(Reading time: 12 - 24 minutes)

எடுக்கணும்!

 பெற்றவங்கள் மீதுள்ள பாசம், உறவு, உன் முடிவை எந்த அளவும் பாதிக்கக்கூடாது! இது எங்க வாழ்விலே நாங்க கற்றுக்கொண்ட பாடம்!"

 " ஆமாம் பத்மா! அப்பா சொல்வதை உன் தலைப்பிலே முடிந்து வைத்துக்கொள்! பெற்றவங்க கண்ணீர் விட்டு உன் மனசை கலைக்க முயற்சிப்பாங்க! ஏதேதோ அவங்க அனுபவித்ததைச் சொல்லி, உன் முடிவை மாற்ற முயற்சிப்பாங்க! மற்ற உறவுக்காரங்களை அழைத்துவந்து உபதேசிக்கச்சொல்வாங்க! எப்படியாவது உன் திட்டங்களை குலைக்கப் பார்ப்பாங்க........

 இதெல்லாம், கெட்ட எண்ணத்தோட செய்யலை, அவங்க! அவங்க அடிப்படையா செய்கிற தவறு, தங்களுக்குத்தான் உலக விவகாரம் அதிகம் தெரியும், அவங்க பெற்ற குழந்தைகளுக்கு அனுபவம் போதாது, புத்தகப் படிப்பும், நண்பர்களின் எண்ணங்களால் ஏற்படும் பாதிப்பும் அவர்களை தவறான முடிவை எடுக்கத் தூண்டும் என பெற்றவங்க உறுதியா நம்பறாங்க!

 அது உண்மையில்லைங்கிறதை புரிந்துகொள்வதற்குள், அவர்கள் ஆயுள் முடிந்துவிடும். பாதிப்பு யாருக்கு? பிள்ளைங்களுக்குத்தானே! அதனாலே, உன் ஆசை, உன் லட்சியம், உன் கொள்கை, வெற்றி பெற, நீ மனநிறைவோட, வாழ, இனி உன் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நீயே முடிவெடு!"

 " அப்பா! நீ வேற ஏதாவது சொல்ல நினைக்கிறியா?"

 " பத்மா! நானும் அம்மாவும் ஒரு விஷயத்திலே ரொம்ப தீவிரமாக இருக்கிறோம், அது என்னன்னா, நாங்கள் யதேச்சையாக, ஏதோ ஒரு விஷயத்தில், பொதுப்படையாக அபிப்பிராயம் சொன்னால்கூட, அதை நீ வேதவாக்காக எடுத்துக்கொண்டு, மற்ற எல்லா விஷயங்களிலும் பொருத்திப் பார்க்கக்கூடாது என்பதனால், நீ கேட்கிற ஏதாவது சந்தேகத்துக்கு எங்களுக்கு தெரிந்ததை சொல்வோமே தவிர, வேறெதுவும் நாங்களாக முன்வந்து பேசமாட்டோம்.

 உதாரணமாக, நீ மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டால், என்ன படிப்பு படிக்கணும், எங்கு படிக்கணும், எத்தனை வருஷம் படிக்கணும், எதுவும் நாங்க சொல்லமாட்டோம்.

நீயே தேவையான விவரங்களை சேகரித்து, ஆராய்ந்து பார்த்து, முடிவு எடு! பணம் தேவைப்படுவதை முன்கூட்டியே சொன்னால், எங்களுக்கு சௌகரியமாயிருக்கும்."

 பத்மா சிறிதுநேரம் ஆழ்ந்த சிந்தனையில் மௌனமாக இருந்துவிட்டு,

"சரிப்பா! சரிம்மா! நானே இனி முடிவு எடுக்கிறேன். ஆனால், ஒரு எச்சரிக்கை! இன்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.