(Reading time: 12 - 24 minutes)
Good in everyone

ஸ்டேஷன் போய், அவரை பார்த்து பேச, முயற்சி செய்கிறேன், போங்க!"

 தீட்சதரின் மனைவி மீனாட்சியும் மகள் கற்பகமும் வீடு திரும்பி பணத்துக்கு என்ன செய்வது என யோசித்தனர்.

 " அம்மா! தம்பிக்கு உடனடியா நாம் தகவல் சொல்லிடுவோம், அவனுக்கு வேறு யார் மூலமாகத் தெரிவதற்கு முன்னாலே!"

 " கட்டாயமா சொல்வோம், ஆனா, அவன் உடனே படிப்பை பாதியிலே விட்டுவிட்டு திரும்பி வரக்கூடாது, வந்து பிரயோசனமில்லே, அங்கேயே இருந்து தொடர்ந்து படிக்கட்டும், அவன் செலவுக்கு நல்ல வேளையா, காலேஜிலே பணம் கொடுக்கிறாங்க!"

 அந்த காரியம் முடிந்ததும், பணத்துக்கு என்ன செய்யலாம்னு யோசித்தார்கள்.

 " அம்மா! என் கணவரிடம் யோசனை கேட்போம்! அவரிடம் இருந்தால், தரட்டும், இல்லேன்னா, யாரிடமாவது கடன் வாங்கித்தரட்டும்! என்ன சொல்றே?"

 " வேற வழி? அவரை அழைத்துக்கொண்டு வா"

 கற்பகம் தன் கணவனை அழைத்துவர, தன் வீட்டுக்குச் சென்றாள்.

 மீனாட்சி தனியாக வீட்டில் கவலைப்பட்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தபோது, கோவில் டிரஸ்டி ரங்கநாத முதலியாரின் மகன் வந்தார்.

 " வாங்க! வாங்க!! உங்க காலிலே விழறேன், நீங்கதான் தீட்சதரை காப்பாற்றணும்!"

 " அதுக்குத்தானே நான் வந்திருக்கிறேன். எங்கப்பாவையும் கைது செய்து கூட்டிக்கிட்டுப் போய்ட்டாங்க! எங்கப்பாவும் தீட்சதர் ஐயாவும், பாவம்!, அப்பாவிங்க! யாரோ, எப்பவோ செய்த குற்றத்துக்கு, இப்ப இருக்கிற இவங்களை கைது செய்திருக்காங்க! அம்மா! கைதாகியிருக்கிற பத்து பேரிலே, எங்கப்பாவும் தீட்சதர் ஐயாவும் ஐந்து வருஷமாகத்தான் கோவில் நிர்வாகிகளாக இருக்காங்க! மற்றவங்க, ரொம்ப வருஷமா உள்ளவங்க! அவங்க இதிலே சம்பந்தப்பட்டிருக்கலாம், அல்லது யார் குற்றம் செய்திருக்கலாம்னு தெரிஞ்சிருக்கலாம், அதனாலே அவங்க கேஸே வேறே! எங்கப்பா, தீட்சதர் ஐயா கேஸே வேறே! இவங்க ரெண்டு பேரையும் வெளியிலே கொண்டு வருவதற்கும், கேஸை நடத்துவதற்கும், நான் பணம் செலவு செய்து வக்கீலை வைத்து கேஸை நடத்தறேன், நீங்க கையெழுத்துப் போட்டால் போதும், அதை சொல்லத்தான் வந்தேன், நீங்க தனியா எதையும் செய்யாதீங்க! சரியா?"

 மீனாட்சியம்மாவுக்கு, வந்தவரை கடவுளே அனுப்பி வைத்ததுபோல, கையெடுத்து கும்பிட்டாள்.

 சிறிது நேரத்தில் கற்பகமும் அவள் கணவனும் வந்தனர்.

 " அம்மா! இவர் விசாரித்ததிலே, இந்த திருட்டு தீர விசாரிக்கப்பட்டு, எப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.