(Reading time: 20 - 40 minutes)

 அந்த எரிச்சல், அவன் வீட்டுக்கு வந்ததும், ஜெயாவின்மீது திரும்பும். நாளடைவில், அவளை அடிக்கவும் உதைக்கவும் தயங்கமாட்டான்.

 ஜெயாவுக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை!

 இதுவரை அவள்மீது மற்றவர்கள் கொட்டித் தீர்த்த வெறுப்புக்கு, அவள் எந்தவித பொறுப்பும் இல்லை!

 பிறரின் இழப்போ, மன மாறுதலோ, நிரபராதியான தன்னை குத்திக் குதறி கீழே தள்ளி, புழுப்போல் துடிக்கவைக்கிறதே, இந்தப் பிறவியில் தவறேதும் செய்யவில்லையே, போன பிறவியிலும் இந்த அளவுக்கு பாபம் செய்திருக்க வழியில்லையே, ஒருவேளை அடுத்த பிறவியில் தான் செய்யப் போகிற பாபத்துக்கும் சேர்த்து கடவுள் தண்டிக்கிறாரோ என நெஞ்சு வெடிக்க, அழுதாள்.

 ஒரு வருஷமா, இரண்டா?

 ஜெயாவுக்கு, கணவன் விருப்பப்படியே, பெண் குழந்தை பிறந்தும், அந்தப் பெண் குழந்தையை கணவனும், பிள்ளைகள் ரகுவும் பிரபுவும், மறைந்துபோன சுந்தரியாகவே நினைத்து போற்றினாலும், மூவருமே இன்னமும் ஜெயாவை மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை.

 இந்த வெறுப்பு, ஒருவேளை, தொற்றுவியாதியோ?

 தான் பெற்ற மகள் செல்வியும் மற்ற மூவருடன் சேர்ந்துகொண்டு, பெற்ற தாயையே உதாசீனப்படுத்தியதும், பரிகாசம் செய்ததும், 'ஒட்டகத்தின்மேல் ஏற்றப்பட்ட சுமையின் கடைசி புல்'லைப்போல, ஜெயா முற்றிலும் உருக்குலைந்தாள்.

 அதற்காக, விதி அவள்மீது பரிதாபம் கொண்டு சாட்டையால் சுழற்றி அடிப்பதை நிறுத்தவில்லை!

 தனது அறுபதாவது வயதில் குசேலன் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, வருமானம் மிகவும் குறைந்து, பொருளாதார நெருக்கடி குடும்பத்தை மிகவும் பாதித்தது.

 முப்பத்திரண்டு வயது ரகுவும் அதிகம் படிக்காமல், மெகானிக் வேலை செய்து தன் செலவுக்கு மட்டும் சம்பாதித்தான்.

 இருபத்தெட்டு வயது பிரபு, படிப்பில் சூட்டிகையாயிருந்தும், காலேஜ் அனுப்ப வசதியில்லை. அதனால், ஒரு நகைக்கடையில் சிப்பந்தியாக சேர்ந்து சம்பாதிக்கிற பணத்தில்தான், குடும்பம் சமாளித்தது!

 பதினைந்து வயது குமரி செல்வி, பத்தாம் வகுப்பு படிக்கிறாள். நிறைய மதிப்பெண் பெறுகிறாள். அவளுக்கு கல்லூரியில் சேர்ந்து மேலே படிக்க கொள்ளை ஆசை! பணத்துக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.