்துக் கொண்டு சென்றனர் . காக்கிச் சட்டையில் கம்பீரமாகத் தெரிந்தார் இன்ஸ்பெக்டர் ரவி . குமாரசாமி கேஸ் விவரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார் . உள்ளே சென்ற கந்தசாமி , GOOD MORNING-உடன் SALUTE அடித்தார் .

இன்ஸ்பெக்டர் ரவி : வாங்க கந்தசாமி ! GOOD MORNING .... உக்காருங்க .

குமாரசாமி கேஸப் பத்தி , பழைய இன்ஸ்பெக்டர் சுந்தரம் தயார் பண்ண ரிப்போர்ட்டத்தான் இப்பப் பாத்துட்டு இருக்கேன் ...... எனக்கு அந்த வேளாண் ஆசிரியர் குமாரசாமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்ல , சில சந்தேகங்கள் இருக்கு . இது பற்றி , இந்த கேஸ்ல சில முக்கியமான விவரங்கள் சுந்தரத்திற்கு தெரிய வாய்ப்பிருக்கு ..... அதனால , இன்னிக்கு சாயந்தரம் சுந்தரத்தோட , நாம போன்ல இது பத்தி பேசியாகணும். ..... சரி ஓகே ... அதெல்லாம் இருக்கட்டும் ... எனக்கு அந்த செத்துப்போன , வெண்ணிலாவோட போட்டோ வேணும் ..

ஏட்டு கந்தசாமி : இதோ எடுத்துத் தர்றேன் சார் ! என்று , பழைய ரெகார்ட்ஸ்களைப் புரட்டிப் பார்த்த அவர் , வெண்ணிலாவின் புகைப்படத்தைக் கண்டதும் , சார் இதான் சார் அந்தப் பொண்ணோட போட்டோ , அப்புறம் இது அந்தப் பொண்ணு எழுதின கடிதம் ! என்று எடுத்து நீட்டினார் . வயல் வரப்புகளில் அமர்ந்து , தண்ணீரைத் தடவிக் கொண்டிருப்பதைப் போன்று வெண்ணிலாவின் புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது . வயது கிட்டத்தட்ட 25 இருக்கும் . கிராமத்து தேவதை போல் அழகாகக் காட்சியளித்திருந்தாள் . அதைப் பார்த்துவிட்டு , அடுத்ததாக கடிதத்திற்குள் நுழைந்தார் . வெள்ளைத் தாளில் சிவப்பு மையால் எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் , அவள் வாழ்க்கையின் கடைசி நிமிடங்களை பிரதிபலித்திருந்தது .

 அன்புள்ள அப்பா ! அம்மாவுக்கு !

இது உங்கள் அன்பு மகளின் கடைசிக் கடிதம் . சிறு வயதில் இருந்தே , நான் கேட்டதை எல்லாம் , எனக்கு மறுக்காமல் தந்த உங்களிடம் , நான் என் காதலை மட்டும் ,முற்றிலுமாக மறைத்து விட்டேன் . நேரம் வரும்போதுஎடுத்து சொல்லலாம் என்று நினைத்திருந்த எனக்கு , இந்தக் கடிதம் எழுதும் நேரமே , என் வாழ்க்கையின் கடைசி நேரம் என்பதை ,என்னால் கணிக்க முடியவில்லை . ஊரார் மெச்சும் பிள்ளையாக , நான் வாழ வேண்டும் என்று நினைத்த உங்களை , இன்று என் காதலால் , அவர்களே காரி உமிழும்படி செய்து விட்டேன் . என்னால் இன்று நீங்கள் தலை குனிந்து நின்றீர்கள் . இப்படி நிகழும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை . உங்களைப் பார்க்கக் கூடிய அருகதை கூட எனக்கு இல்லை . என்னை மன்னித்து விடுங்கள் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.