(Reading time: 12 - 24 minutes)
Good in everyone

நடந்திருக்கலாம், அப்போது யார்யார் நிர்வாகத்தில் இருந்தார்கள், அவர்கள் எப்படி எப்போது எங்கு சிலைகளை அகற்றி அனுப்பினார்கள், அதில் கிடைத்த பணத்தை தங்கள் பேங்க் அகௌண்டில் வைத்திருக்கிறார்களா, வேறெப்படி வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம், கண்டுபிடித்த பிறகுதான், குற்றப் பத்திரிகையே தயாரிக்க முடியுமாம். இதிலே, இப்போது அமைச்சராக உள்ளவங்க சிலருடைய உறவினர்களும் சம்பந்தப்பட்டிருக்காங்களாம், அதனாலே, அப்பாவை எப்படியாவது ஜாமீனிலே வெளியே கொண்டு வந்தால் போதும், மற்றதை நிதானமாக பார்த்துக்கலாம்னு சொல்றாரு,......."

 " ஆமாம், அத்தை! மாமாவை வெளியில் கொண்டுவர நான் வக்கீலைப் பார்த்து ஏற்பாடு செய்கிறேன், கவலைப்படாதீங்க!"

 மீனாட்சியம்மாள் டிரஸ்டி முதலியாரின் மகன் வந்து பேசியதை தெரிவித்தாள். 

 " வெரி குட்! இப்பவே போய் நான் அவரை பார்க்கிறேன்........."

 தாய்க்கும் மகளுக்கும் சற்று அமைதி கிட்டியது!

 போலீஸ்ஸ்டேஷனில் தீட்சதரிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, தீட்சதரைப் பார்த்துப் பேச வக்கீலுக்கு அனுமதி தந்தனர்.

 " ஐயா! இந்த திருட்டைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? எப்போது நடந்திருக்கலாம்னு தோன்றுகிறது, உங்களுக்கு?"

 தீட்சதர் கண்ணீர் விட்டவாறே, கைகளை விரித்தார்.

 " இப்போது இருக்கிற சிலைகள் போலியானது என்பதே, எனக்கு இப்போதுதான் தெரியும். நான் கர்ப்பக் கிருகத்துக்குள்ளே சென்றால், என் ஐயன் ராமசந்திர மூர்த்தியின் பேரழகை பார்த்துக்கொண்டே பூஜிப்பேன், சந்தேகமே வராதபோது எனக்கு சிலைகள் அசலா போலியான்னு சோதிக்கத் தோன்றவில்லை. விசாரணைக் கமிட்டி கண்டுபிடித்து வெளியிட்டபிறகுதான் எனக்கு விஷயமே தெரியும்."

 " இந்த உண்மையை கோர்ட்டு நம்புவது ரொம்ப கஷ்டமாச்சே! சரி, பார்ப்போம்! உங்களுக்கு வேற யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"

 " எனக்கு முன்பு இருந்த அர்ச்சகரும் ரொம்ப நல்லவர், பக்தியுள்ளவர், கனவிலேகூட தப்பு செய்யமாட்டார், அதனாலே இந்த சிலை திருட்டிலே, எந்த அர்ச்சகருக்கும் நேரடி தொடர்பு இருக்கணும் என்கிற அவசியமில்லே! பத்து வருஷம் முன்பு, பராமரிப்புக்காக, கோவிலை ஒரு மாதம், பொது மக்கள் தரிசனத்தை நிறுத்திவைத்து, நிர்வாகிகளின் பொறுப்பில் விடப்பட்டது. அப்போது தவறு நடந்திருக்கலாம்..........."

 " ஐயா! நீங்க சொல்வதை நான் நம்புகிறேன், ஆனால், விசாரணைக் கமிட்டியோ, கோர்ட்டோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.