(Reading time: 20 - 40 minutes)

வளர்த்தாள். பள்ளிக்கு அனுப்பினாள். அதற்கு பாடமும் பாட்டும் ஆடலும் சொல்லிக் கொடுத்தாள்.

 கருணாமூர்த்தி, காருண்யசீலன், அனாதரக்ஷகன்னெல்லாம் துதிக்கிறோமே அந்த அன்பின் உறைவிடம் என்ன செய்தது, தெரியுமா?

 ஜெயா ஏழாவது வகுப்பு படிக்கும்போது, அவளுக்கு இருந்த ஒரே ஆதரவு சாந்தம்மாவை பறித்துக்கொண்டது!

 காயம் பட்டது போதாமல், அவமானமும் கூடியதுன்னு பழமொழி உண்டு! அதுபோல, சாந்தம்மாவின் சாவுக்கும் ஜெயாதான் காரணமென குடும்பம் குற்றம் சாட்டி, அவளுக்கு 'துக்கிரி' என்று மகுடம் சூட்டி, கழுத்தை நெறித்து கொல்லாத ஒன்றைத் தவிர, இதர எல்லா விதங்களிலும் ஜெயாவை வெறுத்தனர்!

 அவளை படிப்பை நிறுத்திவிட்டு சமையலறைக்குள் தள்ளினர். ஶ்ரீமதியும், கேசவனும், ராமனும் படிக்க, அதற்கு படிக்கட்டாக, பயன்படுத்தினார்கள், ஜெயாவை!

 காயம் ஆறினாலும், வடு மாறாது! தான் கடவுளாலேயே வெறுக்கப்படுகிறவள் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டு, ஜெயா நடைப்பிணமானாள்.

 அண்ணன்கள் இருவரும் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று சென்னையில் நல்ல உத்தியோகத்தில் அமர்ந்தனர்.

 அக்கா ஶ்ரீமதியும் படிப்பு முடிந்து, பணக்கார குடும்பத்து பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கப்பட்டு, மேளதாளத்துடன் புக்ககம் புகுந்தாள்.

 வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்ததுபோல, ஊரார் பிரகலாதனை வம்புக்கு இழுத்தனர்.

 " வீட்டிலே சமைத்துப்போட, உம்மை கவனிச்சிக்க, பொறுப்பான ஆள் வேண்டாமா? சின்னப் பெண்ணுக்கு அசட்டுத்தனமா, அவசரப்பட்டு, கல்யாணத்தை பண்ணி அனுப்பிடாதேயும்!" என மறைமுகமாக தாக்கியதை தாங்கிக்க முடியாமல், பிரகலாதன் அவசரமாக ஒரு வரனைப் பார்த்து, ஜெயாவை கல்யாணம் செய்து அனுப்பினார்.

 அந்த வரனைப்பற்றி சொல்லவில்லையே!

 ஜெயாவைவிட பத்து வயது மூத்தவன் குசேலன் என்பது மட்டுமல்ல, இது அவனது இரண்டாம் கல்யாணம்! முதல் மனைவி இரண்டு ஆண் குழந்தைகளை தந்துவிட்டு நிமோனியா காய்ச்சலில் போய் சேர்ந்தாள்!

 அந்த குழந்தைகளை வளர்க்க ஒரு ஆள் தேவைப்பட்டது, அவனுக்கு!

 அதிக செலவில்லாமல் ஜெயாவை எவன் கையிலாவது ஒப்படைக்க, பிரகலாதனுக்கும் ஆள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.