(Reading time: 20 - 40 minutes)

வேண்டியிருக்கு. ரகுவுக்கு கடையை கவனிக்கவே நேரம் போதாது, இதிலே எப்படி உடம்பு சரியில்லாமல், வேலை செய்யமுடியாத, உங்களையும் கவனிச்சுக்க முடியும்?

 சின்னவர் பிரபுவுக்கு இந்தமாதிரி சங்கடங்கள் எதுவுமில்லே, அவரிடம் கேட்டுப் பாருங்க!"

 மனைவியின் யோசனைக்கு ரகுவும் தலையசைக்கவே, ஜெயா பிரபுவின் வீட்டுக்கு சென்றாள்.

 இந்தக் குடும்பத்துக்கு, இத்தனை வருஷமாக உழைத்தபின்பும், தனக்கு அடைக்கலம் தர, தன் உழைப்பால் நல்லநிலைக்கு முன்னேறியுள்ளவங்க தயங்குவதை நினைத்து, வேதனைப்பட்டாள்.

 தயங்கியபடியே, பிரபுவின் வீட்டுக்குள் நுழைந்தாள்.

 கணவன்-மனைவி இருவரும் ஒரே குரலில், தீர்மானமாக கூறினர்.

 " சித்தி! இந்த வீட்டிலே நீங்க தாராளமா தங்கிக்குங்க! நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு காலையிலே வெளியே போனால், ராத்திரி ஓட்டலிலே சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பி பொத்துனு படுக்கையிலே விழறோம்.

 அதனாலே, உங்களுக்கு தேவையான சாப்பாட்டை நீங்களே சமைத்துக் கொள்வதாயிருந்தால், இங்கே இருங்க! ஆனால், உங்க உடம்பு இப்ப இருக்கிற நிலைமையிலே, உங்களாலே சமைத்துக் கொள்ளமுடியும்னு தோணலே!

 தங்கச்சி செல்வியை, நீங்க பெற்ற பெண்ணை, கேட்டுப் பாருங்களேன்!"

 எவ்வளவு அழகாக பேசி விரட்டிவிட்டார்கள் என புலம்பிக்கொண்டே, தான் பெற்ற மகள் செல்வியிடம் சென்றாள்.

 " அம்மா! என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதே! பெண்ணை கல்யாணம் செய்து இன்னொருவர் கையிலே பிடித்துக் கொடுத்துட்டு, பெற்ற தாயும் கூடவே போய், 'மாப்பிள்ளை! என்னையும் கவனிச்சுக்குங்கன்னு கேட்க, உனக்கு வெட்கமாயில்லை? உனக்கு இருக்கோ, இல்லையோ, எனக்கு இருக்கு!

 ஆமாம், அந்த ரெண்டு தடியன்களுக்கும், அவங்க வாழ்க்கையிலே முன்னேற, எத்தனை பண உதவி செய்திருக்கே, அவங்களை உரிமையோட கேளும்மா! உன்னை காப்பாற்ற வேண்டியது, அவங்க கடமைம்மா! உனக்கு அவங்களை வற்புறுத்தறதுக்கு சங்கடமாக இருந்தால், நான் பேசறேம்மா, அவங்களிடம்!"

 தான் பெற்ற மகள் எவ்வளவு அழகாக, சாமர்த்தியமாக, விரட்டுகிறாள் என நினைத்தவாறே, தற்கொலைக்கு தன்னை விரட்டுகிறார்களே தன்னால் வளர்ந்தவர்கள் என்று குமுறியவாறே, ஜெயா திரும்பி ஓரடி எடுத்துவைத்தாள்.

 " நில்லுங்கம்மா! இது உங்க வீடு! இங்கே நீங்க தங்கியிருக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.