(Reading time: 20 - 40 minutes)

ஜெயா உணர்ந்தாள்.

 சாந்தம்மாவின்மீது, ஜெயாவுக்கு மிகுந்த நம்பிக்கை!

 மறுநாளே, துவங்கினாள், தொழிலை!

 அக்கம்பக்கத்தில் பத்தே நாட்களில் சூடு பிடித்த வியாபாரம், வேகமாக பரவியது!

 தவிர, சமையல் உதவியும் செய்து சம்பாதித்ததில், கணிசமான தொகை கிடைத்து, குடும்பச் செலவுகளுக்கு பெரும் உதவியாக இருந்தது மட்டுமல்ல, ஓரிரு மாதங்களில், ரகு சொந்தமாக மெகானிக் கடை துவங்கவும் சௌகரியமாக இருந்தது.

 அதிசயமாக, குசேலன் மனைவி தயாரிக்கும் பொருட்களை கடைகளில் விற்பனை செய்து உதவினான்.

 கொஞ்சம் நம்பிக்கை பிறந்ததும், செல்வியை கல்லூரிக்கு அனுப்பவும் முடிந்தது.

 இவ்வளவு செய்தும், குடும்பத்தில் இருந்த மற்ற நால்வரில் ஒருவர்கூட அவளை மனதார பாராட்டவில்லை. ஏதோ அவளை ஒரு வேலைக்காரியாகவே நடத்தினர்.

 அதிகபட்சம், வெறுப்பை குறைத்து, பரிகாசத்தை நிறுத்தினர்.

 அதைப்பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்க, ஜெயாவுக்கு ஏது நேரம்?

 நிமிர்ந்தது, குடும்பம்! ரகுவின் மெகானிக் கடை சிறப்பாக நடந்து, அவனுக்கு திருமணமும் செய்துவைத்தனர்.

 பிரபு ஆன்லைனில் பயிற்சி பெற்று, வேலை தேடித் தருகின்ற வெப் சைட்டை வெற்றிகரமாக நடத்தி, அவனும் கல்யாணம் செய்துகொண்டான்.

 காலப்போக்கில், பட்டதாரி செல்வியை ஒரு பொறியாளருக்கு மணமுடித்து, அவளுக்கும் புதுவாழ்வு தந்து, தலை நிமிர்ந்தபோது, ஜெயாவுக்கு வயது அறுபத்தைந்து! குசேலனுக்கு எழுபத்தைந்து!

 மனைவி தலை நிமிர்வதற்காகவே காத்திருந்ததுபோல, கணவன் குசேலன் தலையை சாய்த்தான்!

 அறுபத்தைந்து வயது விதவையால் உழைக்கவும் முடியவில்லை, தனியாக வசிக்கவும் தெரியவில்லை!

 ரகுவிடம் சென்றாள். அவன் மனைவி கல்பனா சொன்ன பதில் நியாயமாகத் தெரிந்தது!

 " நான் ஆபீஸிலே வேலை பார்க்கிறவ! அதிலே கிடைக்கிற வருமானம், குடும்பச் செலவுக்கு தேவையாக இருக்கு. தினமும் காலையிலே ஒன்பது மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பினால், மாலையில் வீடு திரும்ப ஏழுமணி ஆகுது! வீட்டிலே இருக்கிற நேரத்திலே, சமையல் இதர வேலைகளைத் தவிர, படுத்த படுக்கையாக நோயாளியாக உள்ள என் அப்பாவையும் கவனிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.