(Reading time: 12 - 24 minutes)

நீங்கள் காட்டுகிற தீவிரம் தொடர்ந்து இதே அளவு இருக்கும் என சொல்ல முடியாது. கொஞ்ச காலத்துக்குப் பின், நான் எடுக்கிற ஏதாவது ஒரு முடிவு தவறுபோல தோன்றி, அந்தச் சூழ்நிலையில், உங்களிடம் தெரிவிக்காமலே முடிவு எடுத்துவிட்டேனே என வருத்தப் படக் கூடாது!"

 " ஷ்யூர்! புரிகிறது, அப்படி வருத்தப்படவேண்டிய சூழ்நிலை வரவே வராது, நீ புத்திசாலி!"

 அன்றைய பொழுது அத்துடன் முடிந்தது!

 பத்மாவுக்கு அன்றிரவு உறக்கம் பறிபோயிற்று, அவள் மனதை வாட்டியெடுத்தது, பெற்றோரின் பேச்சு!

 அவர்களால் மறக்கமுடியாத அளவுக்கு, அவர்களை பெற்றோர், வாழ்வின் முக்கியமான திருப்புமுனையான விஷயத்தில், வற்புறுத்தி விருப்பமில்லாத செயலை செய்யச் சொல்லியிருக்க வேண்டும்!

 அதிசயம் என்னவெனில், அப்பா, அம்மா இருவருக்குமே அதே அனுபவம் ஏற்பட்டதுதான்.

 இல்லையெனில், இருவரும் கோரஸாக, இப்படி தனக்கு பூரண விடுதலை தந்திருக்க மாட்டார்கள்.

 தங்களின் ஒரே மகள் ஏதேனும் தவறான முடிவு எடுத்துவிட்டால், அவள் வாழ்வே சீரழிந்து போகுமே எனும் பயத்தைவிட, தங்களுக்கு ஏற்பட்ட வாழ்க்கைநாசம் மகளுக்கு ஏற்படக்கூடாது எனும் ஒருமுனைப்பட்ட வைராக்கியமே மிஞ்சியிருந்தது.

 அப்படி என்ன நடந்திருக்கும், இருவருக்கும்? எனும் வினா, பத்மாவை உலுக்கி எடுத்தது.

 பெற்றோரோ அதை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்கள். பின், எப்படி தெரிந்து கொள்வது?

 உறவினர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாமா?

 அப்படி தெரிந்துகொண்ட விஷயம், தனது நிம்மதியையும் சேர்த்து பறித்துக் கொண்டுவிட்டால், அந்த நிலமை இதைவிட மோசமாயிற்றே!

 இரண்டாவது, தான் உறவினர்களிடமிருந்து ரகசியத்தை தெரிந்து கொண்டது பெற்றோருக்கு பின்பு தெரிந்துவிட்டால், அது அவர்களை இன்னும் அதிகமாக பாதிக்குமே!

 இப்படி இரவு பூராவும் மனப் போராட்டத்தில் உறக்கத்தை இழந்ததால், விடியற்காலையில் அசந்து உறங்கியவள் விழித்து எழும்போது, காலை மணி பத்து!

 அலறிப் புடைத்து எழுந்து, " ஏம்மா! என்னை எழுப்பலே? மணி பத்து வரையிலும் என்றைக்காவது நான் தூங்கியிருக்கேனா?"

 " பத்மா! ஒருவேளை இன்றிலிருந்து லேட்டாக எழுந்திருப்பதென நீ முடிவு எடுத்திருக்கலாமோ என நானும் அப்பாவும் நினைத்ததனால், எழுப்பவில்லை, இனி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.