(Reading time: 20 - 40 minutes)

எங்கே போவது?

 சுருண்டு படுத்திருந்த ஜெயா அப்படியே உறங்கிவிட்டாள்.

 " ஜெயாம்மா! யார் வந்திருக்கேன், பார்!"

 " ஹை! சாந்தம்மா அத்தை!" என்று ஜெயா தாவிச்சென்று அவளை அணைத்துக்கொண்டாள்.

 அத்தையும் அவளை முத்தமிட்டுவிட்டு, 'உஷ்' என சைகை காட்டி, சத்தமிடாமலிருக்க எச்சரித்துவிட்டு, ஜெயாவின் கைகளை பிடித்து வெளியே அழைத்துப் போனாள்.

 " ஜெயா! சொல்லவந்ததை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன், கவனமாக கேட்டு நட! நான் துணையிருப்பேன்.

 ஜெயா! உன்னை அடியோடு வெறுக்கும் இந்தக் குடும்பத்தை உனக்கு சாதகமாக மாற்ற ஒரு வழி சொல்கிறேன்!

 இப்போது, குடும்பம் பணப் பற்றாக்குறையில் தடுமாடுகிறது. இந்த நிலையில், மற்றவர்கள் சாதிக்க முடியாத ஒன்றை நீ சாதித்து, மற்றவர்களை உன்னை திரும்பி பார்க்க வைக்க நீ பணம் சம்பாதித்து உதவு!"

 ஜெயா சிரித்துவிட்டு சொன்னாள்.

 " பத்தாவது படித்த ஆண்களாலே செய்ய முடியாத ஒன்றை இந்த ஏழாவது படித்த பொம்பளையை செய்யச் சொல்றியே, சாத்தியமா?"

 " முதல்லே, இந்த நினைப்பை மற! முடியுமென நிமிர்ந்து நில்! பொம்பளையோ, ஆம்பளையோ, மனசு வைச்சா நடக்கும்!"

 " எப்படி, எப்படி அத்தை?"

 " நீ படிப்பை நிறுத்தினதிலிருந்து தொடர்ந்து இத்தனை வருஷமா சமையல் மட்டுமே நாள்முழுதும் செய்து, அதிலே எக்ஸ்பர்ட் ஆக இருக்கே!

 நீ வீட்டில் இருந்துகொண்டே சுலபமாக செய்யக்கூடியது, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பது! முதலில் அவற்றை உனக்கு தெரிந்த அக்கம்பக்கத்து வீடுகளில் விற்றுப்பார்! அவர்கள் மூலமாக, செய்தி பரவி, மற்றவர்களும் உன்னை தேடிவந்து வாங்கிச் செல்வார்கள்.

 தவிர, வீடுகளிலே பண்டிகை, விசேஷ நாட்களிலே சமையலுக்கு உதவி செய்து பணம் ஈட்டுவதோடு, எல்லோரையும் உன்னை நிமிர்ந்து பார்க்க வை! ஒரு மாதம் இதை செய்து பார்! என்னை நம்பி, நாளையே துவங்கு!"என கூறிவிட்டு, நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, கிளம்பினாள்.

 "அத்தை! அத்தை! கொஞ்சம் இரு!" என ஜெயா சத்தமிட்டபோது, அருகிலிருந்த கணவன் குசேலன் அவளை உலுக்கி, " என்ன, பகல் கனவா?" என்றதும்தான், தான் கண்டது கனவென்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.