(Reading time: 20 - 40 minutes)

 மூன்றாவது, சுந்தரிக்கு ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டுமென, கொள்ளை ஆசை! பாவம்! அது நடப்பதற்குள், காலன் அவள் உயிரை பறித்துவிட்டான். ஒரு நல்ல கணவனாக, அவளுடைய கனவை நிறைவேற்றவே, உன்னை நான் மணந்து கொண்டேன்.

 உன்னுடன் நான் நெருக்கமாகப் பழகும்போதெல்லாம், உன்னை சுந்தரியாகத்தான் நினைத்து பழகுவேன்!

 உன்னிடம் பொய் சொல்ல விரும்பவில்லை. அதையும் நீ ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

 நான்காவது, எங்கப்பா, அம்மா மிகப் பொருத்தமான பெயரை, சிறு பிள்ளையாக இருந்தபோதே, எதிர்காலத்தை தெரிந்ததுபோல், 'குசேலன்'னு சூட்டியிருக்கிறார்கள்.

 ஆம், நான் மத்தியதர வர்க்கத்திலும் அடிமட்டத்திலே இருப்பவன்! என் வருமானம், வாய்க்கும் வயிற்றுக்கும் போதுமான அளவுதான்! இந்த சிங்கிள் பெட்ரூம்தான், நமது வாழ்வு முழுவதற்கும், நாம் வசிக்கும் அரண்மனை!

 ஏனெனில், நான் படித்த பத்தாம் வகுப்புக்கு பியூன் வேலைதான் நிரந்தரம்! எந்தக் காலத்திலும், பதவி உயர கிடைக்க வாய்ப்பில்லை! என்னால் மேற்படிப்பு படிக்கவும் முடியாது. பணமுமில்லை, அறிவும் இல்லை!

 ஜெயா! நீ உன் பிறந்தவீட்டில், எப்படி சமையற்காரியாக வாழ்ந்தாயோ, அந்த வாழ்வில் எந்த மாறுதலும் இருக்காது!

 பிறந்த வீட்டுக்கும் இங்கும் ஒரே ஒரு வித்தியாசம் நிச்சயமாக இருக்கும். அது, இங்கு உன்னை யாரும் வெறுத்து ஒதுக்கமாட்டார்கள்!

 எனக்கெப்படி இதெல்லாம் தெரியும்னு யோசிக்காதே! ஒளிவுமறைவில்லாமல், எனக்கு எல்லாவற்றையும் தெரிவித்தது, உன்னைப் பெற்றவர்தான்! அவர் ஒரு பக்கா ஜெண்டில்மென்! அவரை நான் பெரிதும் மதிக்கிறேன். கபடமாகவும் பொய் பேசியும் பிறரை ஏமாற்றி வாழ்கிற இந்த உலகில், உண்மையை பேசிய அவர் ஒரு சத்தியமூர்த்தி!

 சரி, நான் சொல்லவேண்டியதை சொல்லித் தீர்த்துவிட்டேன், இப்போது நீ மனம் விட்டுப் பேசு!"

 ஜெயா விழித்திருந்தால்தானே, பதில் சொல்ல! அவள் உறங்கி ரொம்ப நேரமாகிவிட்டது.

 உண்மையில் அவள் உறங்கவில்லை, அப்படி நடித்தாள்!

 அவள் இதயம், கணவன் முதல்நாளே பேசியதைக் கேட்டு, சுக்குநூறாகி விட்டது.

 தண்ணீரை தாண்டியவள், சாக்கடையில் விழுந்ததுபோல் உணர்ந்தாள்.

 பிறவியிலிருந்து தன்னை சுற்றியிருந்த வெறுப்போர் குடும்பத்திலிருந்து, விடுதலை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.