(Reading time: 12 - 24 minutes)
Good in everyone

ஏமாந்தூரில் உள்ள மிகப் பழைய ராமர் கோவில் எல்லோருக்கும் தெரிந்ததே! அந்தக் கோவிலில், மூல விக்கிரகம் ராமர் என்றாலும், மற்ற தெய்வங்களின் விக்கிரகங்களும் உள்ளன.

 அவை யாவுமே ஐம்பொன்னால் ஆனவை; அவை திருடப்பட்டு, இன்று கோவிலில் உள்ளவைகள் போலியானவை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

 இந்தக் கோவிலில் ஐந்து ஆண்டுகளாக அர்ச்சகராகப் பணியாற்றிவரும் கங்காதர தீட்சதருடைய உதவியின்றி திருட்டு நடந்திருக்க முடியாது என்று நம்புவதால், அவரை உடனடியாக கைது செய்து தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்."

 தீட்சதரின் மனைவியும் குழந்தைகளும் வெளியே வரவே பயந்துகொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கமுடியாதே! தீட்சதரை ஜாமீனில் வெளியே கொண்டுவர, வக்கீலை பார்த்து, பேசி, அமர்த்தி, வாதாட வைக்கவேண்டுமே!

 " வக்கீல் ஐயா! நீங்கதான் எப்படியாவது அவரை காப்பாற்றணும்....."

 " என் தொழிலே அதுதானே! கட்டாயம் முயற்சிக்கிறேன். முதல்லே, உங்களுக்கு தெரிந்தவரை, உண்மையை விளக்கமா சொல்லிடுங்க, ஒண்ணு விடாமல்! அவர் சிலை கடத்தல்லே சம்பந்தப்பட்டிருப்பாரா? ஆமாம் என்றால், எந்த அளவு? அவருடைய கூட்டாளிங்க யார்யார்? எத்தனை வருஷம் முன்பு நடந்தது?........"

 " ஐயோ வக்கீல் ஐயா! அவருக்கு இதிலே எந்த தொடர்பும் இல்லே, எங்களை நம்புங்க!"

 " அதெப்படிம்மா? தினமும் ரெண்டு வேளை, சிலைகளை தொட்டு அலங்கரித்து பூசை பண்ணியவருக்கு, அவைகள் அசலா, போலியான்னு தெரியாமல் போகும்னு, நான் கேட்கலே, கோர்ட்டிலே கேட்பாங்களே, என்ன பதில் சொல்றது?"

 " அவரை நீங்க நேரிலே பார்த்து அவரிடமே கேளுங்க, அவர் சொல்வார், எப்படியாவது ஜாமீனிலே அவரை வெளியிலே கொண்டு வந்திருங்க............"

 " இது நாடறிந்த கிரிமினல் கேஸ்! வழக்கு பல வருஷம் நீடிக்கும். கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டுன்னு போகவேண்டியிருக்கும். செலவு அதிகமாகுமே, உங்களிடம் பணம் இருக்கிறதா?"

 " பூர்வீக சொத்துக்களை விற்று, மகளுக்கு கல்யாணம், மகனை மேல்படிப்புக்கு அமெரிக்கா அனுப்ப செலவு செய்தோம். இப்ப கையிலே பெரிய தொகைக்கு வழியே இல்லே, என் தாலி, கொஞ்சம் நகைகளைத் தவிர!"

 " உங்களை பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கு! சரி, போகப் போகப் பார்ப்போம்! நீங்க எப்படியாவது, உடனடி செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் தயார் பண்ணுங்க! நான் போலீஸ்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.